மோ க காந்தியும் மு க நிதியும் காளியின் ஊழி கூத்தும்
அன்னை காளியின்
சுடும்காட்டு தர்பாரில் தன் மிக விசுவாசமான படையினருக்கு தன் ஊழி ஆட்டத்தில் நடத்தவிருக்கும்
நாடகங்களை விளக்கி அதில் பங்கு பெறவிருக்கும் தன் அத்யந்த சீடர்களுக்கு அவர்களுக்கு
வழங்கவிருக்கும் கதாபாத்திரங்களை விளக்குகிறாள்.
"எனது
அருமை கணங்களே ! எனது ஊழித் தாண்டவத்தின் உக்கிரகத்தை கூட்ட முடிவெடுத்துள்ளேன். ஏற்கனவே
நம்மால் அனுப்பப்பட்ட இராபர்ட் கிளைவ் போன்ற வெள்ளைத் தோலிகள் மக்களை கொத்து கொத்தாக
கொன்று செல்வங்களை கொள்ளையடித்து எனது கோரப் பசிக்கு தினிப் போட்டார்கள்.
மனிதனை மனிதனே
அடித்துக் கொண்டு சாகும் வீண் போர்களை உங்களை கொண்டு கூட்டி கலியின் கொடுமையை என்னிடம்
பிறவி கேட்டு நச்சரித்து பிறந்த நரர்களுக்கு உணர்த்தப் போகிறேன்.
எனது எளிய
அன்பு பக்தனே ! நீ இப்போது பாரதம் எனும் தேசத்தில் பிறந்து மோ.க.காந்தி என்று அழைக்கப்படுவாய்.
அமைதிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவாய் "
மோ.க. காந்தி
" அன்னையே எனக்குப் புரியவில்லை. அமைதியின் வழியே எப்படி உங்கள் ஊழி ஆட்டத்திற்கு
வழி செய்ய முடியும் ???? "
" மகனே
!!! நீ எங்கெல்லாம் சென்று அமைதி அமைதி என்று கூறினாலும் அங்கெல்லாம் இரத்த ஆறு ஒடுமாறு
செய்ய நமது பிற கனங்களை அனுப்பி வைப்பேன். இதோ இவர்கள் எலிசபெத் ராணியாக, சர்ச்சில்,
ஹிட்லெர், ஸ்டாலின், முசோலினி என்று எந்த நேரத்திலும் போர்களை உருவாக்கி கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் மக்களை இரத்த வெள்ளத்தில் மிதக்கவிடுவார்கள் "
மோ.க.காந்தி
" அம்மா ! இத்தகைய நாசங்களில் மக்கள் மிஞ்சுவார்களா ? நரக வேதனையில் தவிக்க மாட்டார்களா
???"
காளி
" அன்பனே !! எனது அன்பு கோலத்தினை நீ அறியமாட்டாயா !!!!! இத்தகைய துன்ப நிலையிலும்
உன்னை போன்ற தவ வலிமை பெற்ற பலரையும் நான் அனுப்பி வைப்பேன். ஆன்ம நிலையில் உன்னத நிலை
அடைந்த வள்ளல் இராமலிங்க அடிகளார், இராமகிருஷ்ண பரம்ஹம்ஸர், அரவிந்தர், இரமண மகரிஷி
என்ற எண்ணற்ற மகான்களையும் துன்பத்திலிருக்கும் மக்கள் இன்பமுற நல்வழிப்படுத்த அனுப்பி
வைப்பேன். இது தவிர எனது மிக பிரியமான பக்தனான கவிஞன் காளிதாசனை மகாகவி பாரதி என்று
பலர் மனக் கவலைகள் போக்க என் நினைவூட்ட பாடல்கள் பண்ண வைத்து மக்களில் நல் வழியின்
மீது தீரா நம்பிக்கையுள்ளவர்களை நான் அரவணைப்பேன் "
மோ.க. காந்தி
: " இந்த பணியில் எனக்கு உதவிட மற்ற கனங்களையும் அனுப்பலாமே தாயே !!! "
காளி
" நிச்சயமாக ! உனக்கு வழிக்காட்டிட பா. திலகர், கோ. கோகலே. டால்ஸ்டாய், மற்றும்
உன் பணியில் உதவிட ச.ரா. சாரி, கு.கா. ராஜ், வ.பட்டேல், வ.உ.சி, சு. போஸ், மு. தேவர்
போன்றவர்களையும் அனுப்புவேன். உனக்குகூட இருந்தே எனது திருப்பணியை செய்ய மோ.ஜ.நேரு,
மொ.அ. ஜின்னா என்ற இருவரும், உன் பெயர் சொல்லி என் களப் பணியை மக்களை மதத்தின் பெயரால்
பிரித்து இரத்தக் களரி உருவாக்கி என்னை அனுதினமும் மக்கள் நொந்தே நினைக்கும்படி செய்வார்கள்
"
மோ.க. காந்தி
" அம்மா !!! எனக்கு இந்த தண்டனையிலிருந்து விடிவே கிடைகாதா ??? கேட்கவே என் மனது
மிகவும் பதறுகிறதே "
காளி
" என் பணியில் உன் மனது எப்பொழுதும் பதறக் கூடாது என்பதற்காகவே இந்த பயிற்சி.
