Wednesday, September 28, 2022

Nammazhwar Bhraman by deed

 நம்மாழ்வார் பிராமணரே

தமிழ்நாட்டில் ஜாதிகளை பற்றிய புரிதலில்
இந்த தலைப்பை பற்றி கேள்வி எழலாம்.

அதுவும் சமீபத்தில் எம்.பி. திரு. ஆ.ராசா, இந்துக்களின் பிறப்பையும் அவர்களை பெற்ற தாய்களின் கற்பு நிலையையும் இந்துக்களின் வேதங்களையும் அவர் மேற்கோள் காட்டி பேசியுள்ளார்கள்.

இவரது இந்த பேச்சு ஒன்றும் புதிதல்ல. இது ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்தே பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பலரும் பிரித்தாளும் தத்துவத்தின் படி தங்கள் மனம் போன போக்கில் சமஸ்கிருதத்தில் (வடமொழியில் ) உள்ள வாக்கியங்களை இங்கிருக்கும் சாதி கட்டமைப்பில் பிளவுகளை உருவாக்க பயன்படுத்தியது. 

இதில் யார் பிராம்மணர் ? யார் விலை மாந்தர் ? என்ற  விளக்கம் இன்றைய சூழலில் தேவைப்படுகிறது.

வர்ண ஆசிரம தத்துவத்தின் படி நாலு வர்ணங்கள் அதில் பிராம்மண, சத்திரிய,வைஸ்ய மற்றும் சூத்திர ஆகும். இதில் அடிப்படை அஸ்திவாரம் சூத்திர என்பது தான். உடல் உழைப்பால் சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பவர்.  அனைவரும் பிறப்பால் சூத்திரரே.
ஆனால் பிராமணராகவோ, சத்திரியராகவோ, வைஸ்யவராகவோ ஒருவரின் செயல்களாலேயே அறியப்பட்டனர்.

தனக்கென அடுத்த வேளை உணவை கூட சேமித்துக் கொள்ளாமல் பிரபஞ்ச நன்மையை கருத்தில் கொண்டு தவம், தியானம், அனைவருக்கும் பொது நன்மைகளை உத்தேசித்து  வாழ்ந்து காட்டி வழிக் காட்டுபவர்கள் பிராம்மணர்கள்.  இந்த பிராம்மண என்ற நிலையை பிறப்பினால் அல்ல வாழும் தவ ஒழிங்கினாலேயே அடைய முடியும். 


அனைத்து பிரபஞ்ச தன்மைகளின் விவரிப்பதே வேதம் என்று அறியப்படுகிறது. இதில் பிரபஞ்சத்தின் அனைத்து அம்சங்களும் எவ்வாறு தோன்றி மறைகின்றன என்பதை "அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்" என்ற தத்துவத்தின் படி தவத்திலே இருந்து உணர்ந்து பலருக்கும் தெரியப்படுத்த ஒரு ஒலி ஒழுங்கை கொண்டு விவரித்தனர். 

இதில் பிறப்பால் ராஜ குலத்தில் பிறந்தாலும், அந்த அரச சொகுசு வாழ்க்கை என்று அனைத்தையும் துறந்த பின்னர், தன் தவ மேன்மையால் பிரபஞ்ச பேராற்றலை நுணுக்கமாக சில சொற்களின் ஒலி அமைப்பை கொண்டு "காயத்ரி மந்திரம்" என்ற சொற்றொடரை மூலம் விவரித்தவர் "விசுவாமித்ர" ( பிரபஞ்ச நண்பன் என்பது பொருள் ) என்ற முனிவர் சத்திரியினாக இருந்து பிராம்மணராக தன்னை தகவமைத்து கொள்ள முடியும் என்று வழிக் காட்டுகிறார். 

இதற்கு எதிர்மாறாக பிராம்மணராக வாழ்ந்த தந்தைக்கே பிறந்திருந்தாலும் பிறன் பொருட்களை, பெண்களை கவர தனது கவனத்தை தவ வலிமையை இழந்த இராவணரை அசுரர் என்கிறார் - வேடுவராக வாழ்ந்த பின் தவ பயன்களால் பிராம்மணராக மாறிய "ராமாயணம்" என்ற காவியத்தை தொகுத்த வான்மீகி என்ற முனிவர்.

