Search This SAKRITEASE Blog

Friday, April 15, 2022

அண்ணாமலையை வாழ்த்திய ராகுல்


கடந்த சில நாட்களுக்கு முன் சட்டசபையில் பேசிய அதிமுக வின் மூத்த தலைவர், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் நீட் தேர்வு குறித்து பேசும் போது "இது திராவிட மண், இங்கு திராவிட இயக்கத்தை தவிர வேறு யாரும் ஆள முடியாது " என்று கூறியதாக செய்தி வந்தது. 


1967 முதல் திமுக- அதிமுக வின் கூட்டணி ஆட்சியே நடைபெற்று கொண்டிருக்கும் போது 2022 ல் யார் அது புதிதாக கடந்த 55 ஆண்டுகளாக கட்டிக் காக்கப்பட்ட புனித தன்மையை புரட்டி போடுகிறார்கள் என்று பார்த்தால். ஒன்று ஆளுநர் திரு ரவி மற்றொருவர் தமிழக பா.ஜ.க.தலைவர் திரு. அண்ணாமலை. ஆளுநர் நேரடியாக அரசியல் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அதனால் இந்த மண்ணை சேதப்படுத்த துணிந்து இருப்பது திரு. அண்ணாமலை என்று தோன்றுகிறது. 

(இந்த கட்டுரையையும் 50 வருட கூட்டணிபடிச்சுப் பாருங்க )

 1971ல் அதிமுக உதயமான பின் அன்றைய தேசிய கட்சியான காங்கிரஸ் பிளவு கண்டு அந்த சூழ்நிலையில் தேசிய கட்சிக்கு எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவிற்கு திமுகவும் அதிமுகவும் தங்களை தகைவமைத்துக் கொண்டு தேசிய கட்சிகளை ஒரு தேவையில்லாத ஒட்டுண்ணிகளை போல் நடத்தி வருகின்றன.

இதில் கடந்த பிப்ரவரியில் திரு. ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசும் போது " தமிழகத்தில் பாஜக வால் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது " என்று ஆரூடம் கூறினார். என்னடா ! நம்ப ஆள் கிரவுண்டுக்கு வெளியில் போய் நின்று கொண்டு சிக்ஸ் அடிக்கிறாரே என்று பார்த்தால் இங்கு பாஜக நகர உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டி என்று செய்தி வருகிறது. அதிலும் ஆளும் கட்சியின் அனைத்து சக்திகளையும் மீறி சில இடங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றும் விட்டனர். 





இப்பொழுது செங்கோட்டையனின் கவலை பற்றி படிக்கும் போது மிக மெதுவாக அதிமுக - திமுக என்ற எதிர் எதிர் அணி என்ற பிம்பம் உடைந்து கர்மவீரரின் தொலை நோக்கு பார்வையில் என்றுமே இவை இரண்டுமே "ஒரே குட்டையில் ஊரிய மட்டை".  ஆனால் இது நாள் வரை இரு கட்சிகளும் அடித்துக் கொண்டது போன்ற பிம்பத்தை உருவாக்கி வந்தன.  இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாவது, இங்கு ஒரு மாற்று சக்தி முளைக்க தொடங்கியுள்ளதின் அடையாளமாகவே பார்க்க தோன்றுகிறது.


இந்த பெயர்க முடியாத அண்ணாவின் மண்ணை தன் சிறு கடப்பாறையால் ஒரு புது "அண்ணா" ( தன்னை அப்படி தான் இந்த "ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்" துறையை செய்த முன்னாள் அதிகாரி பதிகிறார் ) எங்கோ ஒரு கீறலை போட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

ஆக பாஜகவின் மாநில தலைவருக்கு ஒரு தேசிய கட்சியின் அகில இந்திய பதவியில் இருக்க விரும்பாத தலைவரும், அதிமுக சீனியாரிட்டியில் இருந்தும் தலைமைக்கு வராத ஒரு தலைவரும் அரசியலுக்கு வந்து ஒராண்டு கூட ஆகாத ஒருவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்திருப்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கும் பலருக்கும் நல்ல செய்தி.  ஒரு போலிஸ்காரர் கழக "நோ எண்டரி" யில் நுழைந்து விட்டார் என்று குமுற துவங்கியுள்ளது.  காமராஜரை "அண்டங்காக்கை" யாக எள்ளி நகையாடியவர்களுக்கு இந்த கருத்த தோல் நிறத்தில், அண்டங்காக்கும் அண்ணாமலையாரின் பெயர் உடையவரை பார்த்து எரி தழல்கள் இரண்டு கழகங்களிடமிருந்து ஓடி வர துவங்கி விட்டது, நீண்ட நாட்களாக தமிழக மக்களை "வெறும்  சோற்றாலடித்த / சாராயத்தால் நொடித்த பிண்டங்களாக" பார்க்கும் கழக மட்டைகளுக்கு உள்ளுக்குள் சிவப்பு விளக்குகள் எறிய தொடங்கியது போல் அலார்ம் அடிக்கிறது.

இது தமிழகத்திற்கு நல்ல சகுனம்.  இதற்குள் இந்த அண்ணாமலையாரின் அடி முதல் முடி வரை சேறு பூச இடுப்பிற்கு கிழே மூளை கொண்டு இயங்கும் கழகங்கள், அவர்களின் ஊது குழல்கள் இவரை பற்றி பல அவதூறுகளை அடுக்கலாம். பெண்களை பெரிதும் மதித்த காமராஜரை கூட தரக் குறைவாக விமர்சித்தவர்கள் இவரையும் விமர்சிக்கலாம். 

இது தவிர கழகங்களின் "ஸ்லிப்பர் செல்" களாக இவரது கட்சியிலேயே சிலர் இவருக்கு குடைச்சல் கொடுக்கலாம். பல அவதூறுகளை கிளப்பிவிடலாம். ஆனால் இந்த கட்சியின் ஆளுமை தமிழகத்தின் புது நம்பிக்கைக்கு காங்கிரஸ் போல் மாநில தலைமையின் முக்கியத்துவத்தை குறைக்காமல், அண்ணமலையாரின் அரசியல் பயணத்தை பல வருடங்கள் தொடரச் செய்து தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் வளர ஒரு திறமையான இளைஞருக்கு  அதிக வாய்பளிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு ஆடு ஒன்று புலி போல் வேடமிட்டு  "புலி வருது புலி வருது "  என்று தமிழக மக்கள் ஒரு நேர் மறை அரசியல் உருவாகும் என்ற நீண்ட நாள் ஆசையில்  ஒரு பிம்பத்தை நம்ப தொடங்கி அதன் கிட்ட போன பின் " அது ஆடு போல்" கத்தியது .



அதனால் இந்த நிஜ போலிஸ் அதிகாரி, விவசாயி, இளைஞருக்கு, தமிழகத்தில் நல்ல நேர்மையான அரசியல் நடத்த வாய்ப்பு வந்துள்ளது. இவரை போன்ற ஒருவர் அரசியலுக்கு வருவதை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

சகிருட்டிஸ்

Translate

Contact Form

Name

Email *

Message *