Monday, November 21, 2022

Meenambakkam Airport in to a Agri Land




மீனம்பாக்கத்தில் மீன் பிடிக்கலாமா??

 சமீபத்தில் சென்னையில் விமான நிலையம் விரிவாக்க பணியாக ஒரு புதிய பசுமை விமான நிலையத்தை காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் கிராமத்தில் உள்ள 5000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க உள்ளதாக மத்திய மாநில அரசு அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இந்த புது விமான நிலையம் அமைய பெற்றால் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள், 1000 ஏக்கரில் உள்ள நீர் நிலைகள் காணாமல் போய் விடும் என்று செய்திகள் கூறுகின்றன.

https://www.dtnext.in/city/2022/10/09/parandur-airport-to-gobble-up-1000-acres-of-waterbodies-farmers

பரந்தூரை சுற்றியுள்ள நீர் நிலைகள்

இன்று சென்னையில் இயங்கி கொண்டிருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையமும் மிக பெரிய நீர் ஆதாரமாக இருந்திருக்கிறது. அதன் அருகே இன்றும் இருக்கும் மலையான திருநீர் மலையின் பெயரே -நமது முன்னோர்கள் இங்கிருந்த நீர் நிலையை மிக புனிதமாக வழிப்பட்டு வந்ததால் திரு நீர் மலை என்று மிக புனிதமாக, வைணவ தலங்களில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றி வழிபட்டு வந்துள்ளது தெரிகிறது.

காலம் காலமாக வளர்ச்சி என்ற பெயரில் நீர் நிலைகளையும் வயல்களையும் கான்கீரிட் காடுகளாக்கி இன்று பசுமைக்காக "ஒருவர் ஒரு மரமாவது" நட வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் முக்கால்வாசி பேருந்து நிலையங்கள் ஏரிகளில் தான் இயங்கி கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய சட்டமன்ற தொகுதியில் ஒன்றான வேளச்சேரி கடல் மட்டத்திற்கும் கீழ் நிலையில் இருந்த ஒரு மிகப் பெரிய ஏரியாகும். இதனால் மழை பெய்தவுடன் தண்ணீரின் இயல்பு படி பள்ளமான இடத்திற்கு ஓடி வந்து விடுகின்றன


மன்னர்களின் ஆட்சியில் ஆறுகளை, ஓடைகள், கால்வாய்கள், கண்மாய்கள் என்று நீர் ஆதாரங்களை பொக்கிஷமாக பாதுகாத்து இன்று வரை சில இடங்களில் இருக்கின்றன. தமிழகத்தின் மிகப் பிரபலமான அரசரான இராஜ இராஜ சோழன் என்ற பேரரசரையும் நாம் ஒரு நதியின் பெயரால் ஆறின் மைந்தனாக "பொன்னியின் செல்வனாக"வே போற்றுகின்றோம். 
பொன்னி நதியால் காப்பாற்றப்பட்ட செல்வன்
பொன்னி நதியை காப்பாற்றிய அரசன்


நாம் நமது முன்னோர்களின் பெருமையிலேயே வாழ்ந்து வருகிறோம். ஆனால் நமது பின்னோர்கள் நம்மை அப்படி நினைத்து பெருமைபடும்படி வாழ்கிறோமா ?????????????

மக்களாட்சி என்ற பெயரில், குடிமராமத்து என்று ஊர் கூடி ஏரிகளை பராமரித்து வந்த உன்னத பழகத்தை தொலைத்து விட்டு, 100 நாள் வேலை என்ற பெயரில் பெயருக்கு ஏரிகளை புறம் போக்காக்கும் வேலை மட்டுமே செய்கிறோம்.  

1960 கள் வரை சென்னையின் மிகப் பிரபலமான கூவம் ஆற்றில் இறங்கி குளித்து வந்திருக்கிறார்கள். ஆனால் இன்றும் அந்த ஆறு ஆந்திராவின் எல்லை வரை தெளிவாகவும் சென்னையில் ஒரு சாக்க்டை கால்வாய் ஆகவும் மாற்றியுள்ளோம். 

