Test match is called so because it tests the players' composure in different moments of the Game. It is also revealed every franchise of IPL wants their respective team captains to be in the Indian Test, ODI & T20 teams just like a reservation quota.
Search This SAKRITEASE Blog
Thursday, June 15, 2023
Stop Superstardom Save Cricket
Test match is called so because it tests the players' composure in different moments of the Game. It is also revealed every franchise of IPL wants their respective team captains to be in the Indian Test, ODI & T20 teams just like a reservation quota.
Monday, March 15, 2021
50 years of DMK- ADMK alliance
50 வருட
கழக கூட்டணி
50 years of DMK- ADMK alliance
2021 மீண்டும்
ஒரு தேர்தல். எந்த கூட்டணி வெல்லப் போகிறது என்பது பல கோடி ரூபாய்களுக்கான கேள்வி
??? ஆனால் யதார்த்த நிலை இரண்டு கழகங்களின் கூட்டணி 50 வது ஆண்டை பொன் விழாவை தமிழகத்தில்
இந்த பொது தேர்தலில் கொண்டாட போகிறது.
என்ன ஆச்சரியமாக
இருக்கிறதா ? 1971ல் திமுக இரண்டாக பிரிந்ததே கழகங்களின் மொத்த பிடியில் தமிழ்நாட்டை
கொண்டு வரவே. ஏனென்றால் அரசியல் என்பது ஒரு
மிகப் பெரிய பண வியாபாரிகளின் சதுரங்கம், பதவி,
அதிகாரங்களுடன் கிடைக்கக் கூடிய வருமானம்.
தமிழ்நாட்டில்
எல்லா பொதுமக்களுக்கும் நன்றாக தெரிந்த விஷயம் – எந்த கழகம் ஆட்சியிலிருந்தாலும் சாராயம்
மாற்று கட்சிகாரரின் கம்பெனியிலிருந்தும் வாங்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. இது எப்படி சாத்தியம் ? இப்படி பழி சண்டை போடுகிறவர்களுக்குள்
கூட்டணியா என்று ஆச்சரியப்படுகிறீர்களா ? இதனை பல இடங்களில் திரு. கருணாநிதியும் திரு.
எம்.ஜி. இராமசந்திரனும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இந்த தேர்தலிலும்
ஒரு காட்சி வருகிறது கட்சியின் முக்கியஸ்தர்கள் போட்டியிடும் தொகுதியில் மாற்று கட்சியினர்
பலவீனமான வேட்பாளர்களையே நிறுத்திக் கொள்வர். திரு. அர்விந்த் கேஜ்ரிவால் வாராணாசியில்
திரு. மோடியை எதிர்த்து போட்டியிட்டது போல் தமிழ்நாட்டில் பெருந்தலைகள் நேருக்கு நேர்
ஒரே தொகுதியில் மோதுவதில்லை. திரு. உதயநிதி ஸ்டாலின் நிற்கும் தொகுதியான சேப்பாக்கத்தில்
கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.க வில் சேர்ந்த நடிகை திருமதி. குஷ்பு போட்டியிடுவதற்காக
அலுவலகம் கூட திறந்து விட்டார். ஆனால் திமுகவின் எதிர்காலமான திரு. உதயநிதிக்காக அதிமுக
தொகுதியை விட்டு கொடுத்துவிட்டு அதிமுக முக்கியஸ்தர்களுக்காக அவர்களின் தொகுதியில்
பலவீனமான பிரமுகர்களை திமுகவும் நிறுத்துகின்றன.
இந்த மறைமுக
உறவு கடந்த 50 வருடங்ககள் காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் மொத்தமாக தேயவைக்க பயன்பட்டுத்துள்ளது.
இந்த மறைமுக கூட்டணியை திரு. கருணாநிதியும் திரு. ஆர். எம். வீரப்பனும் ஒரே மேடையில்
முன்பே உறுதிப்படுத்தி உள்ளனர்.
இரண்டு கழகங்களுக்கும் அவர்கள் கொடியில் உள்ளது போல் ஒரு சின்ன வெள்ளை கோடு தான் வித்தியாசம். பெருந்தலைவர் திரு. காமராஜர் கூறியது போல் ரெண்டும் ஒரே குட்டையில் ஊறின மட்டை தான்.