 இதையே மீனவ பெண்ணின் மகனாக பிறந்து "மகாபாரதம்" என்ற உயர்ந்த காவியத்தை தொகுத்த "வியாசர்" என்ற பிராம்மணர் ஆமோதிக்கிறார்.

இது எதோ பழைய காலத்து கதை என்று ஒதுக்கி தள்ளப் போனாலும், இன்றைய கால கட்டத்தில், பிராம்மணர்களாக வாழ முடியுமா என்றால் நிச்சயம் முடியும்.  அதற்கு மிக கடினமாக அந்தக் கால பிராம்மணர்களாக போல் உழைக்க வேண்டும். இன்று பிறப்பால் பிராம்மண என்று அறியப்படுகிற பலரும் அவர்கள் தேர்தெடுத்த பொருள், சுகம் சேர்க்கும் முறையால் சத்திரிய, வைசிய, சூத்திர வழியினராக இருக்கின்றனர். இந்த இடத்தில் முக்கியமாக உணர வேண்டியது இதில் எந்த முறையும் யாரும் பின்பற்றலாம் அதில் எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லை என்பதே.

நம்மிடையே மிக சமீபத்தில் வாழ்ந்து மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா, தனக்கோ தன் எதிர்கால சந்ததிக்கோ சொத்துக்களை சேர்க்காமல் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் ஆரோக்கியமாக இயற்கையுடன் ஓன்றி வாழ வேண்டும் என்பதனை தனது உடலைவிட்டு நீங்கும் வரை வாழ்ந்து காட்டிய நம்மாழ்வார் ஒரு பிராம்மணரே. எண்ணற்றே இளைஞர்கள் இன்று நஞ்சில்லா விவசாயம் செய்ய வயலில் இறங்கியுள்ளார்கள் என்பதே அவர் சமூகத்தில் செய்த உண்மையான பசுமை புரட்சி.

எந்த அரசியல்வாதியும் போல் கும்பல் சேர்த்து ஆர்பாட்டமும் இல்லாமல் மக்களை தன் அன்பால் அயராது உழைப்பால் ஈர்த்து தனக்கென வாழாமல் உலக நன்மைக்காக வாழ்ந்ததால் மக்கள் குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அய்யா ஒரு பிராம்மணரே.

உலகமே வியந்து பாராட்டும் தன் சொத்துகள் அனைத்தையும் விற்றும் மேலும் உழைப்பினால் வரும் வருமானத்தையும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு உதவ வாழ்ந்து வரும் "பாலம்" திரு.கலியாண சுந்தரம் அய்யா அவர்களும் பிராம்மணரே.

இன்னமும் எண்ணற்ற கோவில்களில் எண்ணை விட்டு விளக்கேற்ற கூட மிகவும் சிரமப்படுகிற நிலையில் இருந்தாலும் அரசாங்கமும் ஊரும் ஆதரிக்காமல் போனாலும் தன் கடமைக்காக இன்னமும் ஏழ்மை நிலையிலும் உலக நன்மைக்காக வாழும் குருக்கள்கள், பூசாரிகள் போன்றவர்களும் பிராம்மணர்களே. 

வரும் காலங்களில் தான் பலவழிகளில் சேர்த்துள்ள சொத்துகளையெல்லாம் மக்களின் நன்மைக்கே விட்டுவிட்டு தனக்கு தனது வாரிசுகளுக்கு என்று வாழாமல் அனைத்து உயிர்களிடத்தும் எந்நேரமும் அன்பு செய்தே வாழ்ந்து காட்டினால் திரு. ஆ.ராசா பிராமணராகலாம். 

இதில் "பஞ்சமர்" "பஞ்சமி" என்ற சொற்களும் செயல்களும் ஏன் வந்தன என்பதையும் பார்க்க வேண்டும். நாலு வர்ணத்தாருக்கும் எப்படி வாழ்வது என்ற நியதிகளை வகுத்த இந்த பூமியின் ஆதிவாசிகள், இதில் எந்தவிதிகளுக்கும் எனக்கு வாழ உடன்பாடில்லை என்பவரை கட்டாயப்படுத்தாமல் மற்றவர்களின் விதி முறைகளுக்குள்ளும் புகாமல் அமைதியுடன் வாழ வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். நாளடைவில் இந்த விலகலும் இடைவெளியும் அதிகரித்துள்ளது.  பஞ்சம - என்ற வடமொழி சொல்லுக்கு ஐந்தாவது என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளார்கள். 