உனது முயற்சியால் பலவற்றையும் முயன்று தோற்ற பிறகு இனிமேல் முடியாது என்ற தருணத்தில்
எனது முரட்டு பக்தன் ஒருவன் உன் பணியினால் வெறுப்படைந்து உன்னை என்னிடம் அனுப்பி வைப்பான்
"
இப்படி பல வருடங்கள் இந்தியாவும் உலகமும்
பல போர் மேகங்களையும் கண்டபின் முதலாம் உலகப் போர் முடிந்து இரண்டாம் உலகப் போர் நடக்கும்
வேளையிலே காளிக்கு இந்த சூழ்நிலையில் வேகத்தை கூட்டலாம் என்று நினைத்தாள்.
காளி
" பக்தனே !!! வா !!! உன் பணி ஆற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. என் நாடகத்தினை
எப்பவும் இரசித்து கொண்டே இருந்தால் எப்படி ?? நீ போய் ஒரு நாடக கர்த்தவாகவே பிறந்து
உன் கடைசி மூச்சு உள்ளவரை நடித்துக் கொண்டே இருந்து எனது பணியை எளிமையாக்கிவிட்டு வா
!!!! ஊரில் ஒருத்தன் கூட ஒற்றுமையாய் இருக்கக் கூடாது புது புது காரணத்தை கண்டுபிடித்து
பிரித்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு ஏன் ? உனக்கு நான் தரப்போகும் பிள்ளைகளுக்கு
கூட ஒற்றுமை வந்துவிடாதபடி மூட்டிவிட்டு கொண்டே இருக்க வேண்டும். நிதி பற்றாகுறையான
குடும்பத்தில் உன்னை பிறக்க வைப்பேன். அதனால் உன் குடும்பத்தில் வரப் போகும் அனைவருக்கும்
நிதி, செல்வம் என்றே பெயர் வைப்பாய். எவ்வளவு நிதி கண்டாலும் உனக்கு இந்த பிறவியில்
திருப்தி வராது. அதனால் உனக்கு இந்த பிறவியில் மு.க. நிதி என்று அறியப்படுவாய்"
மு.க.நிதி
: " அப்படியே ஆகட்டும் தாயே ! தங்கள் சித்தம் என் பாக்கியம் "
காளி :
" முக்கியமான விஷயம் இந்த மோ.க.காந்தி மாதிரி என்ன படுத்த கூடாது. சதா சர்வ காலமும்
என்னையே நினைச்சுகிட்டு என் வேலைய முழுசா செய்ய விடமாட்டேங்கறான். அழிக்கவே விடமாட்டேங்கிறான்.
அதனால நீ இப்ப போய் மோ.க. செய்யற எதையும் இந்த மு.க. செய்யகூடாது. அவன் கண் தெரியுற
மாதிரி கண்ணாடி போட்டா நீ கண்ணே தெரியாத மாதிரி கருப்பு கண்ணாடி போட்டுக்க. இன்னம்
கேட்டா நான் இல்லவே இல்லனு அடிச்ச சொல்லனும், கடவுளை நம்புறவன் முட்டாள்னு அங்க அங்க
சிலை வைக்கனும். எப்படி வேணா வாழலாம், ஒழுக்கம் எல்லாம் வெறும் வெங்காயம்னு மக்கள்
எல்லாரும் நடந்துகிற மாதிரி நீ வாழந்து காட்டனும். புரியுதா ? மோ.க. ஆத்திகத்தின் பெயரால் செய்த்ததை காட்டிலும் நீ
நாத்திகத்தினால் நிலை நாட்ட வேண்டும் "
மு.க. நிதி
: " அய்யோ தாயே !!! உன்னை நினைக்காம இருக்க எப்படி என்னால முடியும். எனக்கு அப்படி
ஒரு பிறவியே வேணாம் தாயே "
காளி :
" டேய் உன்னை பத்தி எனக்கு தெரியாதாடா ???நீயும் ஒரு இறை தூதுவன் தான். முரண்களின் மொத்த உருவமா உன்னை உருவாக்கி
என்னை பத்தி புரிஞ்ச்சிக்க ஒரு வாய்ப்பு தரப் போறேன். உனக்கு இரண்டு வழிக்காட்டிகளை
