Monday, May 31, 2021

உங்க சிகிச்சைக்கு துப்பு இருக்கா ??




 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

ஒரு மருத்துவர் எப்படி மருத்துவம் பார்க்க வேண்டும் என்று வள்ளுவர் வாக்கு.  நோயாளியின் நாடியை ஒரு நிமிடம் தொட்டு பார்த்தவுடன் ஒரு நல்ல மருத்துவருக்கு நோய் என்ன ? அதற்கு மூலக் காரணம்  என்ன ? என்று தெரிய வேண்டும்.

இயந்திரங்களைக் கொண்டு ஒரு யூக தோராயமாக அறிகுறிகளை களைய மட்டும் மருந்துகள் கொடுப்பது நல்ல மருத்துவமல்ல.

தமிழ்நாட்டில் பொதிகை மலைகளில் தவ வலிமையினால் பல மூலிகைகளின் தன்மையை உணர்ந்து அதன் மூலம் மனித உடலின், மனதின் நோய்களை தீர்க்க அகத்திய மாமுனிவர் முதற் கொண்டு அவரின் சீடர்களான பல சித்தர்களால் வடிவமைக்கப்பட்டது சித்த மருத்துவம். 

பொதிகை மலையின் மறுபுறம் மலைகளில் வசித்த முனிவர் பரசுராமர் தொடங்கி பல்வேறு தவசீலர்கள் இயற்கையின் வரமான மூலிகளை கண்டறிந்து கொடுத்தது ஆயுர்வேதம்.

இந்திய மருத்துவமுறைகள் அனைத்துமே பஞ்சபூதங்களின் அடிப்படையிலேயே மனித உடலின் ஆரோக்கியத்தை அளக்கின்றன. 
பாரம்பரிய தொடு சிகிச்சை, இயற்கை மருத்துவம், யோகா, வர்மம் - இந்த முறைகளும் நிலம், நீர், காற்று, நெருப்பு , ஆகாய தன்மைகளை உடலளவிலும் மனதளவிலும் ஆராய்ந்தே சிகிச்சையை பரிந்துரைக்கின்றன.

நவீன சிகிச்சை முறை என்ற பெயரில் ஒவ்வொரு உறுப்புக்கு என்று  ஒவ்வொரு மருத்துவர் என்று  மனித உடலை பிரித்து மேய்ந்து மனிதரை காசு கொட்டும் இயந்திரங்களாக இந்திய பாரம்பரிய மருத்துமுறைகள் பார்ப்பதில்லை. 

ஒரு மனிதன் என்பவனை உடல், மனம் & ஆன்மா என்ற மூன்று நிலைகளில் பிரிக்கிறது. இதில் ஆன்மா என்ற தன்மைக்கு எந்தவித பாதிப்பும் வர வாய்ப்பில்லை. உடலுக்கும் மனதிற்குமே நோய் வர வாய்ப்புள்ளது. அதிலும் உடலுக்கு தன்னை தானே குணபடுத்திக் கொள்ளும் தன்மையை இயற்கை வழங்கி உள்ளது. ஆனால் மனம் என்ற சொல் தான் மனிதம் என்ற சொல்லின் மூலச் சொல்லாகும். 

மனித உடல் அதிகமாக பலவீனமடைவது மனத்தினால் தான். நோயை பற்றிய பயம் முக்கியமாக அதன் விளைவுகளை பற்றிய கவலை.  இந்தியாவில் அதிகமாக பாம்புக்கடியால் இறப்பவர்கள் பாம்பு கடித்தாலே விஷம் என்ற நம்பிக்கையினாலே மடிகின்றனர். உண்மையில் ஆறு வகை பாம்புகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய தன்மை உள்ளது. மற்ற நூறு வகையான பாம்புகளுக்கு எந்தவிதமான விஷ தன்மையும் இருப்பதில்லை.  நம்மில் பலர் தங்களை வாழ்நாள் முழுமைக்கும் நோயாளியாக நினைத்துக் கொண்டு தானும் கஷ்டப்பட்டு கவனிப்பவரையும் அல்லாட வைக்கிறார்கள். 

இந்த கரோனா பெருந்தொற்றிலும் பலரும் பயம் காரணமாகவே இறக்கின்றனர். 




