Search This SAKRITEASE Blog

Monday, August 27, 2018

பின்னர் ஆயி விஜயனும் க மல காசனும் பக்கம் Pinnar ayi Vijayan Ka mala Kaasan Kerala floods


Kerala - man made floods 2018 - Root Causes listed
தனக்குத்தானே குழித் தோண்டிக் கொண்ட கேரளா !!!!!

கேரள வெள்ளம்!! சில சிந்தனைகள் படிங்கள் நண்பர்களே.....

இரண்டு லட்சம் கனஅடி நீரை வெளியேற்றி ஆலுவாவையும்...எர்ணாகுளம்...கொச்சியை வெள்ளக்காடாக்கிய இடுக்கி அணைமீது உனக்கு வராத கோபம் 

வெறும் 20 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றும் முல்லைப்பெரியாறு மீது வருகிறதென்றால் உன்மீது நாங்கள் எப்படி இரக்கங்கொள்ள முடியும்.

பம்பை ஆற்றையும் அச்சங்கோவிலாற்றையும் (Pamba & Acchan kovil rivers)  இணைத்து அதை தமிழ்நாட்டின் வைப்பாறோடு ( Vyppaaru ) இணைப்போம் என்று நாங்கள் ஒரு நூற்றாண்டாக கத்திக்கொண்டிருக்கிறோம்.அது உங்கள் செவிகளில் ஏறியிருக்குமென்றால் பம்பை இன்று வெள்ளக்காடாக மாறியிருக்காது.

மொத்தத்தண்ணீரையும் வைப்பாற்றில் ஓடவிட்டிருந்தால் காய்ந்துகிடக்கும் எங்கள் விருதுநகர் மாவட்டம் கடைத்தேறியிருக்கும்.

செண்பகவல்லி அம்மன்கோவில் அணைக்கட்டை உடைத்தெறிந்த உங்களையே திரும்ப கட்டித்தாருங்கள் என்று கதறினோம். கட்டுவதற்காக நாங்கள் கொடுத்த நிதி ஐந்துலட்சம்.ஆண்டு 1967.அதைக்கட்டி எங்களுக்கான தண்ணீரை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து கொடுத்திருப்பீர்கள் என்றால் இன்று சபரிகிரி அணையும் பிளீச்சிங் அணையும் இத்தனை வேகமாக நிரம்பியிருக்காது.

நெடுங்கண்டம் அருகே இன்று பெருக்கெடுத்து ஓடும் கல்லாறுத்தண்ணீரை மதுரை மக்களுக்கு குடிநீர் தேவைக்குத் தாருங்கள் என்று எம்ஜிஆரும் மதுரை மேயர் பட்டுராஜனும் கேரளாவிற்கு படையெடுத்தார்கள்.

அன்றைக்கு கேரள முதல்வர்களாக இருந்த அச்சுதமேனனுக்கோ...கருணாகரனுக்கோ எங்கள் கதறல் கேட்டிருக்குமென்றால் இன்று கல்லாறில் பெருகி ஓடும் நீரில் பெருமளவை மதுரை உள்வாங்கியிருக்கும்.

இன்று மூணாறையே மூழ்கடித்து ஓடும் குட்டியாறையும்...கன்னியாறையும்...நல்லதண்ணி ஆறையும் மூணாறு நகரிலிருந்து பெரியபாறை...நயமக்காடு...தலையாறு...லக்கம்...சட்டமூணாறு...பள்ளக்காடு வழியாக மறையூர் கொண்டுவந்து அங்கிருந்து கிழமேலாக நீண்டுகிடக்கும் பள்ளத்தாக்கில் ஓடச்செய்து அமராவதியோடு ( Amaravathi River )இணைத்திருக்க ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும் அதை நிராகரித்தது நீங்கள்.

வம்படியாக இந்த மூன்று பேராறுகளையும் மின்சாரத்தை தவிர எதற்கும் பயனில்லாத ஆனையிறங்கல் அணையோடு ( Anaiirangal dam) சேர்த்து செய்த அழிச்சாட்டியத்தால் மூணாறு (munnaru ) நிரம்பி வழிகிறது.

