ஸ்ரீசிங்கா தோத்தபய ராஜபக்சே
இன்றைய நிலையில் ஒரே ஒரு நாளைக்குத்தான் பெட்ரோல் இருப்பதாக இலங்கையின் புதுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக இலங்கையின் பொருளாதார நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இளவரசன் சித்தார்த்தன் போதி (அரச) மரத்தடியில் ஞான நிலையை தமிழ் மாதமான வைகாசி விசாகத்தில் முழு நிலவு நாளன்று (16.5.2022 ) அடைந்ததாக உலகம் முழுவதும் பௌத்தர்கள் இரண்டு நாட்கள் முன்னதாகத்தான் கொண்டாடினர். புத்த மதத்தை தழுவிய இலங்கை சிங்களவர்களால் இந்த பௌர்ணமியை மனதார கொண்டாட முடியவில்லை.
புத்தனின் அக விரிவாகத்தை உள்வாங்காமல் போன புத்தனை வணங்கும் சிங்களவர் உள் விரியாமல், ஆதிக்க வெள்ளை தோல் மயக்கத்தில் இன்றும் அடிமையாய் பிரித்தாளும் அயல் நாட்டு சதிகளில் சிக்கி சிங்களர், தமிழர், இஸ்லாமியர் என்று பன்முனை வன்முறைக்கு உள்ளாகி பொருளாதாரம் சின்னாபின்னமாகி உள்ளது.
இலங்கை இந்தியாவின் கேரளாவை ஒத்த மலை சீதோஷண நிலையில் அற்புதமான பல மூலிகைகளை இயற்கையாகவே உற்பத்தி செய்து பல நாடுகளுக்கு இந்தியாவை போன்று மிளகு, ஏலக்காய் போன்ற அடர் காடுகளில் இயற்கையாய் வளர்ந்த தாவரங்கள் கொண்டு தனது பொருளாதாரத்தை சோழர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலங்களுக்கும் முற்பட்டு இயற்கையால் வார்த்தெடுக்கப்பட்ட சொர்க்க பூமியாக இருந்தது.
"ராஜராஜன்" பெயர் பொறித்த கல்வெட்டு |

மன்னராட்சியில் தன்னை நோக்கி மன்னர் பதவி வந்தும் அதனை மக்கள் மூலமாக குடவோலை முறையில் ஓட்டெடுப்பு நடத்தி தான் பதவி ஏற்பதை அந்த மாமன்னர் இராஜ இராஜ சோழர் மக்களாட்சி நடத்தி உறுதிபடுத்தியிருக்கிறார். அரசன் என்ற அகம்பாவம் துளியும் இன்றி அனைத்தும் இறைவன் என்னும் இயற்கையின் பேராற்றல், மக்கள் அதனை போற்றி அந்த இறைவனின் திருப்பணியாக மக்கள் சேவையாக வாழ்க்கையை இறைபணியாக வாழ வேண்டும் என்று தஞ்சையில் பெரூவுடையார் - சிவ பெருமானை - பிருமாண்டத்தை விளக்கும் விதமாக ஒரு பெரிய கோவிலை அமைத்து, அதனை மையமாக வைத்து நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்துள்ளார். அனைத்து செயல்களிலும் இறைவனின் பேராற்றலை ஒவ்வொரு கணமும் போற்றி வாழும்படியாக வாழ்ந்ததால் அந்த நாட்டில் மக்களிடம் பொறுப்புணர்வும் கலையுணர்வும் காவிரி ஆறு போல் பெருக்கெடுத்துள்ளது. பல நாடுகளுக்கும் தமிழர்களை விவசாயம் செய்ய, சொல்லிக் கொடுக்க ஆங்கிலேயர் தேர்ந்தெடுக்க இதுவே காரணம். இதனாலேயே இலங்கை, மலேசியா, மொரீசியஸ், தென்னாப்ரிக்கா என்ற பல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்வியல் பரவியுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் "மகிந்தனின்" எண்ணம் மாறவில்லை, இலங்கை இன்றும் நல்ல ஆட்சியாளர்களை தேடிக் கொண்டிருக்கிறது. அதே போல் ஆயிரம் ஆண்டுகளின் பின்பு மீண்டும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் "ராபர்ட் ஹான்சன்" ஆக