Search This SAKRITEASE Blog

Wednesday, June 10, 2020

Theist Kanchi Atheist


ஆத்திகம் தொழுத 
நாத்திகம் வளர்த்த காஞ்சி 

காஞ்சியில் கஞ்சி


கரையேறிய வேட்டிகள்

கரையில்லா காவி கொண்ட
குடந்தை குளவிளக்கு
கரைந்தும் போகுமோ என்றே
அஞ்சும் அளவிற்கு
வாயாடிகள் வலம் வந்து
அரற்றிய அண்ணனின் தம்பிகளும்

அஞ்சற்க என்று அரவணைக்க


வந்தணன் தவமுனிவன்

நச்சுபுகையாய் நாத்திகம் பரவ
நஞ்சுண்ட நமச்சிவமாய்
காமாட்சி அடி அமர்ந்து
அருளாசி வழங்கினான்

காசிற்காக விலை போன
கடைக்காரன் விற்கவும்
துணிந்தனன் நம் மரபை
வெறும் கைக்குட்சிக்கெண்டு
வறும் காலால் நடந்தே
நாற்திசையும் நன்மையளித்தே
திருத்தவே முடியாத கட்சியிலும்
திருநீரிட்டு முத்தையாவை
கண்ணனுக்கு தாசனாக்கி கவிதை
கடல் விரித்தனன்

நகரங்களிலெல்லாம் காஞ்சி 1
நிலைமாறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவோர் கூடா()
நடிப்பில் நிலைகுலைந்து நிற்க
ஏகாம்பரமே குடையாய் கொண்டு
ஏகம் அன்றி இரண்டில்லை என்ற
சங்கரனின் வாக்கையே
வாழ்ந்து காட்டினன்

காமக் களியாட்டம்
கட்சி வெறியாட்டம்
நிதிக்கு முன்னிலை
நீதிக்கு இழிநிலை
தமிழகமே தறுதலை
தருமத்திற்கு சோதனை
தலைகுனிந்து துணிவிழந்து
நினைவிழந்து போதையில்
பேதையரும் தலைவிரிக்க
ஊழலின் ஊழ்வினையால்
உரமிழந்த தென்னாட்டில்
கனறும் கனலாய்
அன்பே கலமாய்
அருட்பெரும் சுடரே
மூழ்கும் கடலிலும்
கரையேற்றும் தவமுனிவன்
தரித்த தண்டமே
தவிக்கும் மனதில்
தருவாய் படர்வாய்
தவமாய் அமர்வாய்
சந்திரசேகரா




யற்கையின் அற்புதமே

நன்மையும் தீமையையும்
ஒருசேர பிறந்திட
இப்பறமும் அப்புறமும்
முப்புறமும் எரிசெய்த

காஞ்சிபுர(ற)த்திலும்


இறைவனின் திருவிளையாட்டில்




மனிதம் உயர்ந்திட

மானுடம் தழைத்திட
நிலம் என்னும் பூதத்தில் 2
நீ நடந்ததும்
நாடகமென்று
நாளை உரைப்பாரோ

நடப்பதெல்லாம் நாடகம்
நடத்தும் இறைவனே
நடந்ததே நமச்சிவாயம்
அண்ணலும் நீயே அண்ணனும் நீயே
அம்பியும் நீயே எம்பியும் உயர
வாழும் உயிர்க்கெல்லாம்
வரமளிப்பாயே.


சகிருட்டிஸ்

விளக்கம் :
5. ஜுன்.2020 – வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் காஞ்சியில் வாழ்ந்த வாழ்விக்கின்ற மகான் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிறந்த நாளில் அவர் எத்தகைய காலக்கட்டத்தில் அவர்களின் முன்னோர்கள் கும்பகோணத்தில் நடத்தி வந்த மடத்தினை காஞ்சிபுரத்திற்கு மாற்றினார்கள் என்று சிந்தனை ஓடியதால் எழுந்தன வரிகள்.
இயற்கை என்னும் இறைவன் எப்படி ஒரே சமயத்தில் எதிர் எதிர் திசையில் பயணிக்கும் இரு வேறு ஆற்றலை நடக்கவிட்டு நாடகமாடினான் என்று வியந்து எழுதியதே இந்த பாடல்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் மிகப் பெரிய காரணம் குடிக் கொண்டுள்ளது.  உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படியாகவே யாம் இந்த நிகழ்வுகளை பார்க்கிறோம்.  இதில் சரி தவறு என்ற நிலைபாடும் இல்லை. இயற்கையில் முரணும் ஒரு அங்கமே என்று தோன்றுகிறது.

குறிப்பு :
1. சீன யாத்திரிகர் ஹுவான் சுவாங் தான் பார்த்த இந்திய நகரங்களிலேயே காஞ்சி தான் தலை சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.  பல்லவ பேரரசின் தலை நகரமாக காஞ்சிபுரம் விளங்கியது .

2. சிவனின் பஞ்சபூத தலங்களுள் நிலத்திற்கான தலமாக போற்றப்படுகின்ற கச்சி ஏகம்பன் என்று சிவனடியாரால் அன்போடு அழைக்கப்படும் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளதை குறிப்பிட்டுள்ளோம்.





No comments:

Post a Comment

Translate

Contact Form

Name

Email *

Message *