மொத்தமாக
தமிழகம் ரூபாய் ஐந்து லட்சம் கோடி கடனை 50 வருடங்களாக சேர்த்தது தான் கழக அர்சுகளின் சாதனை. இரண்டு கட்சிகளும் செயலாற்றும் முறையும் ஒரே பாணியில்
இருவரும் மாறி மாறி அடுத்த கட்சியை ஊழலில் ஈடுபடுபவர்கள் என்று கைக்காட்டி திசை திருப்பி
விட்டு விட்டு வெறும் அடியாள் பலம், கட்டப் பஞ்சாயத்து, சட்டத்துக்கு புறம்பான தொழில்கள்,
சாராய தொழிற்சாலைகள், கல்வி வியாபாரம் அனைத்து செயல்களிலும் இலஞ்சம் , முக்கியமாக மக்களுக்கு
இலவசம் என்ற பெயரில் இலஞ்சத்தில் பங்களித்து இலஞ்சம் ஊழல் செய்வது சமூகத்தில் இயல்பானது,
அன்றாட வாழக்கையில் இலஞ்சம் தவறில்லை என்ற மனநிலையை உருவாக்கி தமிழக மக்கள் ஒரு மந்த
நிலையில் அடிமை போல் இரு கட்சிகளும் அரசியல் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில்
2006ல் மாற்றம் கொண்டு வர திரு. விஜயகாந்த் களமிறங்கினார், ஆனால் அவரால் குடும்ப கட்சியை
தாண்டி பல வெளி திறமையாளர்களை ஈர்க்கமுடியாமல் உடல் நலமும் ஒத்துழைக்காமல் அவர் கட்சி
தடுமாறிக் கொண்டிருக்கிறது.
2021ல் நடிகர்
திரு. ரஜினிகாந்த வருவார் , ஆன்மீக அரசியல் என்ற பெயரிலாவது ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு
வருவார் என்று இரு கட்சிகளை வெறுக்கும் பலரும் எதிர்பார்த்து இருந்த போது, அவர் “மூன்று
முடிச்சு” திரைப்படத்தில் செய்தது போல் திரு. கமல ஹாசனை குட்டையில் தள்ளிவிட்டு விட்டு
அவர் கரை ஒதுங்கி கொண்டுவிட்டார். பலமான பரட்டையை எதிர்பார்த்த மக்கள் சப்பாணியாவது
கிடைத்தாரே என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.
1967ல் ஒரு வைணவ ஞானியார், திரு . இராஜகோபாலசாரியார் (இராஜாஜி ) யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் ஒரு கொள்ளிக் கட்டையை எடுத்து காங்கிரஸை விரட்ட புறப்பட்டதால் வந்த வினை தமிழ்நாடு ஊழலிலே மக்களின் தார்மீக வளர்ச்சியிலே மிகவும் பின் தங்கி வருகிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த ஒரு வேலை நடப்பதற்கும்
ஒரு சிபாரிசு, சம்பளத்தை தாண்டிய கிம்பளம் தப்பில்லை என்ற மனோபாவம் தமிழ்நாட்டில் ஆழமாக
வேறூன்றிவிட்டது. இலவச மோகம் தலை விரித்தாடுகிறது. இரு கழகங்களும் ஐந்து வருடத்திற்கு
ஒரு ஓட்டு போடும் இயந்திரமாக வெறும் ஜட பொருளாக மக்களை மட்டமாக எடை போட்டு மலினமாக
இலவசம் இலவசம் என்று மக்களின் வரிப்பணத்திலே மக்களுக்கே கடன் சுமையை ஏற்றிவிட்டு அரசியல்வாதிகள்
நமது மாநிலத்தின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கி வருகின்றனர்.