தந்திருக்கேன் , ஈ.வெ.இரா. சாமி மற்றும் அ. துரைன்னு. இவங்க இரண்டு பேரும் "உள்ளொன்று
வைத்து புறம் ஒன்று பேசுதல் " என்கிற கலையை உனக்கு சொல்லிக் கொடுப்பாங்க. உனக்கு
என் நினைப்பு வரும் போதெல்லாம் தோள் இருக்குற துண்டு கிழ விழுந்தத எடுக்கிறாப்ல கிழ
தொட்டு கும்பிட்டுக்க. நீ போகாம உன்னோட குடும்பத்து பெண்கள என்னோட கோவில்ல உன் பெயருக்கு
அர்ச்சனை பண்ண வை, போதும். நான் எல்லாம் பாத்துக்கறேன் "
மு.க. நிதி
: "ஆத்தா !!! என் மேல உனக்கு என்ன கோவம் ஆத்தா ?? என்ன ஏன் இவ்வளவு பாவம் செய்ய
சொல்ற ??? "
காளி :
" இதெல்லாம் என் கலியுக விளையாட்டுடா !!!! நீ ஆட்சி செய்யுற பாத்துதான் மக்களுக்கு
கடவுளா விட்டா வேற வழியில்ல என்கிற எண்ணத்த ஏற்படுத்துவ. இது நீ எனக்கு செய்யுற மாபெரும்
தொண்டு. உன் ஆட்சியில தான் தெருவல்லாம் கூழ் வைப்பாங்க மைக் செட்டல்லாம் வைச்சு என்
புகழ பாட்டாப் போட்டு கதறி கதறி அழுது என் அன்பை பெற முயற்சிப்பாங்க. உன் பாவத்தையெல்லாம்
போக்க பல சாமியார்களையும் மகான்களையும் உன் வீட்டுகே வந்து உன் பாவங்கள போக்க வைப்பேன்
"
மு.க. நிதி
: "அம்மா !!! இவ்வளத்தயும் நான் மட்டுமே
செய்யனுமா ?? எனக்கு யாரும் உதவமாட்டங்களா ??? "
காளி:
" பக்தனே ! நான் எப்பவாவது என் பக்தர்கள தன்னந்தனியே தத்தளிக்க விட்டிருக்கேனா.
உன்னோட பணியை பரவலாக்க எல்லா இடங்களிலேயும் உன்னை முன்னோடியா கொண்டு இ.காந்தி, லா.யாதவ்,
ரா.காந்தி, சோ.காந்தி, ம.மோ. சிங், ச.பவார், ப.சி. தம்பரம், ஜெ.லலிதா, மு.யாதவ், தே.கவுடா,
ந. ஷெரிப், ம. ராஜபக்சே னு பலப் பல ஊர்கள்ல பல பல பேர்கள்ல நான் அனுப்பிகிட்டே இருப்பேன்.
இன்னம் கேட்டனா மோ.க.காந்தியோட அனுப்பின இரண்டு பேர் ச.ரா. சாரி யும் கு.கா.ராஜும்
நீ ஆட்சியில இருகிறதுக்கு உதவுவாங்க "
மு.க.நிதி
: " அப்படியே ஆகட்டும் தாயே !!! நான் திரும்பி வரும் போது "கலி முத்திருச்சு
தர்மம் செத்துருச்சு"னு புலம்ப வச்சு உன் ஆட்டத்தை எல்லோரும் காண துடிக்க வைச்சுட்டு
வரேன் தாயே "
காளி :
" டேய் ! முக்கியமா இந்த மோ.க.காந்தி என்ன அடிக்கடி "உண்ணாவிரதம்" இருக்கேன்னு
என்ன படாத பாடு படுத்தறான்டா. நீ அப்படியெல்லாம் படுத்தக் கூடாது. அவன தினம் தினம்
காப்பாத்தறதே பெரிய வேலையாப் போச்சு. நீ ஆட்சி பண்ணும் போது அண்டை நாட்டுல ஒரு பெரிய
ஆட்டம் போடுவேன், உன்ன எல்லோரும் கன்னாபின்னா திட்டுவானுங்க. ஆனாலும் நீ எதுவுமே நடக்காத
மாதிரி தலைமாட்டுல மனைவியையும் கால் மாட்டுல துணைவியையும் உட்கார வெச்சுகிட்டு கடற்கரையிலேயே
ஃபேன் போட்டுகிட்டு காலைல உணவுக்கும் மதிய உணவுக்கும் நடுவுல உண்ணாவிரதம் இருக்கணும்.
