பாரதியின் சீடரான பாரதி தாசனை கூட நாம் "அவன் " "எழுதினான்" என்று ஒருமையில் உரிமையோடு குறிப்பிடுவதில்லை ஆனால் நாம் பாரதியை பற்றி குறிப்பிடும் போது ஒருமையில் தான் குறிப்பிடுகிறோம்.
ஏன் இந்த வேறுபாடு ? பாரதி செல்வ ஏழ்மையில் வாழ்ந்ததாலா ?
நிச்சயமாக இல்லை. மற்ற கவிஞரின் கவிதைகள் அறிவை தொடும் மனதை தொடும், ஆனால் பாரதியின் சொற்கள் ஆன்மாவில் ஊடுருவி இரண்டற்ற ஒருமையில் கலக்கிறது. இதனாலேயே நாம் எல்லோரும் இந்த அமரக்கவியை நமது உள் ஆன்மாவின் அறைகூவலாகவே பார்க்கிறோம்.
Sakritease லோகோவிலும் அவனின் மீசையையும் பொட்டையும் அதனாலேயே உரிமையோடு அவனைப் போல் கொஞ்சமாவது சமூக அக்கறையுடன் எழுத முயற்சிக்க அவனின் ஆசீர்வாதம் வேண்டும் என்பதற்காகவே குறிப்பிடுகின்றோம்.
https://sakritease.blogspot.com/2018/10/sakritease-facebook-page.html
https://www.facebook.com/sakritease/
https://sakritease.blogspot.com/2018/10/sakritease-facebook-page.html
https://www.facebook.com/sakritease/
சமகாலத்தில் வாழ்ந்த நமது உள்ளம் வரை பல பாடல்களில் தொட்ட நேர்மையான கவிஞர் கண்ணதாசனை கூட அவர் என்றே குறிப்பிடுகின்றோம்.
ஏனென்றால் பாரதி என்பது நமது உள்ளே ஆன்மாவாய் கணண்று கொண்டிருக்கும் ஒரு அக்னி குஞ்சு.
பாரதியின் செல்வ ஏழ்மையை எண்ணி பலர் வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அவன் இறந்தே நூற்றாண்டு நெருங்கும் வேளையில் இன்றும் நம்மில் பலருள் அணையாவிளக்ககாக கணண்று கொண்டிருப்பவன் என்ற நித்தயமான உன்னத நிலையை தொட்டவன் சுப்ரமணிய பாரதி மட்டுமே.
தாகூரின் 100 கவிதை தொகுப்புகளை ஒன்றாக இணைத்தாலும் பாரதியின் ஒரு கவிதைக்கு ஈடாகாது.
பாரதி "சிந்து நதியின்" பாடலில் பாரதி ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பம்சங்களை கொண்டாடுவான், ஆனால் தாகூரின் "ஜனகண " வில் மொத்த தென்னிந்தியாவிற்கும் ஒரு சொல்லில் "திராவிட" என்று போட்டுவிட்டு தனது அறியாமையை தாகூர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
வெள்ளையருக்கு சாமரம் வீசியதாலும் வங்காளிகளின் ஒற்றுமையாலும் தாகூர் ஏதோ மாபெரும் கவியை போல் இந்தியா கொண்டாடுகிறது.
பறவைகளிடம் கூட ஜாதி பார்க்காமல் " ஜாதிகள் இல்லையடி பாப்பா " என்று பாடிய பிரபஞ்ச மாகவிஞனை " பார்ப்பனன்" என்று ஒதுக்கியது ஒரு சிறுமதியர் கூட்டம். இந்த கூட்டம் "பெண்ணின் உள்ளாடைக்குள் உள்ளம் தேடும்" காமவரிஞர்களை "கவிப்பேரரசு" என்று கொண்டாடி கூலிக்கு தமிழ் விற்கும் கும்பல் கூவுகிறது.
இதனால் பாரதிக்கு எள்ளளவும் தாழ்வு இல்லை. அவன் வணங்கிய சூரியனைப்போல் அவன் என்றுமே மறையாத சூரியன்.
சூரியன் என்பது எங்கும் உதிப்பதுமில்லை என்றும் மறைவதில்லை. ஞாயிற்றுக்கு ஞாயிற்றுகிழமையில் விடுமுறை எல்லாம் இல்லவே இல்லை. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதாலே ஒளி பெறுகிறது மற்றும் இழக்கிறது.
பூமியே சுற்றுவது நின்றாலும் பாரதியின் தாக்கம் எங்கும் அவன் போற்றிய பராசக்தி போல் விரவியே இருக்கும்.
வாழ்க பாரதி! வாழ்க வையகம்!
செப்டம்பர் 11 / 12 2019 பாரதியின் 98 வது உடல் நீத்த நாளில் அவனின் நினைவாகவே
No comments:
Post a Comment