Search This SAKRITEASE Blog

Saturday, June 25, 2022

Kapil the DEVILery of Cricket

 A Committed Sinner Par Excellence


Everyone of His Delivery

was an art of DEVILery

His every Outswinger

was India's mood swinger


He appeared on ad of shaving cream

every forest was shaven till we scream

Every tree was cut for a willow

Every street had a fellow

who will stroke a unseen ball

to sixer


every teen became azharuddin

every ghar had one tendulkar

Every traffic policeman had a Prayer

Let's play everyday a one dayer

No road had traffic

cricket fever became terrific

That red cherry 

was corona of 83


Streets were full of sons

every dozen became an opposition

Every moment in Sun

were cherished as fun


Sinner didnt lose his sight

for everyone's delight

threw his weight

showed India's Cash under the Light


Till that day ( 25 June 1983)

when Lloyd Marshalled

his last gentlemen

Till that Moment

Vivian was Caught

by that acumen



Cricket was a Game

played Under Lord('s) Sun

still the Man with Toothful Grin

Kapil Dev ka Jawab Nahin


Oh Lord Kapil Dev ( Lord Siva )

Save us from Lord's Kapil Dev

The Cricket -The Endemic Fever of India


sakritease 25 June 2022


Sunday, May 22, 2022

SriSinka Thoththa paya

 ஸ்ரீசிங்கா தோத்தபய ராஜபக்சே


இன்றைய நிலையில் ஒரே ஒரு நாளைக்குத்தான் பெட்ரோல் இருப்பதாக இலங்கையின் புதுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக இலங்கையின் பொருளாதார நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இளவரசன் சித்தார்த்தன் போதி (அரச) மரத்தடியில் ஞான நிலையை  தமிழ் மாதமான வைகாசி விசாகத்தில் முழு நிலவு நாளன்று (16.5.2022 ) அடைந்ததாக உலகம் முழுவதும் பௌத்தர்கள் இரண்டு நாட்கள் முன்னதாகத்தான் கொண்டாடினர். புத்த மதத்தை தழுவிய இலங்கை சிங்களவர்களால் இந்த பௌர்ணமியை மனதார கொண்டாட முடியவில்லை.

புத்தனின் அக விரிவாகத்தை உள்வாங்காமல் போன புத்தனை வணங்கும் சிங்களவர் உள் விரியாமல், ஆதிக்க வெள்ளை தோல் மயக்கத்தில் இன்றும் அடிமையாய் பிரித்தாளும் அயல் நாட்டு சதிகளில் சிக்கி சிங்களர், தமிழர், இஸ்லாமியர் என்று பன்முனை வன்முறைக்கு உள்ளாகி பொருளாதாரம் சின்னாபின்னமாகி உள்ளது. 

இலங்கை இந்தியாவின் கேரளாவை ஒத்த மலை சீதோஷண நிலையில் அற்புதமான பல மூலிகைகளை இயற்கையாகவே உற்பத்தி செய்து பல நாடுகளுக்கு இந்தியாவை போன்று மிளகு, ஏலக்காய் போன்ற அடர் காடுகளில் இயற்கையாய் வளர்ந்த தாவரங்கள் கொண்டு தனது பொருளாதாரத்தை சோழர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலங்களுக்கும் முற்பட்டு இயற்கையால் வார்த்தெடுக்கப்பட்ட சொர்க்க பூமியாக இருந்தது. 



17-18 நூற்றாண்டுகளில் சீனாவை பலமுறை ஆக்கிரமிக்க முயன்றும் தோற்ற ஆங்கிலேயர்கள் , சீனாவை பொருளாதார ரீதியாக முறியடிக்க சீனாவின் ஏற்றுமதியில் முதல் இடம் பெற்ற தேயிலையை உறபத்தி செய்ய, இலங்கையின் மலை பிரதேசங்களில் தேயிலை உற்பத்தியை தொடங்கியது. இந்தியாவில் இதே காலகட்டத்தில் நீலகரி, டார்ஜிலிங் போன்ற மலைகளிலும் தேயிலை உற்பத்தியை துவக்கியது.  தேயிலை மரத்தை 4 அடிக்கு மிகாமல் வெட்டப்படுவதால் அந்த மரங்களால் மலைகளில் கூடும் மேகங்களை ஆறாக்க முடியாமல் போனதால் மழை பொழிவு குறைந்தது.  மழை பொழிவும் , ஆறுகளின் ஓட்டமும் குறைந்ததால் பல விவசாய விளைச்சல்களும் குறைந்து இலங்கை ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகமானது. இலங்கை வாழ் மக்களும் இயற்கையோடு ஒத்து வாழ்ந்த அற்புத நுகர்வு குறைவான வாழ்க்கைமுறைகளிலிருந்து மாறி அதிகமாக இயற்கையை நுகரும் ஐரோப்பிய அமெரிக்க கலாசாரத்தை பின்பற்றி இப்போது தற்சார்பு வாழ்க்கை முறையை இழந்து உலக நாடுகள் கொடுக்கும் கடன் பத்திரங்களில் கடன்பட்டு திருப்பக் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறது.

