Search This SAKRITEASE Blog

Friday, May 14, 2021

Vacant Jeeyar Post

 

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கநாராயண ஜீயர் இடத்துக்கு தகுதியான நபர்கள் வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

கடந்த மே 6ஆம் தேதி, “ஸ்ரீரங்கம் கோயிலுக்கு உட்பட்ட 51 ஆவது ஜீயர் இடம் காலியாக இருப்பதால் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அறங்காவலர் வேணு ஸ்ரீனிவாசனும், இணை ஆணையரும் வெளியிட்டிருந்தார்கள்.

ராம பானம் என்னும் அமைப்பின் தலைவரும், ஸ்ரீரங்கம் கோயிலில் நடத்தப்படும் வைணவ சம்பிரதாய அத்துமீறல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவருமான வழக்கறிஞர் திரு. ரங்கராஜ நரசிம்மன் தனது வீடியோ பதிவில் "பைபிள்" விற்ற திரு. வேணு ஸ்ரீனிவாசன் சட்டவிரோத அறங்காவலர் குழு தலைவராக இருந்துக் கொண்டு சமயத்திற்கு எதிராக செயல் படுவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். 

https://youtu.be/_6pmGDY5pp0

வேணு ஸ்ரீனிவாசன்  !!! உங்களுக்கு இதெல்லாம் வேணுமா ஸ்ரீனிவாசன் !!!!

ஏதோ "அப்பாச்சி" பைக் உற்பத்தி செய்றீங்கன்னு பாத்தா உங்க "அப்புச்சி" பரம்பரை சம்பாதித்த பெயர எல்லாம் எதை சம்பாதிக்கறதுக்கா இழக்கறீங்க ?? தமிழ்நாட்டிற்கே "நேரம் தவறாமை" என்ற சமயத்தின் நேரத்தை உணர்த்திய " திருக்குருங்குடி வெங்கரம் சுந்தரம் ஐயங்கார்" நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை எந்த மரத்தில் மோத இந்த வேகத்தில் பயணிக்கிறீர்கள் ? ஏற்கனவே ஒரு முன்னாள் அய்யங்கார் வாசுவும் இல்லாம யேசுவில்லாம மய்யமாய் போய் மண்டைய பிச்சுண்டு இருக்கிறார்.  "ராம்" என்று பெயர் வைத்த ஒரு முன்னாள் அய்யங்கார் "தி இந்து" என்றாலே வெறுக்கிறார். 

அரங்கனை வெறுத்து விட்டதாக அரங்கம் ஏறி முழங்கிய பின் எதுக்கு அறங்காவலர் பதவி ??? உங்கள் மனதிற்கு இதமான எந்த மார்கத்தில் வேண்டுமானால் செல்லுங்கள். நீங்கள் வழக்கமாக வேகமாக பைக் ஓட்டும் கிழக்கு கடற்கரை சாலை மார்கத்திலேயே சென்று மாலத்தீவிற்கு கூட சென்று விடுங்கள். ஆனால் காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையே உள்ள "திரு மாலின் தீவை" விட்டு செல்லுங்கள். 

மதம், மார்க்கம் அனைத்தும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை விடுத்து அடுத்தவர் நம்பிக்கையில் இந்த இடத்தில் தென்கலை வைணவர்களின் மதத் தலைவர் நியமனத்திற்குள் மூக்கை நுழைப்பது வன்முறை. இது கலாச்சார, சம்பிரதாய, மரபை மீறும் வண்புணர்வாகும்.  புது ஜீயர் தேர்தெடுக்க வைண பெரியவர்கள் வைணவ ஆச்சார்யர்களின் பரி பூரண ஆசியுடன் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள்.  

சீர் அரங்கத்து பெருமாளை குண்டு கொண்டு துளைப்பேன் என்று முழங்கிய முத்தையாவெல்லாம் "கண்ணதாசன்" ஆகி "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களை" எல்லாம் கட்டி தழுவியதை இந்த தமிழகம் கண்டுவிட்டது.

முத்துவேலரின் பேரர்கள் கூட இன்று அலகு குத்தி வேல் தூக்கி காவடி எடுக்க தயாராகிவிட்டார்கள்.

இப்பொழுது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக் கூட காலியாக இருக்கிறது. இந்த பதவிக்கு திரு மோடி தலைமையிலும் செல்வி மமதா பானர்ஜி தலைமையிலும்  ஒரு குழு வைத்து தலைவரை தேர்தெடுத்தால் ஒத்து கொள்வார்களா ?

அதிமுக பொது செயலாளர் பதவி 4 ஆண்டுகளாக காலியாக உள்ளது. ஏன் திரு.முக ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து ஒருவரை தேர்தெடுக்கலாமா ?

"துக்ளக்" வார இதழ் ஆசிரியர் பதவி  4 ஆண்டுகளுக்கு முன் காலியானது.  நல்ல வேளை அதற்கு திரு. கீ. விரமணி & நக்கீரன் கோபால் தலைமையில் குழு அமைத்து அடுத்த ஆசிரியரை தேர்ந்தெடுக்காமல் விட்டீர்களே !!!  

கடவுளை நம்பாதவன் கடவுளின் வழிப்பாட்டு தலத்திற்கு வர வேண்டிய அவசியமென்ன ? மற்ற நம்பிக்கை உள்ளவர்களின் நம்பிக்கையை குலைக்க முற்படுவது வன்முறைக்கே வழிவகுக்கும். இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ நாம் இந்த கரோனா பெருந்தொற்றில் சிக்கி தவிக்கின்றோம். அன்பை மட்டும் விதைப்போம். பண்போடு வாழ்வோம். 

இது சேர , சோழ, பாண்டி, பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்த உன்னத ஆன்மீக மண். அன்றைய அரசர்கள் ஆட்சியை அதிகாரமாக பார்க்காமல் அது தமக்கு இறை அளித்திட்ட இறைப்பணியாகவே பார்த்தனர்.  ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகத்தை இணைத்தே செய்தனர். ஆனால் மன்னராட்சியில் வழிப்பாட்டு தலங்கள் அரசாங்கத்தை சார்ந்தே இருந்தன மக்களாட்சியில் பல் வேறு மதங்கள் வந்து மதமாற்ற முயன்று வரும் சூழ்நிலையில் எல்லா மதங்களுக்கும் இருக்கும் சுதந்திரம் இந்து மதத்தினருக்கும் இருக்க் வேண்டும். இந்துக்களின் கோவில் இந்துக்களாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும்.

இசுலாமிய , கிறித்துவ மத வழிப்பாட்டு தலங்களை நிர்வகிப்பதில் பல சிக்கல்கள் இருப்பது போல் இந்துக்களிடையேயும் சில வேற்றுமைகள் நிர்வகிப்பதில் எழவே செய்யும் ஆனாலும் இந்துக்களும் பொறுப்பாக நடக்க வேண்டும். 

சகிருட்டிஸ்

6 comments:

  1. அருமை அற்புதம், இவ்வளவு கோபம் வேண்டுமா. அழகு சொல்லில் சொல்லலாமே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. கோவமாக எந்த சொல்லையும் பயன்படுத்தவில்லையே ???

      Delete
  2. Good article. People should realise their responsibility to respect other religions.

    ReplyDelete

Translate

Contact Form

Name

Email *

Message *