Monday, February 5, 2018

Highlights of iYalbe Engineering book - இயல்பே இன்ஜினீயரிங் புத்தகத்தின் சிறப்புகள்









Thyagesan - King of Sacrifice - தியாகத்தின் உருவம் -சிவேசு

 Lord of Sacrifice
Drank Venom for saving all the creatures
 தியாக  ஈசன்
King of Sacrifice 
Carried everyones' sins on his shoulders 
தியாக  ஏசன் 

Like Father - Like Son 
தந்தையை போல்  தனயன் 

பாற்  கடலை கடையும்  போது  உண்டான ஆலகால  விஷத்தை மற்றவருக்கு  தராமல் தானே பருகினதால் - மற்ற  அனைத்து அவனால்  படைக்கப்பட்ட உயிர்கள்  உய்ய  தன்னையே  தியாகம்  செய்ய  துணிந்ததால் சிவனுக்கு  - தியாகத்தின்  அரசன் -
தியாகராஜன்  என்றும் தியாகேசன் என்றும் பக்தர்கள்  போற்றினர்.


When the Milky ocean was Churned by the many creatures - lot of venom erupted out like a volcano- Lord Siva knowing the intensity of the Poison, offered himself & drank the venom to protect all the creatures which cannot sustain in such a harsh environment. Hence he was called as Lord of Sacrifice by all the beings which are believe because of his sacrifice. 

தன்  வழி நடப்பவர்கள்  தியாகத்தின்  மேன்மையை உணர தன்  உடலை  துறக்க  துணிந்த -தன்னை  இறைவனின் திருக் குமாரன்  என்ற அறிவித்த  ஏசுவும் - தியாகத்தின் திரு  உருவாக போற்றப்படுகிறார்.
( சிவபிரான் தட்சிணாமூர்த்தியாக நான்கு சனகாதி முனிவர்களுக்கு ஞானம் வழங்கி அருள் பாலித்த நால்வரில் ஒருவர் சனந்தனர், இவரே ஒரு பிறவியில் ஈசா நபி என்றும் யேசு கிறிஸ்து என்ற பிறப்பில் தனது குருவின் தியாகத்தன்மையை மத்திய தரை கடல் நாடுகளில் சிலுவையில் உடல் தியாகம் செய்து தியாகத்தின் மேன்மையை உலகோருக்கு எடுத்துரைத்தார்)


The son, known as Jesus The Christ, (who is none other than re-incarnation of Sanandanar One of the four disciples of Lord Siva - when he is in the Guru form as Lord Dakshinamurthy ) chose to carry the sins of all the human beings on his shoulders, became the King of Sacrifice. Jesus declared that me and my father are one & the same.

தன்  கூட்டத்தை நல்  வழிப்படுத்த தானே தன்னையும் தியாகம்  முன்  வருபவனே சிறந்த  தலைவன் ஆகிறான்.

தலைமையின் பண்பு  : அன்பான  அரவணைப்பு 
நல்ல தலைவன் :
நந்தனாருக்கு காட்சியளிக்க  தன்  வாகனமான  நந்தியிடம் "சற்றே விலகியிரும் பிள்ளாய் " என்று  அன்புடன் கேட்டுக்  கொண்டதே ஒரு  தலைவன்  எல்லோர்  இடத்திலும் அன்போடும்  பணிவோடும் நடந்துக் கொள்ள  வேண்டும்  என்பதற்கு ஒரு சிறந்த  எடுத்துக்காட்டு .

தனது  வாகனம்  தானே என்று அலட்சியமாகவோ ஆணவத்துடன்  ஆணையிடாமல் தன்  பக்தனை கண்ட மட்டில் தன் சேவகனை மறக்காமல் மதித்து  பணிவாக "சற்றே விலகியிரும் பிள்ளாய் " என்று கூற  எத்தகைய  கனிந்த  உள்ளம்  இருக்க  வேண்டும் இறைவனுக்கு. அதே  சமயம்  வழி  மறிக்குதே என்று விழிபிதுங்கி அழும் பக்தனையும் தன் இன்முகம்  காட்ட விரைபவனே நல்ல தலைவன்.