இரண்டு கழகங்களும்
எந்தவித பொறுப்புணர்ச்சியும் இல்லாமல் இலவச கவர்ச்சி அரசியல் செய்துக் கொண்டு தமிழகத்தின்
மக்களை தரத்தை மற்ற மாநில மக்கள் மற்ற நாடுகளின் கேலி பொருளாக்கிவிட்டு மக்களையும்
அரசியல்வாதிகளின் கூட்டு களவாணி ஆக்கியுள்ளனர். சட்டப் பேரவைக்கு பண பலம் ஆள் பலம் சட்ட
புறம்பாக சொத்து சேர்பவர்கள் மட்டுமே அரசியல் செய்து வர முடியும் என்ற நிலையில் தமிழகம்
தடுமாறிக் கொண்டிருக்கிறது.
யார் இந்த
நிலையை மாற்ற முடியும் ? இன்று தமிழகத்தை நல் வழிப்படுத்த முடியும் ??? என்ற ஏக்கமான
கேள்விகள் பல மக்களிடையே கொந்தளித்து கொண்டிருக்கிறது. இரண்டு கழகங்களிலும் உள்ள வியாபாரிகள்
வெளியில் கட்சி ரீதியாக சண்டையிடுவது போல் தோற்றமளித்தாலும் உண்மையில் அவர்களிடையே
அரசாங்க சொத்தை எப்படி தனியார் சொத்தாக மாற்ற வேண்டும் என்பதில் தெளிவான உடன்பாடு உள்ளது.
தொழில் உடன்பாடு செய்து கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப சண்டைக் காட்சிகளும்
வசன நாடக காட்சிகளும் அரங்கேறுகின்றன.
இந்த
2021 தேர்தல் நமக்கு மிக குறைந்த வாய்ப்புகள் மட்டுமே, மிக குறைந்த நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது.
சப்பாணிய
விட்டா இப்ப மயிலுக்கு வேற வாய்ப்பேயில்லை. இந்த பிறவி வைணவர் போலி நாத்திகம் பேசி
மத அரசியல் செய்தாலும் மைனாரிட்டி மெஜாரிட்டி அரசியல் செய்தாலும் அவர் “விஸ்வரூபம்”
காட்டின மாதிரி அவர் உள்ளே ஒருவருக்கு ஆதரவு வெளியே ஒன்று செய்ய போகிறார் என்று நம்புவோம்.
கமல் ஆட்சிக்கு
வரணும் சொல்லலை, வந்தா கழகங்கள் கிட்டயிருந்து நமக்கு விடுதலை கிடைக்குமேனு சொல்றேன்.
இவரும் இன்னொரு கொள்ளிக் கட்டைதான் நிருபித்து கழகங்களை போல் இன்னும் 50 ஆண்டுகள் ஆட்சி
நடத்தமாட்டார்னு நிச்சயம் நம்பலாம். ஏன்னா அவர் ஒரே மாதிரி வேஷம் ஒரே மாதிரி மனிதர்கள்
எல்லாம் அவருக்கு சீக்கிரம் சலிச்சுரும்னு,
அவர் வாழ்க்கையில அவரே வாழ்ந்து காட்டியிருக்கார். அவர இந்திரன் - சந்திரன் சொல்ல முடியாது தான், அவர் தெனாலியாவே ஆட்சி நடத்தினாலும் நிச்சயம் கழகங்களை விட "பெட்டரா" செய்ய வாய்ப்பிருக்கு
இந்த கொள்ளை
இருட்டில இப்போதைக்கு டார்ச் அடிச்சு முன்னேறுவோம் கூடிய சீக்கிரம் அகன்ற பேரொளி நம்மை
வழிக் காட்டுவோம்னு நம்புவோம்ங்க. நம்பிக்கை தான் வாழக்கை.
சகிருட்டிஸ்
Sunday, July 5, 2020
Sat on Kulam Police
காவலரைப் போற்று
நமது ஊடங்களுக்கு எது முக்கியம் ? இன்றைய பரபரப்பு செய்தி அது மூலமா டி.ஆர்.பி ரேட்டிங் அதன் மூலமா விளம்பர வருமானம். மும்பை நடிகர்
ஏன் தற்கொலை செய்து கொண்டார் ? நடிகையை மூன்றாவதாக திருமணம் செய்தவரின் டைவோர்ஸ் கேஸ்
என்னாச்சு ?
நாட்டோட எல்லையை பாதுகாக்கும் பணியில் இராணுவ வீரர்கள்
20 பேர் இறக்கிறாங்க. தமிழ் நாட்டை சேர்ந்த ஹவில்தார் திரு. பழனி வீர மரணம் எய்தினார்.