பிரபஞ்சத்தில் அனைத்தும் உயிரகளிடத்தும் அன்பை போற்றிய புலாலை மறுத்த புத்தனின் அகிம்சையை மறந்த சிங்களவரும்,  சைவத்தின் தலைமை பீடமாக கொண்ட யாழ்பாணமும் திரிகோணமலையும் அதன் உன்னத தத்துவங்களை மறந்த தமிழருக்கும் 1980களில் தீவிரமடைந்த உள்நாட்டு சமய, சித்தாந்த போர் 2009 ல் உச்சகட்டம் அடைந்து போர் தளவாடங்களை வாங்கி சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷியா என்ற பல நாடுகளிலும் கடன் வாங்கி தங்களை தாங்களே அழித்துக் கொண்டனர். இதன் உச்சகட்டமாக குடும்ப அரசியல் கும்பல்கள் நாட்டின் சொத்துகளை களவாண்டு தங்கள் குடும்பத்தாருக்காக சொத்துகள் பல நாடுகளிலும் சேர்த்து,  சொந்த நாட்டு மக்களை கடனில் இலவச பொருட்களில் ஆசைகாட்டி மயக்கமுற செய்து நாட்டை சூறையாடியுள்ளனர். அரசு பதவிகளில் குடும்ப அரசியல் நுழைந்து மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்கும் நாடுகள் அனைத்தும் இலங்கையின் இன்றைய நிலையை அடையும் என்பது யதார்த்தம்.


"ராஜராஜன்" பெயர் பொறித்த கல்வெட்டு 
இலங்கையின் பிரதமர் பதவியை மக்களின் போராட்டத்திற்கு பயந்து விட்டு விட்டு ஒடியுள்ள "மகிந்த" ராஜபக்சே மற்றும் குடும்பத்தினர் , தமிழ் எழுத்தாளர் திரு. கல்கி அவர்களின் அற்புத படைப்பான "பொன்னியின் செல்வனில்" இராஜ இராஜ சோழனின்  படைகளுக்கு அஞ்சி இலங்கை மலைகளில் தலைமறைவான "மகிந்தன்" என்ற இலங்கை அரசனை நினைவூட்டுகின்றார்.  என்ன ஒரு பெயர் பொருத்தம். 


ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மகிந்தனின் செயல்பாடுகளில் மாறுதல் இல்லை. மகிந்தர்கள் என்றும் மக்களின் பொது நன்மைக்காக என்றும் ஆட்சி நடத்துவதில்லை. தங்களின் தங்கள் குடும்பத்தினரின் ஆடம்பர வாழ்க்கைகாக தங்கள் ஆட்சியின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கையை அடகு வைத்து அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்குகின்றனர்.  இராஜ இராஜ சோழன் போன்ற பேரரசர்கள் தங்கள் குடிமக்கள் நன்மை கருதி பல நீண்ட கால தொலை நோக்கு உள்ள திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.  காவிரி என்ற ஆறு வளப்படுத்தியதால் சோழ வளநாடு உணவு தானியங்கள் உற்பத்தியில் பெரும் தன்னிறைவு கண்டது. தன் நாட்டு மக்களுக்கு எடுத்துக் கொண்ட தானியங்களில்  மித மிஞ்சியவற்றை 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுமதி செய்துள்ளனர். அவற்றை கடல் கொள்ளையர்கள் கொள்ளை அடிப்பதை தடுக்க அவர்கள் கடற்படைகள், கப்பல் கட்டும் தளங்களை நிறுவி தங்கள் வளத்தை பலருடன் பகிர்ந்துள்ளனர்.  

