Friday, December 3, 2021

Oh My (Micron ) God

                         ஓ மை (க்ரான்) கடவுளே !!!!!


2019ல் வுஹானில் ( சீனா) தொடங்கிய ஒரு கரோனா உயிரியின் ( வைரஸ்) பயணம் தொடரியாக தொடர்கிறது. 

உலகத்தின் அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களின் உயிரை காக்க தடுப்பூசி எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளன. 

இந்த உயிரிகளின் இயல்பே தங்களை கொல்ல / அடக்க வரும் விஷத்தை கொண்டே தங்களை மாற்றி அமைத்து கொள்ளும் தன்மையை இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் அளித்துள்ளது.

பூச்சி மருந்து தெளிக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் அனுபவத்தில் ஒரு பூச்சியை கொல்ல ஒரு மருந்தை பயன்படுத்தினால்  அடுத்த வருடம் அதே மருந்து அந்த பூச்சியை கொல்லாது என்றும்  அடுத்த வருடம் அதை விட வீரியமான ஒரு விஷத்தை தெளித்தால் தான் அந்த பூச்சியை கொல்ல முடியும் என்பது அனுபவ பாடம்.

ஆனால் உண்மையில் நமது பாரம்பரிய ஆரோக்கியமான விவசாய முறையில் பயிரை பலப்படுத்தி பூச்சியை விரட்டும் வழிமுறைகளினால் மட்டுமே ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்ய முடிகிறது. பூச்சிகளை கொல்லும் எந்த மருந்தும்  மனிதனையும் கொல்லும் என்பதே இயற்கை நமக்கு உணர்த்தும் பாடம். 

வைரஸ் / பாக்டிரியா போன்ற நுண்ணியர்கள் இல்லாமல் உலகில் எந்த இயக்கமும் இல்லை. பாலை தயிராக்குவதற்கு கூட ஒரு நுண்ணியரி உதவினால் மட்டுமே முடியும். 

இந்த பதிவை எழுதும் போது இந்தியாவில் 125 கோடி பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த சூழ்நிலையில் கரோனா கிருமி இப்போது தன்னை எதிர்க்கும் உடல்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டே வருவது புலனாகிறது.  இப்போது வந்திருக்கும் வடிவ மாற்றத்திற்கு ஓமைக்ரான் என்று பெயரிட்டுள்ளனர்.  இது வரைக்கும் போடப்பட்ட தடுப்பூசிகள் "டெல்டா" என்ற வடிவமைப்பிற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.  அதனால் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடல் இந்த ஓமைக்ரான் வடிவமைப்பை எதிர்க்குமா ?? என்பது மில்லியன் டாலர் கேள்வி. 

மனிதர்கள் தோன்றுவதற்கே இந்த கிருமிகள் தான் காரணம்.  இந்த ஐப்பசி மாதத்தில் ( அக்டோபர் - நவம்பர் 2021 ) வரலாறு காணாத அடைமழை பெய்து இது வரை வெள்ளமே வராத ஓட்டமே இல்லாத பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  கடந்த பல வருடங்களாக ஓடாத ஆறுகளில் வெள்ளம் வந்த போது மீன்கள் எங்கிருந்து வந்தன ????????  



இயற்கை மீன்கள், தவளைகளின் முட்டைகளுக்கு தகுந்த சூழ்நிலை வரும் வரை உறங்கும் நிலையில் இருக்கக் கூடிய தன்மையை வழங்கியுள்ளது.  இதே போல் கோடானு கோடி உயிரினங்கள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இத்தகைய உயிரிகள் வெளியே வருவதற்கும் பூமியில் மனித இனம் அளவிற்கு அதிகமாக இயற்கை வளங்களை சுரண்டுவதால் கிருமிகளின் வீரியம் அதிகமாகி மனித இனத்தின் எண்ணிக்கையை குறைக்க முனைந்திருக்கிறது. மீனிலிருந்து . தவளை, தவளையிலிருந்து ஆமை என்று பரிணாம வளர்ச்சியில் மனிதன் வரை இயற்கை பல வித உயிரினங்களை படைத்துள்ளது.  இந்த உயிர் சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது. இதில் எந்த உயிரினம் பாதிக்கபட்டாலும் மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படும். 

