Search This SAKRITEASE Blog

Showing posts with label ஆட்டுக்குட்டி. Show all posts
Showing posts with label ஆட்டுக்குட்டி. Show all posts

Thursday, June 15, 2023

A Goat is roaring in TN தமிழ்நாட்டுல ஆடு உறுமுதாம்

 

அதெல்லாம் ஒரு காலம் !!! அது காமராஜர் இருந்த வரை சாத்தியம் !!!
இந்த வாசகங்கள் காமராஜர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த மக்களின் அடிக்கடி எழும் மனக் குமுறல். அதன் பிறகு அமைந்த இரண்டு கட்சிகளின் ஆட்சிகளையும் காமராஜரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால் "ஒரே குட்டையில் ஊறின மட்டை".

கடந்த 56 வருடங்களாக வெறும் மேடைக்கு மேடை தேர்தலுக்கு தேர்தல் ஊழல் சேற்றை ஒருவருக்கு வாரி இறைப்பது நடந்தது. சிலரின் ஊழல் மட்டுமே நிருபிக்கப்பட்டு சிலருக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. ஆனால் மக்களின் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் ஊழல் இரண்டறவே கலந்துவிட்டது. ஊழல், இலஞ்சம் இல்லாமலே ஒரு வேலையும் சாத்தியம் இல்லை என்ற மனநிலைக்கு தமிழகம் சென்று விட்டது. "ஊழல் தவறு" என்று பேசுபவர்களும், நினைப்பவர்களும் யாராவது வந்து இந்த ஊழல் வழிமுறைகளை மாற்ற மாட்டார்களா என்ற ஏக்கம் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. சினிமாவிலாவது நல்லது செய்கிறார்களே என்று நம்பி சில நடிகர்கள் பின்னாடியும் போய் பார்த்தும் அதுவும் நடிப்பு தான் என்று மிகுந்த விரக்தி அடைந்திருந்த நேரம் - ஒரு ஒளிக் கீற்று மிக மெல்லியதாக பரவ தொடங்கியுள்ளது. அந்த ஒளி பேரொளியாகுமா என்பது போக போக தெரியும். அந்த ஒளி ஊழல், இலஞ்சம் என்ற இருள்களை நீக்குமா என்ற ஆர்வத்தை கடந்த ஒரு வருடமாக திரு. கு. அண்ணாமலை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த இளைஞர் ஒரு விவசாயி , ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து சிறப்பாக பணியாற்றியுள்ளார், மக்களின் அபிமானத்தை பெற்ற "சிங்கமாக" உள்ளார். தனது அரசு வேலையையும் துறந்து ஒரு அரசியல் கட்சியின் மாநில தலைவராக உள்ளார். அந்த கட்சி மிக தூயமையான கட்சியா என்றால் நிச்சயம் இல்லை. அந்த கட்சியில் எல்லா கட்சிகளிலும் உள்ளது போல் அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும், புகழிற்காகவும் பலரும் அந்த கட்சியில் உள்ளனர். 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு சாலையில் உள்ள பள்ளமும் அனைத்து துறைகளில் உள்ள ஊழல்களை பறைசாற்றுகின்றன. மக்களில் பலரும் இந்த ஊழல்களை தடுக்க முடியாது என்று தளர்வடைந்து அந்த ஊழலில் ஒரு சிறு தொகையை கையூட்டாக  ஐந்து வருடத்திற்கு ஒரு முறை பெற்றுக் கொண்டு இந்த ஊழல்களை வளரவிட்டு வருகிறோம்.

இந்த மனிதரால் ஊழலை ஒழிக்க முடியுமா ?? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இதுக்கெல்லாம் நம்பிக்கை அளிப்பதே இந்த நபரை இரண்டு கழகத்தினரும் போட்டிக் போட்டி கொண்டு தாக்குவதே அண்ணாமலை மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இது வரை இருந்த எந்த பா.ஜ.க வின் மாநில தலைவரையும் இந்த இரண்டு கழகங்கள் இணைந்து தாக்கியதே இல்லை. அப்போ இந்த நபரிடம் ஏதோ ஒன்று சரியாக இருக்கிறது. இவரது இலக்கை கண்டு பல அரசியல் தலைவர்களுக்கும் அச்சம் ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு கழங்களை நேரடியாக ஒரு கோட்டில் எதிர்க்க துணிவதற்காக இவரை ஆதரிக்கலாம். 