மன்னராட்சியில் தன்னை நோக்கி மன்னர் பதவி வந்தும் அதனை மக்கள் மூலமாக குடவோலை முறையில் ஓட்டெடுப்பு நடத்தி தான் பதவி ஏற்பதை அந்த மாமன்னர் இராஜ இராஜ சோழர் மக்களாட்சி நடத்தி உறுதிபடுத்தியிருக்கிறார்.  அரசன் என்ற அகம்பாவம் துளியும் இன்றி அனைத்தும் இறைவன் என்னும் இயற்கையின் பேராற்றல், மக்கள் அதனை போற்றி அந்த இறைவனின் திருப்பணியாக மக்கள் சேவையாக வாழ்க்கையை இறைபணியாக வாழ வேண்டும் என்று தஞ்சையில் பெரூவுடையார் - சிவ பெருமானை - பிருமாண்டத்தை விளக்கும் விதமாக ஒரு பெரிய கோவிலை அமைத்து, அதனை மையமாக வைத்து நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்துள்ளார். அனைத்து செயல்களிலும் இறைவனின் பேராற்றலை ஒவ்வொரு கணமும் போற்றி வாழும்படியாக வாழ்ந்ததால் அந்த நாட்டில் மக்களிடம் பொறுப்புணர்வும் கலையுணர்வும் காவிரி ஆறு போல் பெருக்கெடுத்துள்ளது.  பல நாடுகளுக்கும் தமிழர்களை விவசாயம் செய்ய, சொல்லிக் கொடுக்க ஆங்கிலேயர் தேர்ந்தெடுக்க இதுவே காரணம். இதனாலேயே இலங்கை, மலேசியா, மொரீசியஸ், தென்னாப்ரிக்கா என்ற பல நாடுகளிலும் தமிழர்கள் வாழ்வியல் பரவியுள்ளது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் "மகிந்தனின்" எண்ணம் மாறவில்லை, இலங்கை இன்றும் நல்ல ஆட்சியாளர்களை தேடிக் கொண்டிருக்கிறது.  அதே போல் ஆயிரம் ஆண்டுகளின் பின்பு மீண்டும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் "ராபர்ட் ஹான்சன்" ஆக பிறந்தாலும் இதே இலங்கைக்கு அந்த இராஜாதி இராஜன் தன் குருவான "யோகசுவாமி" என்ற சைவ சித்தாந்த குருவை நாடி வந்து சிவாய சுப்ரமணிய சுவாமியாக அவதாரமெடுத்து சைவ சித்தாந்தத்தை உலக மெங்கும் 50 இடங்களில் "இறைவனார் திருக்கோவில்" களை நிறுவி நல்லெண்ணங்களை பல கோடி மக்களின் மனத்தில் நிறுவி அதற்கு தலைமை பீடமாக ஒருங்கிணைந்த அமெரிக்காவில் உள்ள  ஹவாய் தீவில் குஹ்வாய் மடத்தினை நிறுவியுள்ளார்கள். அரசனாக பிறந்தாலும் எளிய தொண்டனாக தன்னிரகற்ற சேவை செய்வபர்களால் மட்டுமே இந்த பூமி வளம் பெரும்.  (  இவரை பற்றிய இணைய குறிப்பு Sivaya_Subramuniyaswami ) 

இதற்கு பொதுமக்களின் பார்வை,எண்ணம் குறைந்த கால லாபங்களை, இலவசங்களை நாடாமல் உயிரினங்களின் நீண்ட கால நன்மையை கருத்தில் கொண்டு வாழ்வோமானால் நம்மிடையே பிறக்கும் அரசியல்வாதிகளும் எண்ணங்களில் செயல்களில் விரிவார்கள். 

இன்றைய அரசியல்வாதிகள் பலரிடமும் காணப்படும் அனைத்து பேராசைகளும், அடாவடிகளும், அட்டூழியங்களும் சாதாரண குடிமக்கள் பலரிடம் நிறைந்திருக்கும் குணங்களின் பிரதிபலிப்பே.  நாம் எல்லோரும் மக்கள் அனைவரும் நல்லவர்கள் போலவும் தலைவர்கள் அனைவரும் கெட்டவர்கள் போல சித்தரித்து கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.  நம்மிடைய நன்மை மிகுந்தால் "இராஜ இராஜ"ர்கள் ஆட்சிக்கு வருவார்கள். நம்மிடையே தீமை மிகுந்தால் "மகிந்த"ர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். 

 அனைவரும் இறைவனின் (இயற்கையின்) அற்புத படைப்பு என்ற மன பக்குவ கண்டு தொலை நோக்கொடு அனைவரோடு பகிர்ந்து வாழும் உண்மையான நாகரீகத்திமான ஆப்பரிக்க பழங்குடி மக்களின் "யுபுந்து" என்ற தத்துவப்படி இயற்கையிடம் குறைவாக நுகர்ந்து அவரவர் வாழும் இடங்களில் இயற்கையாக விளையும் பொருட்களை உண்டு வாழ்ந்து மனிதப் பிறவி என்ற அற்புத வாழ்வை போற்றி இந்த உலகத்தில் அனைத்து உயிரினங்களும் எந்தவித பயமுமின்றி வாழ எல்லாம் வல்ல இயற்கையின் பேராற்றல் அருள் புரியட்டும்.

