Search This SAKRITEASE Blog

Saturday, May 29, 2021

Xi Lanka

சீ ஸ்ரீ லங்கா

Xi Sri Lanka



லங்கையின் பாராளுமன்றத்தில் 25 மே 2021 கொழும்பு துறைமுக நகரத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்து இங்கு எந்த நாட்டு நாணயத்திலும் வியாபாரம் செய்யலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்ட சட்டத்தை வோட்டெடுப்பின் மூலம் சட்டம் செயலாக்கம் பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(https://www.seatrade-maritime.com/ports-logistics/sri-lanka-passes-controversial-port-city-bill )

ற்கனவே இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு அந்த நாடு இலங்கைக்கு வழங்கிய அமெரிக்க டாலர் 1.2 பில்லியன் கடனை திருப்பி அடைக்க முடியாமல் போனதால் சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டதாக 2018 ல் அறிவிக்கபட்டது.

 https://www.nytimes.com/2018/06/25/world/asia/china-sri-lanka-port.html

ப்போது கொழும்பு துறைமுக நகர சிறப்பு பொருளாதர மண்டலமும் மற்ற நாடுகளிடம் இலங்கையின் தேசியத்தை அடகு வைத்துவிட்டதாக இலங்கையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பரவலாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ந்தியாவிற்கும் சீனாவிற்கும் இந்தியாவின் வடக்கு எல்லையில் மட்டுமே இருந்து வந்த போர் மேக பதட்ட சூழ்நிலை இப்பொழுது இந்தியாவின் தெற்கு பகுதிக்கும் நீண்டதாகவே தெரிகிறது. ஏற்கனவே சீனா இந்திய பர்மா எல்லை வரை, பூடானின் எல்லையில் கிராமங்கள் அமைத்தும் மற்றும் கரோனா கிருமிகளை இந்தியாவில் பரவ செய்து இந்திய பொருளாதாரத்தை நலிவுற செய்தல் என்று பலவிதங்ககளிலும் தொந்தரவு தந்துக் கொண்டே இருக்கிறது. 

லங்கையில் ஏற்கனவே பல ஆண்டுகள் நடந்த சிங்கள- தமிழர்கள் மோதல் பல்லாயிரக்காண மக்கள் மாண்டும், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குடியேறிவிட்டனர். எஞ்சியுள்ளவர்களையும் ராஜபக்சே சகோதரர்கள் பல காரணங்களை காட்டி இம்சித்து வந்துள்ளனர். 

ந்த சூழ்நிலையில் நாட்டை,  இந்தியா முகாலயரிடமும் ஆங்கிலேயரிடமும் உள்நாட்டு பிரிவினைவாதிகளால் சிக்கியது போல், இலங்கையும் ஏற்கனவே ஆங்கிலேயரிடம் அடிமைபட்டு விடுதலை அடைந்திருந்தும் மீண்டும் உள்ளூர் ஊழல் அரசியல்வாதிகளின் சண்டைகளினால் சீனாவிடம் அடிமையாக்க தொடங்கியுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சிங்கார சீனன்

காகவி சுப்ரமணிய பாரதியார் " சிந்து நதியின் இசை" பாடலில் "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்” "  என்று மிக தீர்க்க தரிசனுத்துடன் அன்றே பாடினார். 



அன்றே கட்டியிருந்தால் இலங்கை உள்னாட்டு போர் நடக்காமலே கூட இருந்திருக்கும்.  தமிழர்கள் கொத்து கொத்தாக அழிந்தும் அகதிகளாக புலம் பெயர்ந்தும் தவித்தனர். இன்னும் சில வருடங்களில் சீனாவின் ஆதிக்கம் பெருக பெருக சிங்களவரும் அகதிகளாக ஓட வேண்டியது தான். உலகத்தில் இன்னும் சில நாடுகளில் தான் புத்த மதம் பெயரளவிற்காகவவது இருக்கிறது.  புத்தரின் உண்மையான அன்பையும் அகிம்சையும் உணராமல் வெறுப்பை மட்டும் உமிழ்ந்த சிங்களவர் புத்தம் பிறந்த மண்ணிற்கே அகதிகளாக வரவேண்டிய சூழ்நிலையை மஹிந்த ராஜ்பக்சே சகோதரர்கள் ஏற்படுத்திவிட்டார்கள். 

விசித்திரமான உண்மை என்னவெனில் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் மாமன்னர் இராஜ இராஜ சோழன், மஹிந்தன் என்ற சிங்கள அரசனை வென்றார். அந்த மஹிந்தன் மலைகளில் ஒளிந்துக் கொண்டதாக அன்றைய வரலாறு கூறுகிறது. அன்றும் புத்தர்களை மதம் மாற்றவோ அவர்களின் புத்த விஹாரங்களை இடித்தோ பெண்களை அவமான படுத்தும் எந்த சம்பவங்களும் சோழர்களின் பொற்கால ஆட்சியில் நடைபெறவில்லை. சைவத்தை உண்மையாக நேசித்து பெரிய கோவில்கள் மக்கள் நலனிற்காக தந்தார்கள்.  ஆனால் இத்தகைய நற் பண்புகளை நாம் சீ ஜின்பிங்கிடம் எதிர்பார்க்க முடியாது. 



மாமல்லைக்கு வந்து கலைகளை கண்ட சீ இப்பொழது இந்தியாவிற்கு தொல்லை தர கொல்லை புறத்திற்கு வந்துள்ளார். சீன பேரரசு என்ற கனவுடன் வலம் தரும் சீனா போர் முரசை ஏற்கனவே இமயமலை திபெத்து எல்லையில் கொட்டிவிட்டது.  ஆனால் தன் உள்நாட்டு மக்களின் பெரும் வெறிப்பிறகு ஆளாகியிருக்கும் சீன அரசு மக்கள் அடக்குமுறையை மீறி வெடிக்கும் போது பல சிறிய நாடுகளாக சிதறும் வாய்ப்பு அதிகம். 


க்கள் எல்லாம் "சீ" என்று ஒதுக்கும் முன் "சீ" மனம் திருந்தி பல சிறு நாடுகளின் மீது செலுத்தி வரும் ஆதிக்கத்தை நிறுத்திக் கொண்டு உலக அமைதிக்கு தங்கள் பங்காற்ற வேண்டும். பண பலமும் ஆயுத பலமும் கொண்டு உலகாள துடிக்கும் சிலரும் ஒரு சிறு கிருமி அளவிற்கு கூட நமது பலத்தினால் பயனில்லை என்பதை இனியாவது உணரவேண்டும். சிங்களவரும் உண்மையான புத்த தன்மையை உணர்ந்து இயற்கையோடு ஒத்து வாழ பழக வேண்டும். 

தேவை மனமாற்றம். 

2 comments:

Translate

Contact Form

Name

Email *

Message *