யோகா என்ற இயற்கை வாழ்வியலை பதஞ்சலி முதற்கொண்டு பல முனிவர்கள் இயற்கையை உற்று நோக்கி விலங்குகளின் வாழ்க்கைமுறையை ஆராய்ந்து பல ஆசன முறைகளை உருவாக்கி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தார்கள்.  இன்று நவீன ஆராய்ச்சியாளர்கள் பல்லாயிரக்காண கோடிகள் பணத்தை கொட்டி ஆராய்ச்சி செய்து மருந்துகளை பின் விளைவுகளை முழுவதுமாக உணராமல் வெளியிடுகிறார்கள். ஆனால் நமது பாரம்பரிய விஞ்ஞானிகளான சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் இயற்கையை உற்று நோக்கி  அதன் நன்மை தீமைகளை தங்கள் உள்ளுணர்வாலும் பிரபஞ்ச தொடர்பாலும் மக்களுக்கு வழிக்காட்டினார்கள்.  பிராண வாயுவை மிதமாக அளவோடு பயன்படுத்தினால் வாழ்நாளை எப்படி நீட்டித்து வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டி வழிக்காட்டியுள்ளனர். 

பலவிதமான சிகிச்சை முறைகளை பற்றி பலருக்கும் "வாழும் கலை" "மனவளக்கலை" என்று எளிமையாக கொண்டு சேர்த்த  ஆசான் வேதாத்திரி மகரிஷி  சிகிச்சை முறைகளின் நுணுக்கங்களை விளக்கியுள்ளார்கள். 


ஆனால் இவ்வளவு அருமையான சிகிச்சை முறைகள் இருந்தும் மக்களை மனத்தை பயமுறுத்தும் முறை எதற்கு ????

நமது முன்னோர்கள் பல் துலக்க உப்பு , கரி பயன்படுத்தியதை ஆங்கிலேயர்கள் காலத்தில் கிண்டலடித்த வெளிநாட்டு நிறுவனங்கள் இன்று அவர்களே :
 "உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்கா . கரி இருக்கா "  என்று நமது பாரம்பரியத்தை நமக்கே விற்க தொடங்கிவிட்டார்கள். 
" எங்கள் டீயில் அதிமதுரம் இருக்கிறது" என்கிறார்கள்
வேத காலத்திலிருந்தே " எங்கள் காபியை" தான் குடித்தார்கள் என்று மக்கள் இப்பொழுது இயற்கையின் பக்கம் திரும்ப தொடங்கிவிட்டார்கள் என்று உணர்ந்த வியாபாரிகள். 

"இன்னும் கொஞ்சம் தான் மக்களே !!"  இயற்கைக்கு திரும்பும் பாதை மிக அருகில் தான் இருக்கிறது.  

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் "மக்கள் செக்கில் ஆட்டிய எண்ணை தான் வேண்டும் என்று கேட்டால் வியாபாரி உடனே நானும் செக்கெண்ணை தான் விற்கிறேன் என்று கடையை போடுவான் " என்றார்.  இன்று சென்னை மாநகரில் பல இடங்களில் ஓடாத மரசெக்கையாவது வைத்து தான் மரசெக்கு எண்ணைதான் விற்பதாக ஆரம்பித்துவிட்டார்கள்.

அதே போல் உணவுமுறையிலும் சிகிச்சை முறையிலும் நாம் பாரம்பரியத்தை நோக்கி திரும்பும் போது பண வியாபாரமாகிப் போன மருத்துவம் மாறிவிடும்.  மனிதர்களால் அற்பமாக ஐந்தறிவு கொண்டதாக பார்க்கப்படும் தெருவில் வசிக்கும் நாய்களே வயிறு அஜீரணம் என்று தெரிந்தால் அருகம் புல்லை தின்று வாந்தி எடுத்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து உடல் நலம் மீட்கும் தன்மையை இயற்கை இயல்பாகவே நாம் ஒவ்வொருவருக்குள்ளும் வைத்திருக்கிறது. 

"நாய்க்கே நாவடக்கம் இருக்கும் போது நமக்கும் இருக்க வேண்டாமா??? " 

" சூரிய வெளிச்சத்திற்கு பின் காக்காய்க்கு சோறு வைத்தால் காக்கைகள் சாப்பிடுவதில்லை " 

இந்த கரோனா மாதிரி கிருமி தொற்றுக்கும் நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளக் கூடிய முதல் சிகிச்சை " சூரிய ஒளிக் குளியல்" . காலை சூரியன் உங்கள் உடம்பில் படும்படி நில்லுங்கள் காற்றை நன்றாக சுவாசியுங்கள்.

( அதற்காக வெள்ளைகாரன் மாதிரி பேராசையோடு முழு உடம்பின் மீதும் சூரிய ஒளி பட வேண்டும் என்று கடற்கரைக்கு செல்ல வேண்டாம் )😂😂



சகிருட்டிஸ்






Translate

Contact Form

Name

Email *

Message *