ஒரு மானுடவியலாளர் பல ஆப்பிரிக கோஹ்சாஹ் வனவாழ் குழந்தைகளிடம் ஒரு ஓட்டபந்தய போட்டியை அறிவித்தார். முதலில் ஓடி வருபவர்களுக்கு பலவித பழங்கள் வழங்கப்படும் என்றார். உடனே அந்த குழந்தைகள் அனைவரும் கைகளை ஒன்றாக கோர்த்துக் கொண்டு ஒன்றாக இலக்கை அடைந்தனர். "ஏன் இப்படி ஒன்றாக ஓடி வந்தீர்கள் ? யாராவது ஒருவர் எல்லோரையும் முந்தி வந்திருந்தால் அவர் அனைத்து பழங்களையும் உண்டிருக்கலாமே ?" என்று கேள்வி கேட்டார். அதற்கு குழந்தைகள் " உபுந்து !!  மற்ற அனைவரும் வருத்தமாக இருக்கும் போது ஒருவர் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் ?? " என்று உற்சாகமாக பதில் கேள்வியை நமது மனித குலத்தின் நோக்கி வீசினர். உபுந்து என்றால் நான் என்பது இந்த சமுதாயத்தின் பிரதிபலிப்பு.  


"உபுந்து" என்பது கிட்டத்தட்ட மகாகவி சுபரமணிய பாரதியார் கூறியதை போல் "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற கோட்பாடின்படி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது.  இன்றைய நிலையில் நாம் நாகரீக உலகில் வாழ்வது போல் அலட்டிக் கொண்டு அநாகரீகமாக மலைகளை வெட்டி குவாரிகள் ஆக்கி மரங்களை வெட்டி சவப் பெட்டிகள் அலங்காரங்கள் செய்து வாழ்ந்து வருகிறோம். ஆப்பரிக்க காடுகளில் தான் இன்றும் சில நாகரீகமான மனிதர்கள் இயற்கையோடு மிகவும் ஒன்றி மிக குறைந்த நுகர்வு முறையில் இயற்கை அளிப்பதை மட்டும் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்க்கிறார்கள்.

தனக்காக வாழ்பவர் அனைவருமே "தோத்தபய" தான். அதுவரை இந்த பூமி ஒரு "ஸ்ரீசிங்கா" தான். மனிதம் என்பது மூழ்கிய "சிங்க்" (sink ) தான்.


சகிருட்டிஸ் 

sakritease May 2022

Monday, May 2, 2022

Ramadan wishes

 


கடந்த 30 நாட்களாக பகலில் விரதமிருந்து எல்லாம் வல்ல இறைவனை சிந்தையில் நிறுத்தி ஐந்து வேளைகளில் தொழுது தம்மை இறைவனின் திருதொண்டராக்கும் முயற்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். சில தடங்கல்களால் முழுமையான விரதம் இருக்க முடியாமல் போனவர்களுக்கும் இறை பேராற்றல் மீண்டும் மீண்டும் நல் வாய்ப்புகள் தர நல்வாழ்த்துக்கள். 

இந்த புனித வேளையில் இறை என்னும் பேராற்றலின் அற்புத படைப்புகளை எண்ணி வியந்து போற்றுவோம்.  வித விதமாக இயற்கையில் ஒவ்வொரு அங்கங்களையும் அவர் படைத்த நுணுக்கங்களையும் எண்ணும் போது இறைவன் மிகப் பெறியவன் என்ற எண்ணம் மேலோங்குகிறது. 

எல்லா வல்ல அல்லா தன்னை ஒவ்வொரு உயிரும், எறும்பு முதல் யானை வரை தன் படைபாற்றலை அன்பை வணங்க அவரவர் தன்மை கேற்ப வாய்பளித்துள்ளார்.

இதில் மனித இனம் மட்டுமே தன்னை போல் மட்டுமே மற்றவரும் இறைவனை வணங்க வேண்டும் என்று சட்டம் வகுக்கிறது. அதன்படி நடக்காதவருக்கு பல்வேறு தண்டனைகளை வழங்கி வருகிறது.  கருணை மிக்க இறைவன் ஒரே வகை மரங்களை படைக்கவில்லை. வேப்பமரங்கள் மட்டுமே இருக்கக் கூடிய ஒரு உலகத்தை நினைத்து பார்ப்போம். அங்கு தென்னை, மா, பலா, வாழை போன்ற மர வகைகளுக்கு வாய்ப்பு இல்லாது போனால் பல்வேறு சுவைகளை மனிதர்கள் உணராமலேயே போய்விடுவர். அது மனித குல பரிணாம வளர்ச்சியை பாதிக்கும்.