நமக்கு கையாளவே தெரியாத நீர் ஆதாரத்தை புதியதாக உருவாக்க முடியாவிட்டாலும் இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும். 

பரந்தூர் நீர் நிலைகளை அகற்றுவதற்கு முன்னால் மீனம்பாக்கத்தில் இயங்கும் விமான நிலையத்தை மீண்டும் ஒரு பெரிய ஏரியாகவோ வயல் வெளிகளாகவோ நம்மால் மாற்ற முடியுமா ??

நிலாவிற்கும் செவ்வாய்க்கும் ராக்கெட் விடும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது என்று மார் தட்டும் நாம், ஒரே ஒரு மலையை ஆவது உருவாக்கியிருக்கிறோமா ???? 

குப்பைகளை தான் மலை போல் குவித்துள்ளோம். மலைகளை எல்லாம் உடைத்து ஜல்லி கற்களாக மாற்றி கான் கீரிட் காடுகளை மட்டுமே உருவாக்கிவிட்டு இன்று பருவ நிலை மாற்றம், அதற்கு என்ன செய்யலாம் என்று உலகத் தலைவர்கள் எல்லாம் வருடா வருடம் எங்காவது சந்தித்து ஒரு ஒப்பாரி வைத்துவிட்டு கலைகிறார்கள்.

பருவ நிலை மாற்றத்தால் சென்னையே முழுகும் என்று அபாய மணியும் இவர்களே தான் அடிக்கிறார்கள். அழியப் போகும் நகரத்தில் மக்கள் தொகையை கூட்ட வேண்டுமா ?? குறைக்க வேண்டுமா ???




மேற்கத்திய நாடுகளுக்கு என்ன துணிகளை தயாரிக்க தெரியாதா ??? கார்களை உற்பத்தி பண்ண முடியாதா ?? முட்டைகள் தயாரிக்க தெரியாதா ??
 ஐரோப்பியர்கள் ஏன் இதனை எல்லாம் மூன்றாம் தர நாடுகள் என்று கூறி நம்மை செய்ய சொல்கிறார்கள் ??? அவர்கள் நாடுகளில் நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் சுற்று சூழலை மாசுபடுத்தும் தொழில்களை விட்டுவிலகி வருகிறார்கள். 
( மறை நீரை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை படியுங்கள் https://www.vikatan.com/literature/environment/159071-virtual-water-tracking-the-unseen-water-in-goods-and-resources )

அவர்கள் தின்பதை பார்த்து பிட்சாவையும் பர்கரையும் முழுங்கும் நாம், ஜீன்ஸ்களை கிழித்து கொண்டு அலையும் நாம், அவர்கள் நாட்டில் ஓடும் மெரிசிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யு, ஆடி என்று கார்களை வாங்கி வெட்டி ஜம்பம் அடிக்கும் நாம், அவர்களை போல் நீர் நிலைகளை சுத்தமாக பராமரிப்பதை எப்பொழுது கற்றுக் கொள்ள போகிறோம்??

நமது இன்றைய அவசர , அவசிய தேவை என்ன ? கடல் உள் புக வாய்ப்பிருக்கும் நகரத்தில் குவியாமல், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நமது குடிமக்களை பரவலாக குடியமர்த்துவது தான். தமிழகத்திற்கு 700 கிமீ கடற்கரை இருக்கிறது. கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் எல்லாம் உள் நோக்கி நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

இப்பொழுதைய முக்கிய தேவை கிராமங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே. மக்கள் அனைவரும் அவரவர் பூர்விக கிராமங்களை நோக்கி திரும்பி செல்ல ஊக்கப்படுத்த வேண்டும். 