கரோனா நோய் தொற்று நம்மை ஒரு பக்கம் பயங்கரமா ஆட்டம் காட்டுகிறது. எப்படி மக்களும் அரசாங்கத்தின் அங்கங்கள் எல்லோரும் தீவிரமாக தன் உயிரையும் பணையம் வச்சு போராட்டிட்டு இருக்காங்க. இதில் காவல் துறையும் தன் பங்குக்கு சில காவலர்களையும் இழந்து பலருக்கு நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம். சில காவல் நிலையங்களையே நோய் தொற்றுக்கு பயந்து மூடி வைக்க வேண்டிய நிலைமை. காவல் துறையில் வேலை செய்யும் பல காவலர்களுக்கும் தினம் உடம்புக்கு கொடுக்க வேண்டிய ஒய்வு கிடைப்பதில்லை. தன் பணிச்சுமையை எப்படி எங்க இறக்கி வைப்பது என்று புரிந்துக் கொள்ள முடியாத மன அழுத்தம் மிக்க ஒரு வேலை. கீழ் நிலையில் உள்ள பல போலிஸ்காரர்கள் பலரும் உணர்ச்சி மறத்து போன நிலையில் எல்லா அவமானங்களையும் தாங்கித்தான் வயிற்று பிழைப்பு நடத்த வேண்டியுள்ளது.
ஆனால் மீடியாவில் எப்பவுமே சாத்தான் குளத்தையே ஒரே செய்தியாக்கி ஏற்கனவே சோர்ந்திருக்கும் மக்களையும் காவல்துறையையும் மேலும் சோர்வடைய செய்கிறார்கள்.
70 வருட விடுதலையில் நாம் தெரிந்து கொண்ட பாடம். பண பலம்,
ஆள் பலம் உள்ளவர்கள் மட்டுமே இங்கு அரசியல்வாதியாக நிலைச்சு நிற்க முடியும். சட்டத்தை
வளைக்க தெரிந்தவர்களே மட்டுமே சட்டம் இயற்ற முடியும். இவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து மட்டுமே பலரும் வேலைக்கு
வரமுடியும். இப்படி லஞ்சம் கொடுத்து வாங்கியே
இங்கு இருக்கும் அனைத்து வேலைகளும் நடக்கிறது.
இலஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவர் எப்படி ஒழுங்கா வேலை செய்வார் என்று நாம்
எதிர்பார்ப்பது ???
இதற்கெல்லாம் என்ன தீர்வு ? சினிமாக்காரர்கள் பாணியில் நமது மக்களின் மன ஓட்டம் அறிந்த யாராவது ஒரு அந்நியனோ, ஒரு இந்தியன் தாத்தாவோ, ஒரு மாரியோ மொள்ள மாரியோ வந்து ஒட்டு மொத்தமா எல்லா கெட்டவர்களையும் அடிச்சு உதைச்சு கொன்னு போட்டுதான் மட்டுமே மாற்ற முடியும் என்று நாம எல்லோரும் முடிவிற்கே வந்துவிட்டோம்.
இப்போது சாத்தான் குளத்தில் போலிஸ் கஸ்டடியில் வைச்சு இரண்டு
வியாபாரிகளை விசாரித்ததில் அவர்கள் இறந்து போய்விட்டனர். இதில் சந்தேகத்திற்கு உண்டான காவலர் நால்வர் கைது
இந்த நிமிடம் வரை. இதில் உடனே நமது சினிமாக்காரர்களுக்கு
கோவம் வந்துவிட்டது. “நான் போலிஸ் வேஷம் போட்டதற்காக வெட்கப்படுகிறேன்” என்கிறார் ஒரு
நடிகர் “ நான் போலிஸ் ஸ்டோரியே எடுத்தேன், அதற்கு அவமானப்படுகிறேன் “ என்று பொங்குகிறார்
ஒரு டைரக்டர். அய்யா நீங்கதான் போலிஸ்னா சாமின்னு
சொல்லிட்டு “நான் போலிஸ் இல்ல பொறுக்கி”அப்படின்னு
வசனம் வச்சீங்க. இந்த முரண்பாடு உங்ககிட்ட
மட்டும் இல்ல நம்ம சமுதாயம் முழுவதுமே முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது.