இறைமை என்ற பேராற்றலை போற்றுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் பல்வேறு வழிகளை (மார்கங்களை) வழங்கியுள்ளார். மலையில் வாழ்பவர்கள், பள்ளத்தில் வாழ்பவர்கள், வயல்களில் வாழ்பவர்கள், பாலைவனத்தில் வாழ்பவர்கள், தீவுகளில் வாழ்பவர்கள் என்று பலதரப்பட்டவருக்கும் இறைவன் கொடுக்கும் அனுபவங்கள் வெவ்வேறு மாதிரியானவை. அதனால் அவரவர் முறையில் உருவம் வைத்தோ, உருவம் இல்லாமலோ, மலையையோ, ஆற்றையோ, மரத்தையோ அல்லது இது எதுவும் அற்ற வெறுமையையோ வணங்கியும் வெளிப்படையாக வணங்காமலும், மக்கள் பலதரப்பட்ட வகைகளில் வாழ்ந்து வருகிறோம்.

இதில் சிலர் மட்டும் நான் வணங்கும் முறையில் நீ வணங்காவிட்டால் உன்னை தாக்குவேன் அழிப்பேன் என்று களம் கண்டு பற்பல போர்களில் பல கோடி உயிர்களை அழித்துக் கொண்டே வாழ்வது அந்த இறை பேராற்றலை உணராமல் அந்த இறைவனின் படைப்பு திறமையை அவமானப்படுத்தும் செயலாகும்.

நான் வணங்கும் வேளையில் நான் வணங்கும் முறையில் நீ வணங்க வேண்டும் என்று முரண்டு பிடிப்பவர்களும், நான் இறைவனை நம்பவேயில்லை அதனால் யாரும் அந்த நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்று தடுக்கும் நாத்திகர்களும் பல மனிதப் போர்களுக்கு பேரிழப்புகளுக்கு காரணமாகிவிடுகின்றனர்.


எடுத்துக்காட்டாக திரு. ஏ. ஆர். ரஹ்மான் உலகம் போற்றும் உன்னத இசைக் கலைஞர். அவர் முதன் முதலில் "சின்ன சின்ன ஆசை" என்ற பாடலுக்கு இசையமைத்து சினிமாத்துறையில் தன் தடம் படைத்தார். அதற்காக அந்த ஒரு டியூன் மட்டுமே தான் போடுவேன் மற்ற டியூன் போடமாட்டேன் என்று கூறியிருந்தால் அவரின் திரை இசை பயணம் 30 ஆண்டுகள் நீடித்திருக்க முடியாது. ஒரே ராகத்தில் இசையமைத்தால் கூட அதற்கு வேறொரு பாடகர் வேறொரு இசைகருவி என்று பல வித்தியாசங்களை அதில் சேர்த்து ஒரு புதுமையான பாடல் கேட்கும் உணர்வை அளிப்பதில் வல்லவர்.

2022ல் தோராயமாக இந்த பூமியில் 800 கோடி பேர் இருக்கிறோம் என்றால் இங்கு 800 கோடி மதங்கள் இருப்பதாக பொருள். ஏனென்றால் இங்கு ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித் தன்மையை தந்துள்ளவர் இறைவன், இறை, இயற்கை என்னும் பிரபஞ்ச பேராற்றல். மனிதனை தவிர பல்லாயிரம் கோடிகளுக்கு மேல் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒரு தனித் தன்மையை தந்துள்ள பேராற்றலை இறைவன், கடவுள் என்ற பற்பல பேர்களில் போற்றி மகிழ்கிறோம்.

"திருவாசகம்" என்ற செயற்கறிய செய்யுளில் இறைத் தன்மையை "ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்" என்று போற்றுகின்றார் மாணிக்கவாசகப் பெருமான். அதாவது இந்த அகன்ற பேரண்டத்தில் ஒவ்வொரு உயிரையும் ஆழ்ந்து கவனித்து ஒரு நுண்ணிய தன்மையை உட்புகுத்தி தனித்தன்மையுடன் படைத்திருக்கின்றார் இறைவன் என்கிறார்.

இந்த திருவாசகத்தை தன் மதம் மாற்றும் பணிக்காக படிக்க நேர்ந்த திரு.ஜி.யு.போப் அவர்கள் அதன் உள்ளர்த்தத்தையும் அதன் அகண்ட பிரபஞ்சத்தையும் விவரித்த விஞ்ஞானத்தையும் படித்து வியந்து அந்த திரு நூலை பல மொழிகளில் மொழி பெயர்த்தார். அவரை மதம் மாற்றும் பணியில் அமர்த்தியவர்களுக்கு அவரின் செயல் கடும் கோபம் கொள்ளச் செய்த்து. அவரின் மீது வழக்கும் தொடுத்தார்கள். வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி அவரின் மொழிபெயர்ப்பு புத்தகத்தையும் முழுமையாக படித்த பின் "திருவாசகத்தை வாசித்த பின்பும் இவர் இன்னும் சைவ மதத்திற்கு மாறாமல் கிருத்துவராக இருப்பதே பேராச்சரியம்" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். 


