Tuesday, March 30, 2021

Raja Ji Ji Chi chi

 





கருப்பன்ஆ ராசா ஜீ ஜீ !!!

வெளுப்பன்மரியாதை எல்லாம் அதிகமா இருக்கு.  'ஜீ'ன்னு ஒரு வாட்டி  சொன்னா போதாதா . அதென்ன ரெண்டு வாட்டி "ஜீ"

கருப்பன் : அண்ணன் மாதிரி ஆளுக்கெல்லாம் ஒரு "ஜீ" பத்தாதுண்ணே இரண்டு "ஜீ" வேணும்

வெளுப்பன் : அவருக்கு தமிழ்ல "ஜெ" "ஜீ" கிடையாதுடா. அவரே பேரே "ராசா" ன்னு தான போடறாரு

கருப்பன் :  அப்ப "ஜீ" க்கு பதிலா "சீ" ன்னு போட்டுடறேன். 

வெளுப்பன் :  இன்னிக்கு தமிழ் நாடே "சீ சீ" தானே அவர் பேச்சு கேட்டு சொல்லுது.  டேய் ஒரு ஆள திட்டனும்னா அவன திட்டுங்கடா எதுக்கு தமிழ் நாட்டில எதுக்கெடுத்தாலும் அவங்க அம்மா சகோதரின்னு பெண்கள திட்டறீங்க. தமிழ்நாட்டின் அரசியல் நாகரீகம் ரொம்ப வருஷமா தரம் தாழ்ந்து தான் இருக்கு.  கருத்து மோதல் இருக்கலாம் ஆனால் தனி நபர் தாக்குதல் மிக கேவலமான நிலைக்கு சென்று 70 வருஷமா ஆகி விட்டது.  சாதாரண பொதுமக்களும் அன்றாட வாழ்க்கையில் பெண்ணோட கற்பு நிலை சொல்லி தான் திட்டறாங்க.  பெண்ணை வெறும் உடம்பாக பார்க்கும் நம்ம எண்ணம் மாறினாத்தான் நம்ம சமுதாயம் நிஜமா முன்னேற்ற அடையும். 

கருப்பன் :  அண்ணே !!  அப்ப இராஜ இராஜ  சோழனோட ஆட்சித்தான் வரணும்.  நல்ல ராஜா இருந்தா தான் நல்ல குடிமக்கள் உருவாகுவாங்க. நல்ல குடிமக்கள் இருந்தாத்தான் நல்ல அரசாங்கம் அமையும்.  கரெக்ட் தான அண்ணே  !!!!

வெளுப்பன் : உன்ன மாதிரி கறுத்த சிறுவர்கள் திருந்தினாத்தான்டா தமிழ் நாட்டோட பாரம்பரிய கருத்து செறிவை மீட்க முடியும்.  மன்னராட்சி காலத்துல கூட தான் ஆட்சிக்கு வரலாமான்னு மக்கள் கிட்ட "குடவோலை" சீட்டு மூலமா ஓட்டு போடும் முறையை உலகத்திற்கே ஜனநாயகம் - மக்களாட்சியை அறிமுகபடுத்தினது நம்ம இராஜ இராஜ சோழன் தான்.  அவரு மன்னராட்சி காலத்தில மக்களாட்சி நடத்தினாரு, இப்ப மக்களாட்சி காலத்தில எல்லாம் கட்சி அரசியல்வாதிகளும் அவங்க குடும்ப வாரிசுகளையே மன்னராட்சி மாதிரி கொண்டு வராங்க.  

கருப்பன் நிச்சயமா மாறுவோம்ண்ணே. " பொன்னியின் செல்வன்" கூடிய சீக்கிரம் ரீலிஸ்ண்ணே. 

வெளுப்பன் டேய் தமிழ்நாடு அரசியல் சினிமான்னு ரெண்டு புதைக்குழில சிக்கி தவிக்குதுடா.  மேல வாங்கடா !!!!





Translate

Contact Form

Name

Email *

Message *