Thursday, March 24, 2022

TMS 100

 இசை தமிழின் தவக் குரல் 


I can only pity those who are not fortunate to listen to pure Tamizh diction of Late. Sri. T. M. Soundar Rajan, who made immense contribution to Tamil Cinema & Devotional Music and gave careers to the then Super stars MGR & Sivaji in their hey days in 1950-1980. Hindi Play Back singers like Mohd. Rafi and Kishore Kumar might have thanked their stars as Music kept TMS busy in South Indian Music.

இவர் சிவாஜியின் குரலா , எம் ஜி ஆரின் குரலா ??
சிவனுக்கே இவர் தான்யா குரல் 
"நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே" என்ற
பாடல் வரியை கேட்டவர் எல்லாம் சிவனை இசையால் உணர்ந்தவர் என்று
அறுதியிட்டு உறுதி கூறலாம்.



"நான் ஆணையிட்டால்" என்பார்
எங்க வேலை செய்யலன்னா நம்ப முதுகு தோல்
உறிஞ்சுடுமோங்கிற அளவிற்கு மிரட்டுவார். 



"புதிய வானம் புதிய பூமி" ன்னு இவர் குரல் கொடுத்தா
நமக்கே சிம்லா குளிர்ல பெட்டிய கைல வச்சுகிட்டு ஜாலியா 
பாட்டு பாடிகிட்டு போலாம்னு தோனும்.



கண்ணதாசனும் விசுவநாதனும் ஒரு மூங்கில வெட்டி வந்து துளை போட்டா அதுலயும் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே"னு அந்த சௌந்திரமான ராஜக் குரல் தான் கேட்கிறது.



வைணவராக பிறந்தாலும் முருகனுக்கு அனைவரையும் அடிமையாக்கி " உள்ளம் உருகுதய்யா " என்று உருக்கி இன்றைக்கு சூப்பர் சிங்கர் வரை கோலோச்சும் "முத்தைதரு பத்தித்திருநகை" பாடலால் இன்றும் அருணகிரி போற்றிய தமிழை வளர்ப்பவர். 



தமிழ் தெரிந்து கொள்ள வேண்டும் அதிலும் இசை தமிழ் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த மூன்றெழுத்து ,
டி.எம்.எஸ்
தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பிறந்துள்ள பலருக்கும் தமிழ் உச்சரிப்பு சரியாக வருவதில்லை, அதனால் இவர் பாடல்களை மாணவர்கள் தினமும் கேட்கும் படியாக இவர் குரலில் பாடிய " நீராரும் கடலுடுத்த" என்ற தமிழ் தாய் வாழ்த்தையாவது தினம் கேட்கும்படி செய்ய வேண்டும். 

வேற்று மொழிக்காரர்கள் இவர் பாடல்களை கேட்டாலே தமிழ் எளிதாக பிழையில்லாமல் கற்றுக் கொள்ளலாம்.

என்னதான் நானும் கிஷோர் குமாரின் இந்திப் பாடல்களின் ரசிகனாக இருந்தாலும் , அவரின் "படோஸன்" திரைப்படத்தில் " ஏக் சதுர் நார்" என்ற பாடலில் தமிழ் வித்வானுக்கு பாட டி.எம்.எஸ் ஸை அழைத்திருந்தால்,  கிஷோர் குமாருக்கு சரியான போட்டியாக இருந்திருக்கும். இசையமைப்பாளர் ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். இதற்கு ஏதாவது சாப்ட்வேர் அல்லது ஆப் வந்துள்ளதா ? என்று யாராவது விவரம் தெரிந்தால் சொல்லவும். இதுவரை வரவில்லையென்றால் புதிதாக வடிவமைப்பவர்கள் , நமக்கு மனதிற்கு பிடித்தவரின் குரலில் அவர் பாடாத பாடல்களை அவர் குரலில் பாடியிருந்தால் எப்படியிருக்கும் என்று ரசிக்க நன்றாக இருக்கும்.




பல நூறாண்டுகள் தமிழ் பேசும் இடங்களிலெல்லாம் டி.எம். சௌந்திர ராஜனின் கம்பீர குரல் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

" ஓர் ஆயிரம் பார்வையிலே" என்ற வார்த்தையை கேட்டால் " ஓரு கோடி குரல்கள் கேட்டாலும் இந்த குரலோட தனித்துவம் வராதுன்னு உறுதியா சொல்லலாம். 




Translate

Contact Form

Name

Email *

Message *