புரியுதா ! அப்பதான் உன் உடம்ப நிரந்திரமா புதைக்க கடற்கரையிலே இடம் தருவேன்.
"
மு.க. நிதி
: " அப்படியே செய்யறேன்மா !! நாம் எப்ப அங்கிருந்து கிளம்பனுமா ?? எனக்கு எப்படி
தெரியும் ?? ""
காளி :
" உனக்கு பல தடவ நாள் குறிப்பானுங்க. ஆனா என்னோட அதி தீவிர பக்தர்கள் டொ.ட்ர்ம்ப், வி.புடின், ந.
மோதி, ஷி. ஜின்பிங் எப்போ ஒண்ணா ஆட்சி செய்யறாங்களோ அப்ப உன் முடிவு நெருங்கிருச்சுன்னு
தெரிஞ்ச்சுக்கோ. இவங்க தான் அணு உலை, ஹைட்ரோ கார்பன் எடுக்கறேன், மீத்தேன் எடுக்குறேன்னு
பூமியில் ஒரு இடம் விடாம காட்ட அழிச்சு , மலையை கொடஞ்சு தண்ணிய கொட்டி , நாட்ட நகரமயமாக்கறேன்னு
மொத்தமா இயற்கையா இருக்கிறத வேகமா அழிக்கிறேன்னு முயற்சிப்பாங்க. நம்ப தம்பிங்க நம்பள
விட வேகம்னு தெரிஞ்சுகிட்டு ஒரு ஆடி மாசமா பாத்து ஆத்தா கிட்ட கிளம்பி வந்துடு"
மு.க. நிதி
: " அப்பெடியே செஞ்சுடறேன் ஆத்தா !!"
மிக சமீபத்தில் ஆத்தா என்னை அழைத்து
காளி :
" டேய் ! சகிருட்டிஸ் இங்க நடந்ததெல்லாம் பாத்த இல்ல !! அப்படியே இதை நாட்டுல
நடக்கிறதை பார்த்து மனசு உடைஞ்சு என் மேல் நம்பிக்கை இல்லாம போயிட்டு இருக்காங்க. இத
துக்ளக்ல வர மாதிரி எழுதி சில அன்பர்களுக்காகவாவது எல்லாம் என் ஆட்டம்னு தெரிவிடா
!!!!
சகிருட்டிஸ்
: அம்மா !! இப்ப துக்ளக் உன் பக்கத்திலதான் இருக்கிறார். அவர் மனசாட்சி பதூதாதான் இப்ப
பாத்துக்குறார். துக்ளகாவது சட்ட வல்லுனர் நியாயம் தர்மம் இதிகாசம் புராணம்லாம் எழுதுவார்.
இப்ப இருக்கிறவர் ஆடிட்டர் - எல்லாத்திலேயும் கணக்கு பாக்குகிறவர். இப்பதான் போன வாரத்திலே
சர்ர்குலேஷன் அதிகமாகியிருக்குன்னு சந்தோஷப்பட்டார்.
துக்ளக் : எனக்கு முன்னாடியே
தெரியும் எல்லா ஆத்தா விளையாட்டுன்னு. எனது முகமது பின் துக்ளக் நாடகத்திலேயே 1971ல்
இத பத்தி எழுதியிருக்கேன்னு. மொரார்ஜி தேசாய் கிட்ட கூட இந்த எமர்ஜன்சிக்கெல்லாம் காரணம்
ஆத்தாதான்னு விளக்கினேன். அதனாலதான் வாஜ்பாய் கூட இந்திரா காந்தி போக்ரான்ல் அணு குண்டு
வெடிசப்போ "துர்கா" தேவின்னு பாராட்டினார். இந்த பையன் இயற்கை விவசாயத்த
பத்தி எழுதினத நான் கூட 2016 ல துக்ளக்ல போட்டேன். கண்டன்ட (Content) பாத்தா 7-1/2 பக்க நாளேடு
போடனும்கிறாப்ல இருக்கு. எதுக்கும் பதூதாகிட்ட
சொல்லிப் பாக்கிறேன். அவருக்கு ஏற்கனேவே ஏகப்பட்ட வேலை இதுல ரிசர்வ் வங்கி இயக்குனரா
வேற ஆயிட்டார். அவரே கட்டுரையாளரா இருந்தப்போ எந்த போல்ட்(Bold) கன்டென்ட்ட(Content) பத்தியும் எழுதிடுவார்.
இப்ப அவரே ஆசிரியரானதால சிலர பத்தி எழுதறத தவிர்கிறார்ன்னு நினைக்கிறேன்.
அல்லாம் அவள்
செயல்.
No comments:
Post a Comment