NO Ash No Win
Search This SAKRITEASE Blog
Monday, November 1, 2021
NO ash No win
Rajini (K) Can't (H) Be Fair
Rajini (K) Can't (H) "Be Fair"
அண்ணாத்தேசே😲
எத்தனை கோடி மக்கள் மனதில் மாற்றம் வராதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தி, புண்களை ஆற்றக்கூடிய ஆற்றல் மிக்கவராக பார்க்கப்பட்டவர் இன்று அந்த புண்ணிற்கு உரம் போட்டு புற்று நோயாக மாற்றிவிட்ட புகழுக்கு சொந்தக்காரர்.
திரு. "சோ" ராமசாமி ஒரு தீர்க்க தரிசி என்று நினைத்திருந்தோம். 1996ல் இவரை முதல்வராக்க அரும் பாடுபட்டார். நல்ல வேளை இன்று இந்த "அண்ணாத்தை"யை கண்டிருந்தால் அவர் "அச்சச்சோ" ராம சாமி இப்படி ஆயிடுச்சே பலராலும் துக்கம் விசாரிக்கப்பட்டிருப்பார்.
"ஆன்மீக அரசியல்" "இப்ப இல்லன்னா எப்ப ?" என்ற இந்த ஸ்டண்ட் மன்னனின் மராத்திய- கன்னட வசனங்களை நம்பி பார்டரில் தத்தளித்த ரசிகர்களை ஈரோட்டு நாத்திக கன்னட ராமசாமியை காட்டிலும் வெறும் வெங்காயமாகவே ஆக்கிவிட்டார் இந்த "அண்ணாச்-சே" !!
தமிழக மக்களுக்கு எப்பவுமே ஒரு ஏக்கம். அதுவும் சினிமா ஹீரோக்களின் மீது ஒரு தனி மோகம். குறைந்தபட்சம் இவர்கள் சினிமாவிலாவது நல்லவர்களைப் போல் நடிக்கிறார்களே என்று மனதை தேற்றிக் கொண்டு ஓட்டை குத்துகிறார்கள்.
அதனை ஒரளவிற்காகவாவது நல்லது செய்ய முயற்சித்தார் "ரிக்ஷாக்கார" மதன கோபால ராமசந்திரன். அந்த புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பல பூனைகள் பால் குடிக்க அலைந்தன / அலைகின்றன. இந்த "ஆட்டோக்கார" அண்ணாத்தையையும் நம்பின அனைத்து மக்களையும் சென்னையில் "ஆட்டோ"க்களை நம்பி பின்னாடி போன டூவிலர் காரர்களைப் போல் முட்டு சந்தில் முட்டிக் கொண்டு தவிக்கின்றனர்.
இந்த "முள்ளும் மலருமா" என்ற அல்ப சந்தேகத்தோட ஒரு பதிவை அக்டோபர் 2017ல் போட்டோம்.
இந்த விமர்சனித்தில் "ஸ்ரீதேவியை" தமிழ்நாடாக குறிப்பிட்டிருந்தோம். அதில் அந்த போலி "நாத்திக மணி"க்கூடப் பரவாயில்லை ரீட்டையர் ஆன பின்பு அரசியல் செய்து பொழுதை கழிக்கலாம் என்று தோற்றாலும் பரவாயில்லை என்று இரண்டு தேர்தல்களில் தோற்று மய்யம் கொண்டுள்ளார். இந்த ஏ"காந்த" மணி மட்டும் மக்களின் முகத்தில் கறி பூசுவேன் என்று இன்னமும் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்.
இவர் "சிஸ்டம்" சரியில்லை என்றார், நாமும் "ஆஹா !! இவர் சாக்கடையில இறங்கி சுத்தம் செய்யப் போறார்னு பார்த்தோம் " பார்த்தா பெருந்தலைவர் கூறியபடி " இவரும் அந்தக் குட்டையில் ஊறின மட்டை" தான் தன் படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதில் "மன்னன்""இராஜாதி ராஜா" என்று நிருபிக்கிறார்.
தமிழ்நாட்டோட சிஸ்டம் எப்பவும் எப்படி இருக்கிறதென்றால் இங்கும் எல்லோருமே "பெறும்" தலைவர்கள் தான் (மக்கள் உட்பட - 5 வருடத்திற்கு ஒரு 2000, பிரியாணி, சாராய பாட்டில்) சிலர் மட்டுமே "பெருந்"தலைவர்.
கர்ம வீரர் "காமராஜர்" கனவு வீரர் "கலாம்" மட்டுமே பிள்ளைகளை "பெறாதவர்" அதனால் அவர்களே "பெருந்தலைவர்"
இன்றைய தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு "பெறு" விற்கும் "பெரு" விற்கும் வித்தியாசம் தெரியாது என்பதே யதார்த்த நிலை.
மராத்திய மாமன்னன் சிவாஜி மட்டுமே "வணங்காமுடி". இந்த முடியில்லா "சிவாஜி"யை வணங்கும்படி செய்தது எந்த வணங்காமுடி ? தான் பெற்றவர்களுக்காக மக்களின் அன்பை பெற்றும் இழக்க துணிந்தது ஏனோ ??
"நிதி"பெற ஆயிரம் வழிகள் "உதய"மாகலாம் அதற்காக இந்த "கறுப்பு" "ஜெயண்ட்" (Giant Magnet) விழலாமா ??
Rajini is not fair, we know.
சின்ன சந்தேகம் :
சேப்பாக்கத்தில் மணம் வீச முயன்ற தாமரை பூவின் "வாசம்" தீடீரென்று "ஆயிரம் விளக்கில்" சென்று பொசுங்கியது ஏனோ ? மூன்றாம் அரண்மனைக்கு வந்த போது தான் தெரிந்தது "நிதி"யின் மீது மட்டுமே "கருணை" உள்ளவரை "விடியல்" ஒரு பகல் கனவே என்றே. அந்த "அண்ணாமலை"க்கும் ஒரு அரோகரா. அந்த அண்ணாமலையில் ஆடுகள் மேய்த்த "இடைக்காட்டு" சித்தர் தமிழகத்திற்கு அருள் புரியட்டும்.