நோன்பு நூற்று மனமெங்கும் மேன்மையான எண்ணங்களே மேலோங்கும் இந்த தருணத்தில் இறைவன் மிகப் பெரியவன், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று நம்பும் இறை அன்பர்கள், இத்தகைய மாபெரும் சக்தி படைத்த இறைவன் பலக் காரணங்களுக்காகத்தான் பல உயிர்களை படைத்துள்ளான். பல மதங்கள் தேவை இல்லை என்றால் அந்த மாபெரும் சக்தி அதனை படைக்கவே போவதில்லையே.  பூமியை போல பல ஆய்வகங்களை அந்த பிரபஞ்ச பேராற்றல் படைத்துள்ளது. நமது சூரியக் குடும்பத்தை போல் இன்னும் பல சூரிய குடும்பங்கள் உள்ளன.  எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துகிறோமா அல்லது வெறுக்கிறோமா என்பதே நமக்கு இறைவன் அளித்திருக்கும் பொதுத் தேர்வு.

எல்லா உயிர்களிடத்தும் அல்லாவின் படைப்பு திறனை போற்றுவோம். சிலர் அந்த அந்த உயிர்கள் குடியிருக்கும் ஆலயங்களான உருவத்தையும் சேர்த்தே வணங்குவர். பாலைவனத்தில் வளரக்கூடிய மரங்கள் பசுமையான மலைகளில் வளராது என்ற இயற்கையின் கோட்பாட்டை அப்படியே ஏற்றுக் கொள்வோம்.  படைக்கும் தொழிலையும், காக்கும் தொழிலையும், அதனையும் அழிக்கும் தொழிலையும் இறைவனிடம் விட்டு விட்டு நாம்  இயற்கையுடன் " ஆதலினால் காதல் செய்வோம் மானிடரே" என்ற மகாகவி பாரதியின் கூற்றின் படி இயற்கை வாழ்வியலை நோக்கி நம் பயணத்தை மேற்கொள்வோம். 

சகிருட்டிஸ்
sakritease
3 May 2022


Sunday, May 1, 2022

My National Language is ......

 


A never ending debate goes on & on about the common language which Indians shall use.

This article is a lateral analysis on Technical and National point of view. 

Come on ! Let us take on the bull on its horn, which language might have originated first.

For this we can analyse the consonants of four Languages as in the picture below :

In the four given, you can see Tamizh ( Tamil as commonly written ) doesnt have the three variations of 'Ka" as you can see in other three languages.  In this generation, if we compare our computer languages, newest language have more tributes than the older languages and as we always would have experienced the latest are always adding new features to the existing ones. So from this perspective it is clear that Tamizh would have originated first.

This theory gets substantiated by the works of the Saint Sivaya Subramuniya swami ( please dont get confused with the name connecting with a Tamilnadu based Politician too ). In his book "Lemurian Scrolls" he traces the antiquity of Human existence and evolution of languages of Communication. 

Infact before The Lemuria (Kumari kandam ) sank, all the wisdoms gathered due to confluence of scholars , Sangam in Tamizh, has been carried to the North, that is the present day India, under the Leadership of Pandyan King, Manu.  So all the scholars were called "Pandya" and later on word "Pandith" & "Pandit" derived from the Tamil Word "Pandiya". So anybody who came from Pandiya Nadu were revered as the most learned.

( interesting anecdote : Cricket Player Hardik Pandya has named his son as Agastya, named after the Sage Agastyiar, who is revered as the Father of Tamizh and Siddha Medicine )

The Tamizh (Tamil) which has originated in the Lands of Lemuria ( Now this land mass is buried under the Indian ocean between India, Australia and eastern Africa) is about 20,000 years old. Knowing this, we begin to wonder why some people are trying to expedite "keezhadi" archaeological site expedition to establish Tamil is 2000 Years old.  If Archaeological Survey of India, wants to do any meaningful expedition, it should be under this ocean. Probably some good sense prevail soon for unearthing the antiquity of this region.

( interesting anecdote : Tribal people of the African Country Cameroon speak a Language identical to Tamil, may be due to this influence https://www.youtube.com/watch?v=vWyAYGlFZjk )

Languages as such are not inferior or superior. Just like human beings, each language has evolved according to the time period it evolved. In this case, when Tamil evolved, variety of species of human beings, trees, animals, soil might have been different and the vibrational frequency of Earth at that point was different.