சினிமா காரர்கள் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால் இன்றைய போலிஸ்காரர்களின் நிலைமை “சின்னதம்பி” படத்தில் வரும் பாடல் போல “குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி பாட சொல்கிற உலகம் “. காவலர்கள் அவர்கள் பற்றி வரும் எந்த விமர்சனத்திற்கும் குற்றச்சாட்டிற்கும் பதிலளிக்க முடியாது. அவர்கள் தேவையான ஒய்வோ விடுப்போ வசதிகளும் கிடையாது. பெண் காவலர்களின் நிலைமை அவர்கள் வெளியிடங்களுக்கு போகும் போது சரியான கழிவறை வசதிகள் கூட கிடையாது. இவர்களுக்கு ஒரு யூனியன் கூட கிடையாது. காவலர்கள் மிகுந்த மன உளச்சலில் தான் வேலை செய்கிறார்கள். அதனால் அவர்கள் நாளடைவில் ஒரு உணர்ச்சியற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
யானைகளை புத்துணர்ச்சி
முகாமிற்கு அனுப்புவது போன்று (https://ta.wikipedia.org/s/7gu4 ), காவலர் ஒவ்வொருவரையும் வருடத்திற்கு ஒரு 15 நாளாவது
அவர்களது உடல் , மன புத்துணர்ச்சி முகாமிற்கு அனுப்பவது தான் சிறந்தது. மனதளவில் பாதிப்பு
ஏற்பட வாய்ப்புள்ளதால் தான் நீதிபதிகளுக்கு வருடத்தில் ஒரு மாதம் விடுமுறை வழங்கப்படுகிறது. உடல் , மனம் இரண்டுமே பாதிக்கபடக் கூடிய காவலருக்கு
தின, வார, மாத, வருடாந்திர ஒய்வு அளித்தால் தான் அவர்களிடம் நாம் தரமான சேவையை எதிர்
பார்க்கலாம்.
சாராயம் குடிக்கிற சீன் இல்லாம இன்று ஒரு சினிமா வரமுடியுமா
?? அடிதடி. கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களையே இன்று ஹீரோ என்று காட்ட வேண்டியுள்ளது.
ஏனென்றால் இன்றைய சினிமா எடுக்க பணம் போடுபவர்கள் பலரது பிண்ணனியும் சாராயத்துடனும்,
ரௌடிகளுடனும், அரசியலுடனும் தொடர்பு இருப்பவர்களே.
இறந்த வியாபாரிகள் வீட்டிற்கு எதிர்கட்சி ஆளும் கட்சியும்
போட்டி போட்டு கொண்டு நிதி வழங்குகிறார்கள். இது தவிர அரசாங்க நிதி உதவி வேறு. இதிலேயே பிரச்சனையின் மூலக் கூறு எங்கே உள்ளது என்பதை
தெரிந்துக் கொள்ளலாம்.
இராணுவ வீரருக்கு
கடும் குளிரில் எதிரியிடமிருந்து நம் நாட்டை காப்பதற்காக உயிர் துறந்தும், இன்று அவர் குடும்பத்திற்கு வழக்கமான இழப்பீடு. கரோனாவில்
நமக்காக பாடுபட்டு இறந்த காவலருக்கும் , மருத்துவருக்கும் வழக்கமான இழப்பீடு. பிறப்பிலிருந்து
இறப்பு வரை எல்லாவற்றிலும் அரசியல் தலையீடு, இலஞ்சம், ஊழல். தமிழ்நாடு மிகப்பெரிய குழப்பமான ஊழல் சிக்கலில்
சிக்கிக் கொண்டுள்ளது.