List of Districts of Tamil Nadu

#DistrictArea (km²)Population (2011)Density (/km²)
1Ariyalur1,9407,54,894389
2Chennai17546,46,73226553
3Coimbatore4,73234,58,045731
4Cuddalore3,70326,05,914704
5Dharmapuri4,49715,06,843335
6Dindigul6,03621,59,775358
7Erode5,76022,51,744391
8Kancheepuram4,48339,98,252892
9Kanniyakumari1,68418,70,3741111
10Karur2,90410,64,493367
11Krishnagiri5,12918,79,809367
12Madurai3,71030,38,252819
13Nagapattinam2,56916,16,450629
14Namakkal3,42017,26,601505
15Perambalur1,7565,65,223322
16Pudukkottai4,64416,18,345348
17Ramanathapuram4,10413,53,445330
18Salem5,23734,82,056665
19Sivaganga4,23313,39,101316
20Thanjavur3,41124,05,890705
21The Nilgiris2,5657,35,394287
22Theni2,86812,45,899434
23Thiruvallur3,39437,28,1041098
24Thiruvarur2,27412,64,277556
25Thoothukkudi4,74517,50,176369
26Tiruchirappalli4,50927,22,290604
27Tirunelveli6,69330,77,233460
28Tiruppur5,18724,79,052478
29Tiruvannamalai6,18824,64,875398
30Vellore6,07539,36,331648
31Viluppuram7,19434,58,873481
32Virudhunagar4,24119,42,288458

மேலே இருக்கும் பட்டியலில் மக்க்ள் தொகை கணகெடுப்பு 2011ல் எடுத்ததாக தெரிகிறது. அதனால் 11 வருடங்கள் தாண்டிய நிலையில் 2022 இன்று பல மடங்கு கூடியிருக்கிறது.

இதில் சென்னை மாவட்டம் தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் இருக்கும் ஒரு சிறு மாவட்டம். மக்கள் தொகை அடர்த்தி சென்னையில் 26553. ஒரு சதுர கிமீட்டரில் மக்கள் மூச்சு முட்ட வசிக்கின்றனர்.  ஆனால் மாநிலத்தின் நடுபகுதியில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை அடர்த்தியோ வெறும் 322 நபர்கள் மட்டுமே. 

புதியதாக விமான நிலையம் கட்டிதான் தீருவேன் என்றால் நீராதாரங்கள் குறைவாக உள்ள , மக்கள் தொகை அடர்த்தியும் குறைவாக உள்ள பெரம்பலூர் அல்லது திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் விவசாயத்திற்கோ நீர் நிலைகளோ இல்லாத வறண்ட பகுதியில் கட்டி அந்த பகுதியில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினால் அங்கு மக்கள் தொகை படரும், சென்னையில் சுவாசிக்க கொஞ்சம் காற்று வரும்.

மேற்கத்தியரை போல் புத்திசாலி தனமாக யோசித்தால் தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகே இருக்கும் பெங்களுரூ விமான நிலையம் பன்னாட்டு விமான நிலையமாக நன்றாக வளர்ந்துவிட்டது. அதை நாம் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவர்களால் உருவாக்கவே முடியாத கப்பல் போக்குவரத்து துறைமுகம் தமிழ்நாட்டில் தான் உள்ளது. 

இதுவும் தவிர இப்பொழுது பல வேலைகளும் ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே செய்யக் கூடிய வழிமறை வளர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு வீட்டிலிருந்து செய்யும் வேலையை கிராமத்தில் ஒரு வீட்டிலி இருந்தும் செய்யலாம். இதற்கு தமிழ்நாட்டில் தென் காசியில் இருந்தும் இயங்கும் ஜோஹோ நிறுவனம்ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பரந்தூரில் ஏன் விமான நிலையம் தேவையில்லை என்று திரு. தேவசகாயம் அய்யா அவர்களின் கட்டூரையையும் படித்துப் பாருங்களேன்.

சகிருட்டிஸ்
Sakritease Nov 2022



Translate

Contact Form

Name

Email *

Message *