Later on when Sanskrit evolved, more species came in to existence and it necessitated more consonants and nuances needed to address the additional species according to the earth's frequencies at that point of time. So in Sanskrit, has three more "Ka" varieties "Cha" Varieties, "Ta", "Tha", "Pa" varieties were added. Tamizh is the mother of Sanskrit but not as claimed by her excellency Ms, Kangana Ranaut, Tamil is the baby of sanskrit.

When did Hindi evolve and why ?
Hindi, though has all the alphabets of Sanskrit but its usage and style of diction is a confluence of Sanskrit and Urdu, probably evolved gradually after Islamic invasion during 13th Century. 

Hindus' Sanskrit and Muslims' Urdu gave the birth of the Child, Hindi to India. Probably Hindi is language of Unity. India has already been trifurcated in the name of religion. So it is the need of hour to remain united as one country, especially over the looming world war III, if Ukraine war expands its horizons. 

Telugu, kannada, Malayalam are also confluential languages between Tamil and Sanskrit. Similarly Gujarathi, Marathi, Bengali, Assamese, odiya also have many sanskrit & Hindi origin letters and words in their syntax. 

But as part of nation Unification process, as is being done by our big bully Neighbor, China, making Mandarin mandatory in all states of China, India too needed a unification language other than English, as reiterated by our Home Minister. Though he has a mother tongue of Gujarathi, he is for Hindi as the Common Language.

Though Tamil Nadu politics brews on linguistics issues and anti Hindi agitation, most industrialized state of India at present, cannot run their industries, restaurants and even farms without the laborers from the Hindi & Bangla heartlands.  A year ago, in Chennai, state run MTC buses, route nos. have been changed to avoid confusion to the travelling north Indian folks. In fact even in remote packets of TN, "Hans" & other tobacco based pan masalas are well sold and Howrah's spitting culture is getting widely spread in every nook & corner of India. 

Hindi Sign boards inside Tamil Nadu Govt administered Arunchaleswarar Temple

This is a testing time of Human race to remain united and evolve in to better being in this golden opportunity of being born as a Human being. Let us not waste this by killing each other for many trivial issues. Accepting diversity of thoughts is the art & heart for living. 

சகிருட்டிஸ்
Sakritease
April 2022



Friday, April 15, 2022

அண்ணாமலையை வாழ்த்திய ராகுல்


கடந்த சில நாட்களுக்கு முன் சட்டசபையில் பேசிய அதிமுக வின் மூத்த தலைவர், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் நீட் தேர்வு குறித்து பேசும் போது "இது திராவிட மண், இங்கு திராவிட இயக்கத்தை தவிர வேறு யாரும் ஆள முடியாது " என்று கூறியதாக செய்தி வந்தது. 


1967 முதல் திமுக- அதிமுக வின் கூட்டணி ஆட்சியே நடைபெற்று கொண்டிருக்கும் போது 2022 ல் யார் அது புதிதாக கடந்த 55 ஆண்டுகளாக கட்டிக் காக்கப்பட்ட புனித தன்மையை புரட்டி போடுகிறார்கள் என்று பார்த்தால். ஒன்று ஆளுநர் திரு ரவி மற்றொருவர் தமிழக பா.ஜ.க.தலைவர் திரு. அண்ணாமலை. ஆளுநர் நேரடியாக அரசியல் செய்ய முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அதனால் இந்த மண்ணை சேதப்படுத்த துணிந்து இருப்பது திரு. அண்ணாமலை என்று தோன்றுகிறது. 

(இந்த கட்டுரையையும் 50 வருட கூட்டணிபடிச்சுப் பாருங்க )

 1971ல் அதிமுக உதயமான பின் அன்றைய தேசிய கட்சியான காங்கிரஸ் பிளவு கண்டு அந்த சூழ்நிலையில் தேசிய கட்சிக்கு எதிர் கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத அளவிற்கு திமுகவும் அதிமுகவும் தங்களை தகைவமைத்துக் கொண்டு தேசிய கட்சிகளை ஒரு தேவையில்லாத ஒட்டுண்ணிகளை போல் நடத்தி வருகின்றன.

இதில் கடந்த பிப்ரவரியில் திரு. ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசும் போது " தமிழகத்தில் பாஜக வால் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது " என்று ஆரூடம் கூறினார். என்னடா ! நம்ப ஆள் கிரவுண்டுக்கு வெளியில் போய் நின்று கொண்டு சிக்ஸ் அடிக்கிறாரே என்று பார்த்தால் இங்கு பாஜக நகர உள்ளாட்சி தேர்தல்களில் தனித்து போட்டி என்று செய்தி வருகிறது. அதிலும் ஆளும் கட்சியின் அனைத்து சக்திகளையும் மீறி சில இடங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றும் விட்டனர். 





