Thursday, June 15, 2023

A Goat is roaring in TN தமிழ்நாட்டுல ஆடு உறுமுதாம்

 

அதெல்லாம் ஒரு காலம் !!! அது காமராஜர் இருந்த வரை சாத்தியம் !!!
இந்த வாசகங்கள் காமராஜர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த மக்களின் அடிக்கடி எழும் மனக் குமுறல். அதன் பிறகு அமைந்த இரண்டு கட்சிகளின் ஆட்சிகளையும் காமராஜரின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால் "ஒரே குட்டையில் ஊறின மட்டை".

கடந்த 56 வருடங்களாக வெறும் மேடைக்கு மேடை தேர்தலுக்கு தேர்தல் ஊழல் சேற்றை ஒருவருக்கு வாரி இறைப்பது நடந்தது. சிலரின் ஊழல் மட்டுமே நிருபிக்கப்பட்டு சிலருக்கு மட்டுமே தண்டனை கிடைத்தது. ஆனால் மக்களின் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலிலும் ஊழல் இரண்டறவே கலந்துவிட்டது. ஊழல், இலஞ்சம் இல்லாமலே ஒரு வேலையும் சாத்தியம் இல்லை என்ற மனநிலைக்கு தமிழகம் சென்று விட்டது. "ஊழல் தவறு" என்று பேசுபவர்களும், நினைப்பவர்களும் யாராவது வந்து இந்த ஊழல் வழிமுறைகளை மாற்ற மாட்டார்களா என்ற ஏக்கம் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. சினிமாவிலாவது நல்லது செய்கிறார்களே என்று நம்பி சில நடிகர்கள் பின்னாடியும் போய் பார்த்தும் அதுவும் நடிப்பு தான் என்று மிகுந்த விரக்தி அடைந்திருந்த நேரம் - ஒரு ஒளிக் கீற்று மிக மெல்லியதாக பரவ தொடங்கியுள்ளது. அந்த ஒளி பேரொளியாகுமா என்பது போக போக தெரியும். அந்த ஒளி ஊழல், இலஞ்சம் என்ற இருள்களை நீக்குமா என்ற ஆர்வத்தை கடந்த ஒரு வருடமாக திரு. கு. அண்ணாமலை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த இளைஞர் ஒரு விவசாயி , ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து சிறப்பாக பணியாற்றியுள்ளார், மக்களின் அபிமானத்தை பெற்ற "சிங்கமாக" உள்ளார். தனது அரசு வேலையையும் துறந்து ஒரு அரசியல் கட்சியின் மாநில தலைவராக உள்ளார். அந்த கட்சி மிக தூயமையான கட்சியா என்றால் நிச்சயம் இல்லை. அந்த கட்சியில் எல்லா கட்சிகளிலும் உள்ளது போல் அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும், புகழிற்காகவும் பலரும் அந்த கட்சியில் உள்ளனர். 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு சாலையில் உள்ள பள்ளமும் அனைத்து துறைகளில் உள்ள ஊழல்களை பறைசாற்றுகின்றன. மக்களில் பலரும் இந்த ஊழல்களை தடுக்க முடியாது என்று தளர்வடைந்து அந்த ஊழலில் ஒரு சிறு தொகையை கையூட்டாக  ஐந்து வருடத்திற்கு ஒரு முறை பெற்றுக் கொண்டு இந்த ஊழல்களை வளரவிட்டு வருகிறோம்.

இந்த மனிதரால் ஊழலை ஒழிக்க முடியுமா ?? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இதுக்கெல்லாம் நம்பிக்கை அளிப்பதே இந்த நபரை இரண்டு கழகத்தினரும் போட்டிக் போட்டி கொண்டு தாக்குவதே அண்ணாமலை மீது நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இது வரை இருந்த எந்த பா.ஜ.க வின் மாநில தலைவரையும் இந்த இரண்டு கழகங்கள் இணைந்து தாக்கியதே இல்லை. அப்போ இந்த நபரிடம் ஏதோ ஒன்று சரியாக இருக்கிறது. இவரது இலக்கை கண்டு பல அரசியல் தலைவர்களுக்கும் அச்சம் ஏற்படுத்தி இருக்கிறது. இரண்டு கழங்களை நேரடியாக ஒரு கோட்டில் எதிர்க்க துணிவதற்காக இவரை ஆதரிக்கலாம். 

குமாரசாமி காமராஜரை நம்பினோம்
குப்புசாமி அண்ணாமலையை நம்பலாம்

நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு

இந்த நபரை ஆட்டுக் குட்டி என்றே இவரது எதிர் கட்சியினர் கிண்டலடிக்கின்றனர். அதனால் "இந்த ஆட்டுக் குட்டி முட்டை போடும்" என்ற எமது கட்டுரையையும் படித்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவிடுங்கள்.


https://sakritease.blogspot.com/2022/09/this-goat-will-hatch-egg.html





No comments:

Post a Comment

Translate

Contact Form

Name

Email *

Message *