Friday, October 4, 2019

Gandhi 150 Nammazhwar Street

                     ஆழ்ந்து
                 அகன்ற
           நுண்ணியன்

                        - திருவாசகத்தில் ஒரு வரி





ஒவ்வொரு உயிரையும் மிக நுணுக்கமாக தனித்துவத்துடன் படைக்கிறான் இறைவன்.  ஒரு வேப்பமரம் போல் இன்னொரு வேப்பமரம் சகல ஒற்றுமைகளுடன் இருப்பதில்லை.  ஏதேனும் சிறு வேறுபாடுகள் இருக்கவே செய்யும். 

அது போல் ஒரு மனிதனுக்கு கிடைக்கப் பெற்ற அனைத்தும் மற்றொருவனுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.  அதனால் இராணுவ ஒழுங்கை போல் ஒரே சீராக எல்லோரும் எல்லா விஷயங்களிலும் ஒன்று போல் நடக்க வாய்ப்பில்லை. 

கிருத்துவராலும் முகமதியராலும் உலகின் மிக பெரிய போர்கள் நடந்து பல கோடி உயிர்களை பலிவாங்கிட்டோம். என்னை போலவே மற்றொருவனும் சிந்திக்க வேண்டும் நான் வணங்கியதையே வணங்க வேண்டும் என்று முற்படுவது இயற்கைக்கு முரணாகும். 

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா போல் வாழ்ந்து காட்டி வழிக் காட்டலாம்,  ஆனால் எதையும் யார் மீதும் திணிக்கக் கூடாது.  இந்த இயற்கை முரணே வன்முறையை  தூண்டுகிறது.  இன்று அமெரிக்கா என்ற மிகப் பெரிய கிருஸ்துவ நாடும் இரான் என்கிற இஸ்லாமிய நாடும் எந்த நேரத்திலும் போர் மூளலாம் ( அக்டோபர் 2, 2019 - காந்தியின் 150 வது பிறந்தநாளில் எழுதும் குறிப்பு ) என்ற அச்சுறுத்தும் நிலையில் இந்த கருத்தை பகிர்கிறோம்.

மதமாற்றம் என்பதும் வன்முறையே. மலையின் மீது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மலை வாழ் மக்களை சமவெளியில் வாழும் மக்கள் நாகரிகம் இல்லாதவர்கள் போல் பார்க்க தொடங்கியதால் இன்று மலை வாழ் மக்கள் ரேஷன் அரிசிக்காக கால் கடுக்க நடந்தும் வரிசையில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளிவிட்டோம்.  அதனால் இன்று மலைகளும் எழில் குறைந்து மரங்கள் அற்று மழை மேகங்களும் இல்லாமல் வயல்கள் தண்ணீரின்றி வாடுகின்றன.

இன்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் " ஜார்வ" பழங்குடியினர் மட்டும் இயற்கையோடு ஒன்றி வாழ்வதாக அறிகிறோம்.  அவர்களையும் நாகரீகமாக்குகிறேன்  என்று ஒரு பாதிரியார் கடலில் குதித்து காணாமல் போய்விட்டார். 

இயற்கையென்னும் இறைவனுக்கு / இறைவிக்கு எத்தனை உயிர்கள் படைக்கப்பட்டதோ அனைத்து உயிர்களும் அவைகளுக்கு விருப்பமான ஒரு பெயரையோ உருவத்தையோ வழிப்பட்டே வருகின்றன.  இதில் மனிதரில் சில கூட்டத்தினர் மட்டும் நான் வணங்குவதை நீ வணங்கவில்லை என்றால்  என்று மிரட்டி ஓயாமல் போர் புரிகின்றனர். 

போதும்யா!!!
 "போர் போர் என்னும் கூவல் கேட்டு
போர் ( bore)  அடிக்கிறது "

வாங்க கொஞ்ச நாள் அமைதியா வாழ்ந்துட்டு நம்ம ஒவ்வொருத்துருக்கு "உள்" ளையும் "கட" க்கும் இறையையும் தட்டி எழுப்பி நாமும் "கடவுள்" ஆவோம்.
1000 கோடி பேரும் 1000 கோடி மதங்கள் தான். சக மனிதர , உயிர்களை துன்புறுத்தாம வாழ்வோம்.

எங்க கிராமத்தில இயற்கையோடு ஒன்றி வாழ ஒரு முயற்சியா இயற்கை வழி விவசாயம் செய்யும் விவசாயம் நடக்கும் நிலங்கள் உள்ள தெருவிற்கு காந்தி ஜெயந்தி இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் " நம்மாழ்வார் தெரு" என்று பெயரிடுவதாக தீர்மானம் இயற்றிட்டோம். 

(இடம் : மேல்பாச்சார் கிராமம்,  திருவண்ணாமலை மாவட்டம்) 

ஏன்னா இயற்கையை உள்ளது உள்ளபடியே ஏத்துகிறது தான் இயற்கை வேளாண்மையின் தத்துவம்.  நம்மாழ்வார்  அய்யா  எப்பவும் சொல்லுகிற விஷயம் "களை" என்று ஒரு செடி கிடையாது.  நமக்கு அதனோட பயன் தெரியாததால பெயர் தெரியாததால ஒரு செடியை வெட்ட நினைக்கிறோம்.  ஆனால் இயற்கை அந்த மண்ணுக்கு என்ன தேவையோ அதைதான் படைக்கிறது என்பார். 




Translate

Contact Form

Name

Email *

Message *