தலைமையின் பண்பு  : பொறுப்பேற்றல் 

தலைமையின் மிக முக்கியமான பண்பு - நல்லது அல்லது  இரண்டிற்குமே பொறுப்பேற்றல்.  வந்தது  விஷம்  என்றவுடன் தான்  படைத்த  உயிர்கள்  தானே என்று அதில்  ஒரு  உயிருக்கு  இந்த  விஷத்தை கொடுத்து  காவு  வாங்காமல் தானே  அந்த  விஷத்தின்  வீரியத்தை ஏற்று மற்ற  அனைத்து  உயிர்களையும்  காப்பவனே நல்ல  தலைவன் - அத்தகைய பண்புகள்  எவரிடம்  இருந்தாலும்  அவரே  இறைவன்.

தான்  சுமக்கும்  சிலுவையை  எத்தனையோ  பேர் தாங்க  முன் வந்தாலும் தான்  படும் இன்னல்களை  மற்றெவருக்கும் பகிராமல்  தானே சுமந்ததால்  தான்  மனிதர்கள்  பலரும்  ஏசுவை  தங்கள் மனதில்  சுமக்கிறார்கள். தண்டனை என்றாலும் சுமை  என்றாலும் முன்  நிற்பவனே  நல்ல  தலைவன்.

தலைமையின் பண்பு  : தன்னடக்கம் 

உலகத்தையே படைத்தவராயினும் பிரபஞ்ச்சத்தின் மூல பொருளை விளக்க வருபவன் தன் இளைய மகன் என்ற  போதும் தன் மகனுக்கு  தன்னை விட என்ன  அதிகம் தெரிந்துவிடப் போகிறது  என்ற ஆணவம் எள்ளளவும் இல்லாமல் தனயனின் அடி அமர்ந்து உருவில்  சிறுவனான முருகப் பெருமான்   கூறியதை  உபதேசமாக ஏற்ற  சிவனே  நல்ல  தலைவன்.

தனக்கு  தண்டனை  வழங்கியவர்களின்  சிறுமையை நினைத்து  அவர்களையும்  மன்னித்து அவர்கள் அறியாமையை நினைத்து  அவர்களின் மீதும்  கருணை காட்டும்படி கூறிய ஏசு நல்ல  தலைவன்.
தன் நிலையை முற்றிலும் உணர்ந்த ஞானியராலேயே இத்தகைய உயர்ந்த குணங்களை வெளிப்படுத்த  இயலும்.

குணத்தினாலும் செயலினாலும்  இறைமை  தன்னை  பல்வேறு  வகையில்  வெளிப்படுத்தியவாறு  உள்ளது.  பலவேறு பெயர்களில் பலகாலங்களில்  பல ஊர்களில்  வழங்கப்பட்டு  வந்து கொண்டு  இருக்கிறது - ஆனால் பெயர் வெவ்வேறானாலும்  உருவமே  மாறிடினும்  இறைமை ஒன்றே.
இறைவன்  எண்ணற்ற  செயல்களை  ஒரே  கணப்பொழுதில் செய்ய  கூடியவர் என்று  ஏற்கும்  நாம் ,அவருக்கு  பலப்  பெயர்கள் வைத்துக்  கொள்ள  முடியும் என்று  ஏற்பதில்  மட்டும் என்ன  தயக்கம் ?

இந்த பெயரே  உசத்தி அந்த உருவமே  உயர்ந்தது என்ற  சண்டை  எதற்கு ?

அன்பே  சிவம் 
சிவமே ஏசு 
ஏசுவே  சிவம் 
எல்லாமே அல்லாதான் 

இறைமையை  போற்றி வாழ்வோம் பல்லாண்டு 

இயற்றியது - 12 நவம்பர் 2016

sakritease
சகிருட்டிஸ்

iYalbe Engineering -book - Simple concepts of engineering

Modia Chillar Manushe


Thiruvannamalai -Tamizh Nadu's Capital - திருவண்ணாமலை தமிழகத்தின் தலைநகரம்


i am in search of the i in Thiruvannamalaiiiiiii


Translate

Contact Form

Name

Email *

Message *