இன்றும் இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிகோபார் தீவுகளில் "ஜார்வா" என்ற காட்டுவாசிகள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் வாழும் பகுதிகுள் நுழையும் எந்த அன்னியரையும் அவர்கள் அம்பு எய்தி கொன்று விடுகிறார்கள். அவர்கள் இயற்கையோடு இயற்கையாக ஒன்றி வாழ்வதை நாம் நமது வாழ்க்கை முறையே சிறந்தது என்றும், நாமே அவர்களை விட நாகரீகம் மிகுந்தவர்கள் என்று அவர்களுக்கு ஆடை உடுத்தி, கரும் பலகை பாடமெடுக்க ஆரம்பித்தால் அதைவிட அநாகரீகம் அபத்தம் வேறெதுவும் இல்லை.

மலைகளில் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்களின் அற்புதமான வாழ்வியலை உள்வாங்கி கொள்ளாமல் அவர்கள் ஏதோ நகரங்களில் வாழாதததால் மிக பின் தங்கிவிட்டவர்களாக பார்ப்பதே ஒரு மனநோய்.

 நல்ல தரமான மூங்கில் அரிசி சாப்பிடுபவரை மலையிலிருந்து இறக்கி பாலிஷ் செய்யப்பட்ட"ரேசன்" அரிசி சாப்பிட வைப்பது எப்படி ஆரோக்கியமாகும் ? மூலிகைகள் கொண்டே தன்னை குணப்படுத்தி கொள்ள கூடியவரை "ஊசி" குத்துவது அநாகரீகம்.

இங்கு ஒரு சிவிங்கி (சீத்தா) குட்டிகூட வாழ தகுதியாக இல்லாத கொன்று குவித்த "இந்தியா" நாகரீகமானதாகவும், இன்னமும் பல மிருகங்களும் சுதந்திரமாக வாழும் ஆப்பிரிக்க பழங்குடியினர் வாழும் நாடுகளில் தான் இன்னமும் சீத்தாகளும் விரும்பி வாழும் ஆப்பிரிக்க "நமிபியாவை" இருண்ட கண்டமாக பார்ப்பது அறிவின்மை.

நம்மாழ்வார் அய்யா எப்போதும் கூறுவது போல் "கரும்பலகை"யில் எழுதி கற்பிப்பது, ஆசிரியரை ஒரு மேடையில் ஏற்றியும் மாணவரை அதைவிட ஒரு படி கீழ் இறக்கி வைப்பது தான் நிஜமான ஏற்றத்தாழ்வு.  மரத்தினடியில் அனைவரும் சமமாக அமரச் செய்து தகவல் பகிர்தல் என்பது இரண்டு வழி பாதையாகும். 


"விபச்சாரி" யார் ??

ஓரு ஆணை விட அதிகமான ஆணுடன் உறவு கொள்பவர் என்ற நிலை பெண்களின் கற்பு நிலையை இழிவுபடுத்தி அவர்களை திட்டவே எல்லா மொழிகளிலும் சொற்களை ஆணாதிக்க சமுதாயம் பயன்படுத்தி வருகிறது.

மகா கவி பாரதியார் இடியென இந்த கேள்வியை ஒரு நூறாண்டுக்கு முன்பே கேட்டார். யாராலும் உரிமை கோர முடியாத, ஒரு விலைக்காக உடல் இன்பத்தை தரக்கூடிய ஒருவரிடம் செல்லும் ஆணின் கற்பு நிலையை மட்டும் ஏன் விமர்சிப்பதில்லை ? விலை மகளிடம் செல்லும் ஆண்கள் அனைவருமே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்வதால் அத்தகைய ஆண்களும் "விபச்சாரன்" என்று ஏன் அழைப்பதில்லை ராஜா சார் ??? 