இது போல் அதிக நாள் பயன்படுத்தாத தானியங்கள் வைத்திருக்கும் காற்று புகா வண்ணம் இருக்கும் ஜாடிகளில் கூட புழுக்கள், வண்டுகள் உருவாகிவிடுகின்றன. எங்கே இருந்தன அந்த வண்டுகள் ?? எந்த உயிரினத்தின் உடலும் இறந்த பின் அதன் வெப்பம் குறைய தொடங்கிய உடன் புழுக்கள் வந்து அழுக தொடங்குவது எப்படி ? அத்தனை மெதுவாக ஊறக்கூடிய புழுக்கள் எப்படி இந்த உடல் இறந்துவிட்டது என்று தெரிந்து கொண்டன ? எங்கிருந்து வந்தன ??  உலகத்தின் எந்த மூலையில் நடந்தாலும் இதே போல் நடப்பது யார் எழுதிய இலக்கணம் ??? இதுவே பிரபஞ்ச விதி.  ஒவ்வொரு உயிரினத்தின் உடலிலும் உறக்க நிலைகளில் பல உயிரினங்கள் இருக்கின்றன. தகுந்த சூழ்நிலை உருவானால் அந்தந்த உயிரிகள் உயிர் பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. 

https://www.who.int/news-room/fact-sheets/detail/chronic-obstructive-pulmonary-disease-(copd)

நெஞ்சகத்தில் நுரையிரல் சம்பந்தமாக வரும் நோய்களால் வருடத்திற்கு 32 இலட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் இந்த இணையதள தகவல் தெரிவிக்கின்றது. 

https://www.worldometers.info/coronavirus/?utm_campaign=homeAdvegas1?

மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் ஜனவரி 2020 முதல்  நவம்பர் 2021அதாவது கிட்டத்தட்ட 2 வருடத்தில் கரோனாவினால்  52 இலட்சம் பேர் இறந்ததாக தகவல் தெரிவிக்கிறது. 

கரோனாவோ வேறெந்த கிருமியினாலோ தாக்கபடாமலேயே கூட இந்த உலகத்தில் மக்கள் இதே அளவிற்கு இறந்து வருகின்றனர் என்பதே யதார்த்தம். மிக முக்கிய காரணம்  சுற்று சூழல் மாசு அதிகமாக விரியும் தன்மை குறைந்து உள்ள நுரையிரல்களை தாக்குகின்றன.  சுத்தமான காற்று, சுத்தமான குடினீர், தூய்மையான  சத்தான உணவு, இயற்கையை ஒத்த வாழ்க்கை முறை மட்டுமே நுரையிரல் சார்ந்த இறப்புகளை குறைக்க உதவும். 

கரோனாவிற்கு பயந்து இப்பொது மீண்டும் ஓமைக்ரானிற்கு பயந்து ஏ.சி. அறைகளில், கார்களில் இரண்டு முகக் கவசங்கள் போட்டால் நுரையிரல் விரியாமல் மேலும் சுருங்கிவிடும். எதற்கு பயப்படுகிறோமோ அந்த விபரீதத்திற்கு வழி வகுப்பது போல் நமது முன்னெச்சரிக்கை கொண்டு செல்கிறது.



முக்கியமாக நாம் நெருக்கமாக வாழும் நகரங்களை விட்டு நகர வேண்டும் என்று கரோனோ மற்றும் அதன் புது வடிவம் ஓமைக்ரான் நமக்கு உணர்த்தும் பாடம்.  

இயற்கையிலிருந்து நாம் நுகர்வதை குறைக்க வேண்டும்.  மலைகளை , மரங்களை, அதில் உற்பத்தியாகும் ஆறுகளை நாம் சீராக பாதுகாத்து போற்றி நன்றியுடன் வாழ்வதே நமக்கு நோய்களிலிருந்து விடுதலை பெற வழி. 

நாம் போடும் குப்பைகளை போட்டபடியே நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்தோம் என்றால், மனிதர்களை குறைக்க இயற்கையிடம் ஆயிரம் வழிகள் உள்ளன.  இயற்கை அனுப்பும் ஒரு சின்ன ஓமைக்ரான் கிருமியை தாங்ககூடிய சக்திகூட பெரும்பான்மையான மனிதர்களிடம் இல்லை என்பது தான் இன்றைய நிஜம். 

கிருமிகளிடம் இருக்கும் இறை தன்மையை உணர்வோம்.  இயற்கையின் படைப்பாற்றலை பணிவோடு போற்றி வாழ்வோம். 

சகிருட்டிஸ்.

Translate

Contact Form

Name

Email *

Message *