காவல்துறை, அரசியல், சினிமாத்துறை, நீதிபதி , வக்கீல் என்று
அனைவருமே இந்த சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள் தான். யாரும் வானத்திலிருந்து குதித்து
வரவில்லை. குற்றம், குறை, பித்தலாட்டம், ஊழல், இலஞ்சம், அதர்மம் இல்லாத துறையே
இல்லை. அதே சமயம் இந்த துறைகளிலும் இத்தனை இக்கட்டான சவாலான சுழ்நிலையிலும் நேர்மையாக,
தன்னால் இயன்றளவிற்கு நன்மை செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். நால்வர் செய்யும்
தவறை வைத்து நாலாயிரம் பேரை குறை சொல்ல முடியுமா ? குறை சொல்லும் அருகதை நமக்கு இருக்கிறதா
?
எங்கே நமது சமுதாயத்திற்கு இடறுகிறது ?
தமிழ், தமில், தமிள் என்று ஒரு உணர்ச்சி வயப்படும் கூட்டமாகவே
மாற்றப்பட்டுவிட்டோம். என் மொழி தொன்மையான
மொழி . நாட்டின் பிரதமரே லடாக்கில் இராணுவத்தினரிடம் பேசும் போதும் திருக்குறளை தான்
மேற்கோள் காட்டுகிறார் என்று பெருமை கொள்கிறோம்.
ஆனால் நாம் நமது எதிர் கால தலைமுறை பெருமை கொள்ளும் படி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமா
? என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும். நமது முன்னோர்கள் அவர்களின் அடைந்த பரிணாம வளர்ச்சியின்
வெளிப்பாடாக கட்டிடக் கலை, சிற்பக் கலை, இலக்கியம் என்று விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
மிகத் தெளிவாக பிற மனிதர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதற்கு
புறநானூறும் உள்மன வளர்ச்சிக்கு அகநானூறும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். இதனை இன்னமும் எளிமையாக்கி திருக்குறள், ஆத்திச்சூடி,
திருமந்திரம் என்று நாம் வாழ வழிக்காட்டிச் சென்றார்கள்.
ஆனால் நாம் இன்று நவீனம் என்ற போதையில் மயங்கி இயற்கையை வெகுவாக
சிதைத்து வெறும் ஒரு கிருமிக்கு பயந்து ஊரடங்கி போயிருக்கிறோம். நம்மை உணர்ச்சிவசப்படுத்த ஒரு breaking news ற்காக காத்திருக்கிறோம். நமக்கு இயற்கையோடு ஒன்றி வாழத் தெரியவில்லை. இயற்கையில் வளரும் தாவரங்களை அவற்றின் மேன்மையை
நாம் உணரவில்லை. மலைகளை வெறும் குவாரிகளாக்கிக் கொண்டிருக்கிறோம், ஆறுகளை வெறும் சாயக்
கழிவு விடும் சாக்கடைகளாக்கிக் கொண்டிருக்கிறோம்.
உணவெல்லாம் நச்சு கலந்தே உண்ணுகிறோம்.
“இயற்கைக்கு திரும்பும் பாதையை” நமக்கு இப்பவும் காட்டுவதற்கு
பல ஞானியர்களும் வந்த வண்ணமே உள்ளனர்.
அவர்கள் காட்டிய வழியில் மலையெங்கும் மரங்கள் நடுவோம், ஆறுகளை
ஓடச் செய்வோம், உழுதுண்டு வாழ்வோம், இயற்கையை
வழிப்படுவோம், கலைகளை வளர்ப்போம், நமது முன்னோர் காட்டிய பண்பாட்டுடன் வாழ்வோம். நமது
எதிர் கால சந்ததியினர் நம்மை நினைத்து பெருமை அடையும் படி வாழ்வோம்.
நரகம் என்பது தனியான ஒரு இடம் அல்ல நாம் இன்று ஏற்படுத்தி
கொண்டிருக்கும் சூழலே. சாத்தான் குளம் தமிழகத்தில் மட்டும் இல்லை இன்று பூமியில் பல
பகுதிகளும் சாத்தான் குளமாகவே காட்சி தருகிறது.
சாத்தானகள் ஆகிய நாம் உருவங்களை அழிக்க முற்படாமல் தீய எண்ணங்களை அழிக்க முற்படுவோம். நாமே தெய்வங்கள் ஆவோம், இறைமை என்னும் உன்னத இயற்கையின்
பேராற்றல் தன்மையை உணர்வோம்.