இந்த உலகத்தில் எல்லா மனித ஆண்களும் கற்பு நிலை பிழறாமல் வாழ்ந்தால் "விலை மாந்தர்"கள் என்ற உடலை விற்கும் அவல நிலையை இல்லாமல் செய்துவிடலாம். இது தான் மிக முக்கியமான சமூக நீதியாகும்



தமிழர்களின் பாரம்பரிய கிராமிய கலைகளில் இன்றளவும் நடத்தப்படுவது "தெருக்கூத்து" தான். அதிலும் மிக அதிகமாக அரங்கேற்றப்படுவது "மகாபாரதமும்" அதில் வரும் "பாஞ்சாலி"யின் சபதமும் ஆகும். ஐந்து நதிகள் ஓடும் ஒரு மாநிலத்தில் பிறந்த அந்த பெண்ணை, அதுவும் ஐந்து கணவர்களை மணந்த அந்த பெண்ணை "த்ரௌபதி அம்மனாக" "பாஞ்சாலி அம்மனாக" ஊர் காவல் தெய்வமாக இன்னமும் நமது நாட்டில் பல கிராமங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அதே பஞ்சமரில் வரும் "பாஞ்ச்" (இந்தியில் ஐந்து)  பாஞ்சாலியிலும் வருகிறது.



அப்படிபட்ட ஒரு பெண்ணை "விபச்சாரி" என்று தூற்றாமல் அவரை பெண் தெய்வமாக வணங்கும் இந்து மதம் எங்காவது ஒரு தாயை விபச்சாரியாக கூறியுள்ளதா ?? இறைப்பணிக்கு தன்னை தானே அர்பணித்த "தேவர்களின் அடியாரை"யும் தேவாலயங்களில் தங்களை அர்பணித்த "கன்னியாஸ்திரி"களையும் தங்கள் உடல் இச்சைக்காக தவறாக வழி நடத்திய 
ஆண்கள், சக ஆண்களை தாயின் கற்பின் நிலையை வைத்து திட்டி வருவது "சமூக அநீதி" என்று வழக்குரைஞரான தாங்கள் ஏன் இன்னும் உணரவில்லை ????

ஒரு பெண்ணே ஆட்சி செய்ய துணிந்தாலும் அவரின் துணிகளில் ஒளிந்திருக்கும் ஒரு உடலாக பார்க்கும் எண்ணம் என்று மாறும் ? பொது ஊடகங்களை உங்களது தாயாரும் உங்கள் மனைவியும் உங்கள் மகளும் பார்க்கிறார்கள் என்ற அக்கறையுடன் கழக தம்பிகளுக்கு பாசறைகளில் பாடம் எடுக்க வேண்டிய பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் என்பதாக தமிழக மக்கள் உங்களை அனுப்பியுள்ளார்கள்.

 "காத்து வாக்கில இரண்டு காதல்" சமீபத்தில் ஒரு படம் வந்திருக்கு. நீங்க விளம்பரத்துல கூட பார்த்திருக்கலாம். அதில் விஜய் சேதுபதி நடிக்கும் பாத்திரத்தை பார்த்து சம்ந்தாவும் நயந்தாரவும் நடிக்கும் பாத்திரங்கள் "ஐ லவ் யூ " என்பார்கள் அதற்கு அவர் ஒரு பதில் தான் சொல்லறார் "ஐ லவ் யூ டூ ". "நானும் உங்களை விரும்புகிறேன் " "நான் உங்கள் இருவரையும் விரும்புகிறேன் " என்று இரு பொருள் பட காட்சி அமைக்கப்பட்டுள்ளது.




நீங்கள் இந்துக்களின் வேதங்களை படித்ததெல்லாம் ஆங்கிலேயர்கள் மதமாற்றத்தை ஊக்குவிக்கிறதாக வேலைக்கு அமர்த்திய சம்ஸ்கிருதத்தை மூல மொழி இலக்கணங்களை புரியாமல் மொழி பெயர்த்தவைகளை தான். தனது மனம் போன முறையில் "TOO" விற்கும் "TWO" விற்கும் இருக்கும் ஒரே உச்சரிப்பை வைத்து இரண்டு பெண்களை ஏமாற்றும் சொல் வித்தைகளாகும். 

https://www.youtube.com/watch?v=MJmxdlCtFWU

நம்மாழ்வார் போற்றும் ஆண்டாளின் ஆளுமையை அன்பை, பரவசத்தை, அவரை "திருப்பாவை"யாக பார்த்ததால் தான் தமிழகத்தின் அரசின் சின்னமாக நம்மையும் அந்த அன்னை ஆள்கிறார்.


சகிருட்டிஸ் செப்2022

SAKRITEASE SEP 2022


Translate

Contact Form

Name

Email *

Message *