பிறந்தாலும் இதே இலங்கைக்கு அந்த இராஜாதி இராஜன் தன் குருவான "யோகசுவாமி" என்ற சைவ சித்தாந்த குருவை நாடி வந்து சிவாய சுப்ரமணிய சுவாமியாக அவதாரமெடுத்து சைவ சித்தாந்தத்தை உலக மெங்கும் 50 இடங்களில் "இறைவனார் திருக்கோவில்" களை நிறுவி நல்லெண்ணங்களை பல கோடி மக்களின் மனத்தில் நிறுவி அதற்கு தலைமை பீடமாக ஒருங்கிணைந்த அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் குஹ்வாய் மடத்தினை நிறுவியுள்ளார்கள். அரசனாக பிறந்தாலும் எளிய தொண்டனாக தன்னிரகற்ற சேவை செய்வபர்களால் மட்டுமே இந்த பூமி வளம் பெரும். ( இவரை பற்றிய இணைய குறிப்பு Sivaya_Subramuniyaswami )
இதற்கு பொதுமக்களின் பார்வை,எண்ணம் குறைந்த கால லாபங்களை, இலவசங்களை நாடாமல் உயிரினங்களின் நீண்ட கால நன்மையை கருத்தில் கொண்டு வாழ்வோமானால் நம்மிடையே பிறக்கும் அரசியல்வாதிகளும் எண்ணங்களில் செயல்களில் விரிவார்கள்.
இன்றைய அரசியல்வாதிகள் பலரிடமும் காணப்படும் அனைத்து பேராசைகளும், அடாவடிகளும், அட்டூழியங்களும் சாதாரண குடிமக்கள் பலரிடம் நிறைந்திருக்கும் குணங்களின் பிரதிபலிப்பே. நாம் எல்லோரும் மக்கள் அனைவரும் நல்லவர்கள் போலவும் தலைவர்கள் அனைவரும் கெட்டவர்கள் போல சித்தரித்து கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். நம்மிடைய நன்மை மிகுந்தால் "இராஜ இராஜ"ர்கள் ஆட்சிக்கு வருவார்கள். நம்மிடையே தீமை மிகுந்தால் "மகிந்த"ர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள்.
அனைவரும் இறைவனின் (இயற்கையின்) அற்புத படைப்பு என்ற மன பக்குவ கண்டு தொலை நோக்கொடு அனைவரோடு பகிர்ந்து வாழும் உண்மையான நாகரீகத்திமான ஆப்பரிக்க பழங்குடி மக்களின் "யுபுந்து" என்ற தத்துவப்படி இயற்கையிடம் குறைவாக நுகர்ந்து அவரவர் வாழும் இடங்களில் இயற்கையாக விளையும் பொருட்களை உண்டு வாழ்ந்து மனிதப் பிறவி என்ற அற்புத வாழ்வை போற்றி இந்த உலகத்தில் அனைத்து உயிரினங்களும் எந்தவித பயமுமின்றி வாழ எல்லாம் வல்ல இயற்கையின் பேராற்றல் அருள் புரியட்டும்.
"உபுந்து" என்பது கிட்டத்தட்ட மகாகவி சுபரமணிய பாரதியார் கூறியதை போல் "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற கோட்பாடின்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது. இன்றைய நிலையில் நாம் நாகரீக உலகில் வாழ்வது போல் அலட்டிக் கொண்டு அநாகரீகமாக மலைகளை வெட்டி குவாரிகள் ஆக்கி மரங்களை வெட்டி சவப் பெட்டிகள் அலங்காரங்கள் செய்து வாழ்ந்து வருகிறோம். ஆப்பரிக்க காடுகளில் தான் இன்றும் சில நாகரீகமான மனிதர்கள் இயற்கையோடு மிகவும் ஒன்றி மிக குறைந்த நுகர்வு முறையில் இயற்கை அளிப்பதை மட்டும் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்க்கிறார்கள்.
தனக்காக வாழ்பவர் அனைவருமே "தோத்தபய" தான். அதுவரை இந்த பூமி ஒரு "ஸ்ரீசிங்கா" தான். மனிதம் என்பது மூழ்கிய "சிங்க்" (sink ) தான்.
சகிருட்டிஸ்
sakritease May 2022