அத்திவரதர் aththivarathar
வரதா வரதா உன்னை பார்க்க
வரதா வேண்டாமா என்று
எண்ணும் அளவிற்கு
எண்ண முடியாத கூட்டம்
கச்சி ஏகம்பனையும்
காஞ்சி காமாட்சியையும்
40 வருடங்களாக தரிசித்தவர்
உன்னை 48 நாட்களில்
காண ஒடி வந்துவிட்டனரோ!!!!
ஆயர்பாடியிலிருந்து கண்ணன்
வந்திருந்தால் அவன் குழலில் ஊத
காற்றே இருந்திருக்காது
இராமன் வந்திருந்தால்
அவன் வில்லே முறிந்திருக்கும்
கயிலையின் நாயகன் வந்திருந்தால்
அவன் கங்கை தொலைந்திருப்பாள்
பிறையை காணாது வையமே இருண்டிருக்கும்
சூரியன் வந்திருந்தால் அவன்
குதிரைகளின் கால்கள் தளர்ந்திருக்கும்
நாக்கே தள்ளிடினும்
உன்மீது நம்பிக்கை
உந்தி தள்ளியதால்
நாலு இலட்சம் பேர்
நாள்தோறும் வந்தனரே
கறுத்த சிறுவனை
சுமந்த சுந்தரியும்
நின் கருத்த திருமேனிகாண
நிற்க துணிந்ததால்
படுத்தவனை காணாமல்
நின்றவனை காண விழைந்தோம்
நீள் நெடுந் தெருவில்
நீண்ட வரிசையில்
நண்டும் சிண்டும்
நடை தளர்தாலும்
நரை விழந்தாலும்
நாராயணனை
நம்பியவர் பலரும்
நடுநிசி தாண்டிடினும்
நாற்பதாண்டுக்கு பிறகு
நொடிக்காவது காண
நெடுமாலும் காத்திருந்தாரே
வரதா வேண்டாமா என்று
எண்ணும் அளவிற்கு
எண்ண முடியாத கூட்டம்
கச்சி ஏகம்பனையும்
காஞ்சி காமாட்சியையும்
40 வருடங்களாக தரிசித்தவர்
உன்னை 48 நாட்களில்
காண ஒடி வந்துவிட்டனரோ!!!!
ஆயர்பாடியிலிருந்து கண்ணன்
வந்திருந்தால் அவன் குழலில் ஊத
காற்றே இருந்திருக்காது
இராமன் வந்திருந்தால்
அவன் வில்லே முறிந்திருக்கும்
கயிலையின் நாயகன் வந்திருந்தால்
அவன் கங்கை தொலைந்திருப்பாள்
பிறையை காணாது வையமே இருண்டிருக்கும்
சூரியன் வந்திருந்தால் அவன்
குதிரைகளின் கால்கள் தளர்ந்திருக்கும்
நாக்கே தள்ளிடினும்
உன்மீது நம்பிக்கை
உந்தி தள்ளியதால்
நாலு இலட்சம் பேர்
நாள்தோறும் வந்தனரே
கறுத்த சிறுவனை
சுமந்த சுந்தரியும்
நின் கருத்த திருமேனிகாண
நிற்க துணிந்ததால்
படுத்தவனை காணாமல்
நின்றவனை காண விழைந்தோம்
நீள் நெடுந் தெருவில்
நீண்ட வரிசையில்
நண்டும் சிண்டும்
நடை தளர்தாலும்
நரை விழந்தாலும்
நாராயணனை
நம்பியவர் பலரும்
நடுநிசி தாண்டிடினும்
நாற்பதாண்டுக்கு பிறகு
நொடிக்காவது காண
நெடுமாலும் காத்திருந்தாரே
அத்தி வரதரே
அபய வரதரே
இருண்ட சாலையில்
இருள் கவிழ்ந்தபோதும்
அருள் ஒளிப்பாய்ச்சி
அருமை உணர்த்திய
அண்ணலே இனி
அத்திமரம் தோறும்
அருட் தோற்றம் தெரிய
அருள்வீர் நரன் தொழும்
நாரணா.
காத்திருந்தோரை வழிநடத்திய காவலரும்
காலில்லோதோருக்கும் தாங்கி தரிசிக்க
தூக்கிய காவல்தெய்வங்களே போற்றி
இரவு பகல் துஞ்சாது பெருமாளின் அருளை அள்ளி வழங்கிய அந்தணர் அனைவரும் குவிந்த மனிதரால் குவிந்த
குப்பைகள் நீக்கி பலபல பணியில் ஆற்றிய பலரையும் குவிந்த கரங்களால்
எடப்பாடியார் முதல் இடுப்பொடிய
பாடுபட்டு பரந்தாமனை காண வழிசெய்த அனைவரையும் வணங்குவோம் .
No comments:
Post a Comment