குமாரசாமி காமராஜரை நம்பினோம்
குப்புசாமி அண்ணாமலையை நம்பலாம்

நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு

இந்த நபரை ஆட்டுக் குட்டி என்றே இவரது எதிர் கட்சியினர் கிண்டலடிக்கின்றனர். அதனால் "இந்த ஆட்டுக் குட்டி முட்டை போடும்" என்ற எமது கட்டுரையையும் படித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.


https://sakritease.blogspot.com/2022/09/this-goat-will-hatch-egg.html





Friday, September 2, 2022

This Goat will hatch a Egg

 இந்த ஆட்டுக்குட்டி கண்டிப்பாக  முட்டை போடும் 


கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டசபையில் பேசிய அதிமுக வின் மூத்த தலைவர், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் நீட் தேர்வு குறித்து பேசும் போது "இது திராவிட மண், இங்கு திராவிட இயக்கத்தை தவிர வேறு யாரும் ஆள முடியாது " என்று கூறியதாக செய்தி வந்தது. 


1967 முதல் திமுக- அதிமுக வின் கூட்டணி ஆட்சியே நடைபெற்று கொண்டிருக்கும் போது 2022 ல் யார் அது புதிதாக கடந்த 55 ஆண்டுகளாக கட்டிக் காக்கப்பட்ட புனித தன்மையை புரட்டி போடுகிறார்கள் என்று பார்த்தால். ஒன்று ஆளுநர் திரு ரவி மற்றொருவர் தமிழக பா.ஜ.க.தலைவர் திரு. அண்ணாமலை. ஆளுநர் நேரடியாக அரசியல் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அதனால் இந்த மண்ணை சேதப்படுத்த துணிந்து இருப்பது திரு. அண்ணாமலை என்று நினைக்க தோன்றுகிறது. 

(இந்த கட்டுரையையும் 50 வருட கூட்டணிபடிச்சுப் பாருங்க )

 1971ல் அதிமுக உதயமான பின் அன்றைய தேசிய கட்சியான காங்கிரஸ் பிளவு கண்டு அந்த சூழ்நிலையில் தேசிய கட்சிக்கு எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவிற்கு திமுகவும் அதிமுகவும் தங்களை தகைவமைத்துக் கொண்டு தேசிய கட்சிகளை ஒரு தேவையில்லாத ஒட்டுண்ணிகளை போல் நடத்தி வருகின்றன.

இதில் கடந்த பிப்ரவரியில் திரு. ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசும் போது " தமிழகத்தில் பாஜக வால் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது " என்று ஆரூடம் கூறினார். என்னடா ! நம்ப ஆள் கிரவுண்டுக்கு வெளியில் போய் நின்று கொண்டு சிக்ஸ் அடிக்கிறாரே என்று பார்த்தால் இங்கு பாஜக நகர உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டி என்று செய்தி வருகிறது. அதிலும் ஆளும் கட்சியின் அனைத்து சக்திகளையும் மீறி சில இடங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றும் விட்டனர். 





இப்பொழுது திரு. செங்கோட்டையனின் கவலை பற்றி படிக்கும் போது மிக மெதுவாக அதிமுக - திமுக என்ற எதிர் எதிர் அணி என்ற பிம்பம் உடைந்து கர்மவீரரின் தொலை நோக்கு பார்வையில் கூறியது  போல் என்றுமே இவை இரண்டுமே "ஒரே குட்டையில் ஊரிய மட்டை".  ஆனால் இது நாள் வரை இரு கட்சிகளும் அடித்துக் கொண்டது போன்ற பிம்பத்தை உருவாக்கி வந்தன.  இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாவது, இங்கு ஒரு மாற்று சக்தி முளைக்க தொடங்கியுள்ளதின் அடையாளமாகவே பார்க்க தோன்றுகிறது.


இந்த பெயர்க முடியாத அண்ணாவின் மண்ணை தன் சிறு கடப்பாறையால் ஒரு புது "அண்ணா" ( தன்னை அப்படி தான் இந்த "ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்" துறையை செய்த முன்னாள் அதிகாரி பதிகிறார் ) எங்கோ ஒரு கீறலை போட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

ஆக பாஜகவின் மாநில தலைவருக்கு ஒரு தேசிய கட்சியின் அகில இந்திய பதவியில் இருக்க விரும்பாத தலைவரும், அதிமுக சீனியாரிட்டியில் இருந்தும் தலைமைக்கு வராத ஒரு தலைவரும் அரசியலுக்கு வந்து ஒராண்டு கூட ஆகாத ஒருவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்திருப்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கும் பலருக்கும் நல்ல செய்தி.  ஒரு போலிஸ்காரர், கழக "நோ எண்டரி" யில் நுழைந்து விட்டார் என்று குமுற துவங்கியுள்ளது.  காமராஜரை "அண்டங்காக்கை" யாக எள்ளி நகையாடியவர்களுக்கு இந்த கருத்த தோல் நிறத்தில், அண்டங்காக்கும் அண்ணாமலையாரின் பெயர் உடையவரை பார்த்து எரி தழல்கள் இரண்டு கழகங்களிடமிருந்து ஓடி வர துவங்கி விட்டது, நீண்ட நாட்களாக தமிழக மக்களை "வெறும்  சோற்றாலடித்த / சாராயத்தால் நொடித்த பிண்டங்களாக" பார்க்கும் கழக மட்டைகளுக்கு உள்ளுக்குள் சிவப்பு விளக்குகள் எறிய தொடங்கியது போல் அலார்ம் அடிக்கிறது.