அச்சுதானந்தன் என்கிற அதிமேதாவி கேரளத்தை ஆளும்போது மண்வெட்டி கடப்பாறையோடு நாலைந்து மார்க்சிய குண்டர்களை அழைத்து வந்து செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணைக்கட்டை (adaviya nayinaar dam) உடைக்க அத்துமீறி தமிழக எல்லைக்குள்ளேயே வந்தார்.காரணம் அச்சங்கோவிலாறுக்கு செல்லவேண்டிய நீரை மறித்து தமிழகம் அணைகட்டியதாக அடாவடி செய்தார்.


பரம்பிக்குளம் ஆழியாறில் பிரச்சனை.(Parambikulam -aazhiyaaru )
.நெய்யாற்றின்கரை இடதுகால்வாயில் பிரச்சனை...அட்டப்பாடி அருகே முக்காலியில் பவானியை ( mukkali bhavani river) முன்வைத்து பிரச்சனை...பில்லூர் அணையில்  (Pillur dam )பிரச்சனை...இப்படியாக மலையாள நாட்டின் நீர்த்துரோகங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

தமிழர்கள் ஆதிகாலத்தில் வகுத்துத்தந்த நீர்மேலாண்மை எனும் அரிய தத்துவத்தை மலையாளச்சகோதரர்கள் இனியாவது உணரவேண்டும்.
இது வரைக்கும் யாரோ ஒரு தமிழ் நாட்டுகாரர் வாட்சப்பில் கேரளா தமிழ் நாட்டு இடையே இருக்கும் ஆறுகளை பத்தி தெளிவா தெரிஞ்சு எழுதியிருக்கார்.

இனிமே நம்ம எழுத்துங்கோ


"மிஸ்டர் விஜயன் ! காலம் காலமா நாங்க அனுப்பி தந்த சோத்தை அள்ளி தின்ன வாயி ! இப்போ நிங்கள் பின்னர் ஆயி !!! தொடச்சு போட்டு போங்கோ " என்று விசிறு பிடிச்ச தெனாலியாக கூவ தோனுதுங்கோ !! உங்க ஊரு நாறுதுங்கோ.

அத கூட்டி கழுவ நம்மவரையும் 25 இலட்சம் ருபாயும் அனுப்புரோமுங்கோ !!! அவருக்கு கேரளாவில மழை பெஞ்சாதாம் குளிருதாம்மா !!! இங்க வெள்ளம் வந்தா அவரு மய்ய அரசுக்கு கட்டின வருமான வரி நிறைய இருக்குதுங்கோ !!!

உச்ச நீதிமன்றமே தீர்ப்பு சொன்னாலும் அது குறிச்சு மறுபடியும் பேச்சு வார்த்தை நடத்த அவரு வருவாரு.  அவருக்குத்தான் பெரியாரை ரொம்ப புடிக்கும். வைக்கம் வரைக்கும் உங்க கக்கத்தில் இடுக்கி கொண்டு போய் முல்லை பெரியாறு அணை மேல வைச்சு இன்னம் ஒரு 25 வருஷம் பேச்சு வார்த்தை நடத்துங்க.

பின்னர் ஆயி விஜயனும் க மல காசனும்  பக்கம் 2 /3


சபரிமலையும் விஞ்ஞானமும் :

எங்கள் ஊர் போலி நாத்திகரை சபரிமலைக்கு கூட்டிக் கிட்டு போய் விஞ்ஞான ரீதியாக ஆராய சொல்லுங்க.  

அவருக்குத்தான் பெண்களை பற்றி உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அதிகம் தெரியும். மாதவிடாயின் போது பெண்களக்கு உடலியல் உளவியல் ரீதியாக பல மாற்றங்கள் உண்டாகும். அதுவும் பல சக்திகளை ஈர்க்கக் கூடிய தன்மை அதிகமாக இருக்கும்.  இதனாலேயே  அந்தக் காலத்தில் அவர்களை ஊருக்குள் ஒரு ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில் ஈர கோணி கட்டி இருப்பார்கள்.  இந்து மத கோவில்களில் கடவுளின் மூல விக்கிரங்களில் சித்தர்கள் தவ வலிமையினால் பெற்ற சக்தி அனைத்தையும் இறக்கி இருக்கிறார்கள்.

மாதவிடாயின் போது பெண்கள் இந்த சிலைகளின் முன் வந்தால் அவர்கள் உடம்பு இந்த காந்த அலைகளை அதிகம் ஈர்க்க நேரிடும்.  திடீரென்று மாறிடும் சக்தி நிலையால் அவர்கள் உடம்பாலும் மனதாலும் பெரிதும் பாதிக்கப்படலாம். அதனால் தான் சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரை மாதவிடாய் வரக்கூடிய வயது பெண்களை அனுமதிக்காமல் இருந்தார்கள்.