இது தமிழகத்திற்கு நல்ல சகுனம்.  இதற்குள் இந்த அண்ணாமலையாரின் அடி முதல் முடி வரை சேறு பூச இடுப்பிற்கு கிழே மூளை கொண்டு இயங்கும் கழகங்கள், அவர்களின் ஊது குழல்கள் இவரை பற்றி பல அவதூறுகளை அடுக்கலாம். பெண்களை பெரிதும் மதித்த காமராஜரை கூட தரக் குறைவாக விமர்சித்தவர்கள் இவரையும் விமர்சிக்கலாம். 

இது தவிர கழகங்களின் "ஸ்லிப்பர் செல்" களாக இவரது கட்சியிலேயே சிலர் இவருக்கு குடைச்சல் கொடுக்கலாம். பல அவதூறுகளை கிளப்பிவிடலாம். ஆனால் இந்த கட்சியின் ஆளுமை தமிழகத்தின் புது நம்பிக்கைக்கு காங்கிரஸ் போல் மாநில தலைமையின் முக்கியத்துவத்தை குறைக்காமல், அண்ணமலையாரின் அரசியல் பயணத்தை பல வருடங்கள் தொடரச் செய்து தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் வளர ஒரு திறமையான இளைஞருக்கு  அதிக வாய்பளிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு ஆடு ஒன்று புலி போல் வேடமிட்டு வந்து   "புலி வருது புலி வருது "  என்று தமிழக மக்கள்,  ஒரு நேர் மறை அரசியல் உருவாகும் என்ற நீண்ட நாள் ஆசையில்  ஒரு பிம்பத்தை நம்ப தொடங்கி அதன் கிட்ட போன பின் " அது ஆடு போல்" கத்தியது .



அதனால் இந்த நிஜ போலிஸ் அதிகாரி, விவசாயி, இளைஞருக்கு, தமிழகத்தில் நல்ல நேர்மையான அரசியல் நடத்த வாய்ப்பு வந்துள்ளது. இவரை போன்ற ஒருவர் அரசியலுக்கு வருவதை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில்  ஆடு வளர்ப்பிலும் ஈடுபடும் இவரை "ஆடு" என்று ஏளனமாக கிண்டலடிக்கிறார்கள். ஆனால் சாமான்ய குடிமக்களுக்கு அடிதட்டிலிருந்து மேலெழுந்து வருபவர்களை பிடிக்க  ஆரம்பித்து விட்டது.  திரு மோதியை "டீக்கடைகாரர்" என்று திரு. மணி சங்கர அய்யர் கிண்டலடிக்க போக அதுவே நாட்டில் உள்ள பல டீக்கடைகளிலும் விவாத பொருளாகி, பத்திரிகையாளர் திரு சோ கூறியது போல அந்த ஏளன பேச்சு ஏணிப்படி போட்டுக் கொடுத்தது. 

இப்போது இவரை "ஆட்டுக்குட்டி" என்று கிண்டலடிக்க போக கிராமங்களில் ஆடு மேய்ப்பவர்கள் கூட இவரை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால் திரு .அண்ணாமலை !!! உங்களை ஏசுபவர்களை திரும்பி ஏசவும் வேண்டாம் ஏசு போல்  காட்டவும் வேண்டாம் , வீசப்படும் கற்களின் மீது ஏறி நின்றால் போதும். உங்களுக்கு  முன்னே  இருந்த  திருமதி. தமிழிசைக்கோ, திரு .முருகனுக்கோ  கிடைக்காத எதிர்ப்பை நீங்கள் சம்பாதித்துள்ளீர்கள். ஒரு டாக்டரால் முடியாததை ஒரு வக்கீலால் முடியாததை, ஒரு இன்ஜினீயர் செய்து காட்ட வேண்டும். 

தமிழகமே சாராய வியாபாரத்தின் பிடியில் இருந்து மீளவே முடியாது என்ற அவநம்பிக்கையில் அலறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஆட்டுக்கு குட்டி முட்டை இட்டால் தான்  இந்த அவல நிலை மாறும் என்று மக்களின்  உள்ள குமுறலை உங்களால்  மட்டுமே மாற்ற முடியும்  என்ற எண்ணத்தை உங்களை எதிர்பவர்களே ஏற்படுத்தி வருகிறார்கள்.  இந்த ஆட்டு குட்டி முட்டை தான்  வாங்கும் என்று வாய் பேசினாலும் இந்த "ஆட்டுக்குட்டி முட்டை  போட்டு விடும்" என்ற நம்பிக்கை கழகங்களின் அறிக்கைகளில் தெளிவாக தெரிகிறது. 

சகிருட்டிஸ்
Sakritease

Translate

Contact Form

Name

Email *

Message *