இந்த இணையதளத்தை கொஞ்சம் படிங்க :

உச்ச நீதிமன்றத்தில போய் தப்பு தப்பா வாதாடி இப்ப சபரி மலைக்கு யாருமே போக முடியாதபடி செஞ்சுட்டீங்க. ஒரு வேளை அது தான் உங்க அடிப்படை நோக்கமேவா ??? காலம் காலமா இங்குள்ள மதங்கள வேரறுக்கறதானே உங்க வேலையே. இதுக்குதானே மத்திய ஆசியா நாடெல்லாம் உங்க நிறுவனத்துக்கு வாரி வழங்குது.

மேலும் நம்ம ஆளு எப்பவுமே ரொம்ப தெளிவானவரு - சினிமா என் தொழில் அது நான் காசு சம்பாதிக்கிறதுக்காகத்தான் செய்கிறேன் தெளிவா விளக்கம் கொடுப்பாரு. மய்யத்தின் கொள்கை விளக்கப் பாடலான " காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது" ரொம்ப காலம் முன்னாலேயே தீர்க்க தரிசனமா பாடிட்டாரு.

அதனால உங்களுடய திடீர் கூட்டணியே சபரி மலை தானோ. அய்யா பாத்துங்கய்யா ! இப்படித்தான் ஆந்திராவில ஒரு ஆளு திருப்பதி வெங்கடாசலபதிக்கு போட்டியா கட்டறேன் கான்ட்ராக்ட் எடுத்தாரு. அவர் என்ன ஆனாருன்னு யாருக்கும் புரிபடலை. இப்ப தீர்ப்புக்கு  நீங்க போராடினத்துக்கே 100 வருஷமா பெய்யதாதெல்லாம் சேர்த்து வைச்சு கொட்டுது.  நம்மாள நம்பி கடவுள் இல்லைனு சபரி மலைல ஏறிட போறீங்க - அங்க அய்யப்பன புலி மேல பார்த்தவுடனே " நான் எப்போ இல்லன்னு சொன்னேன் இருந்தா நல்லாயிருக்குமேன்னு தான சொன்னேன் " அப்படி சொல்லிட்டு அய்யப்பனும் திருமாலின் மகன் தான் சொல்லிட்டு "பல்லாண்டு " பாடிட்டு ஒடி வந்துடுவாரு. நீங்க தான் அப்பறம் புலிக்கு பதில் சொல்லனும். உங்கள் அபூர்வ சகோதரரான அப்பு ஆப்பு வைக்கிறதல கில்லாடி. அய்யப்பன் மகிமையை உணறும்னா நம்ம யேசுதாஸ் அய்யாவின் பாட்டை கேட்டாலே போதுமே. எப்பவும் ஒரிஜினல் குரல் கொடுக்கிறவங்கள நம்புங்க முன்னாடி வாயசைக்கிறவன் வேண்டாம் ஆபத்து.


மீண்டும் மிஸ்டர் விஜயன் - நீங்க இப்ப ஆள்ற நாட்டோட தாய் மொழியான மலையாளத்திற்கே தாய் மொழியான தமிழ் மொழியை
அதாவது உங்க பாட்டி மொழி பேசும் எங்களை "பட்டி" "பாண்டி" "படிக்காதவன் " னு இகழாம, எங்க பாசத்தை ஏத்துகிடுங்க, ஆறுகள திருப்பி விடுங்க. இப்படி செஞ்சிங்கன்னா நம்ம நல்லசிவம் "பொழச்சுபோங்கன்னு" சொல்லிட்டு திரும்பிடுவான்.  

இல்ல மய்ய நாயகனை "உன்னால முடியும் தம்பி"னு உசுப்பேத்தி விட்டிங்கன்னு வைய்யி அந்த படத்துல கதாநாயகி பேர சுருக்கி கூப்பிட்ட மாதிரி தான் அவரு அரசியலென்னும் சாக்கடையில் விழுந்தபின் கூப்பிட வேண்டி வரலாம் .
 Unnal mudiyum thambi

No comments:

Post a Comment

Translate

Contact Form

Name

Email *

Message *