இப்பொழுது செங்கோட்டையனின் கவலை பற்றி படிக்கும் போது மிக மெதுவாக அதிமுக - திமுக என்ற எதிர் எதிர் அணி என்ற பிம்பம் உடைந்து கர்மவீரரின் தொலை நோக்கு பார்வையில் என்றுமே இவை இரண்டுமே "ஒரே குட்டையில் ஊரிய மட்டை".  ஆனால் இது நாள் வரை இரு கட்சிகளும் அடித்துக் கொண்டது போன்ற பிம்பத்தை உருவாக்கி வந்தன.  இந்த கட்சிகள் இரண்டும் ஒன்றாவது, இங்கு ஒரு மாற்று சக்தி முளைக்க தொடங்கியுள்ளதின் அடையாளமாகவே பார்க்க தோன்றுகிறது.


இந்த பெயர்க முடியாத அண்ணாவின் மண்ணை தன் சிறு கடப்பாறையால் ஒரு புது "அண்ணா" ( தன்னை அப்படி தான் இந்த "ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் வெயிட்" துறையை செய்த முன்னாள் அதிகாரி பதிகிறார் ) எங்கோ ஒரு கீறலை போட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

ஆக பாஜகவின் மாநில தலைவருக்கு ஒரு தேசிய கட்சியின் அகில இந்திய பதவியில் இருக்க விரும்பாத தலைவரும், அதிமுக சீனியாரிட்டியில் இருந்தும் தலைமைக்கு வராத ஒரு தலைவரும் அரசியலுக்கு வந்து ஒராண்டு கூட ஆகாத ஒருவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்திருப்பது தமிழகத்தில் ஒரு மாற்றத்திற்காக காத்திருக்கும் பலருக்கும் நல்ல செய்தி.  ஒரு போலிஸ்காரர் கழக "நோ எண்டரி" யில் நுழைந்து விட்டார் என்று குமுற துவங்கியுள்ளது.  காமராஜரை "அண்டங்காக்கை" யாக எள்ளி நகையாடியவர்களுக்கு இந்த கருத்த தோல் நிறத்தில், அண்டங்காக்கும் அண்ணாமலையாரின் பெயர் உடையவரை பார்த்து எரி தழல்கள் இரண்டு கழகங்களிடமிருந்து ஓடி வர துவங்கி விட்டது, நீண்ட நாட்களாக தமிழக மக்களை "வெறும்  சோற்றாலடித்த / சாராயத்தால் நொடித்த பிண்டங்களாக" பார்க்கும் கழக மட்டைகளுக்கு உள்ளுக்குள் சிவப்பு விளக்குகள் எறிய தொடங்கியது போல் அலார்ம் அடிக்கிறது.

இது தமிழகத்திற்கு நல்ல சகுனம்.  இதற்குள் இந்த அண்ணாமலையாரின் அடி முதல் முடி வரை சேறு பூச இடுப்பிற்கு கிழே மூளை கொண்டு இயங்கும் கழகங்கள், அவர்களின் ஊது குழல்கள் இவரை பற்றி பல அவதூறுகளை அடுக்கலாம். பெண்களை பெரிதும் மதித்த காமராஜரை கூட தரக் குறைவாக விமர்சித்தவர்கள் இவரையும் விமர்சிக்கலாம். 

இது தவிர கழகங்களின் "ஸ்லிப்பர் செல்" களாக இவரது கட்சியிலேயே சிலர் இவருக்கு குடைச்சல் கொடுக்கலாம். பல அவதூறுகளை கிளப்பிவிடலாம். ஆனால் இந்த கட்சியின் ஆளுமை தமிழகத்தின் புது நம்பிக்கைக்கு காங்கிரஸ் போல் மாநில தலைமையின் முக்கியத்துவத்தை குறைக்காமல், அண்ணமலையாரின் அரசியல் பயணத்தை பல வருடங்கள் தொடரச் செய்து தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் வளர ஒரு திறமையான இளைஞருக்கு  அதிக வாய்பளிக்க வேண்டும்.

ஏற்கனவே ஒரு ஆடு ஒன்று புலி போல் வேடமிட்டு  "புலி வருது புலி வருது "  என்று தமிழக மக்கள் ஒரு நேர் மறை அரசியல் உருவாகும் என்ற நீண்ட நாள் ஆசையில்  ஒரு பிம்பத்தை நம்ப தொடங்கி அதன் கிட்ட போன பின் " அது ஆடு போல்" கத்தியது .



அதனால் இந்த நிஜ போலிஸ் அதிகாரி, விவசாயி, இளைஞருக்கு, தமிழகத்தில் நல்ல நேர்மையான அரசியல் நடத்த வாய்ப்பு வந்துள்ளது. இவரை போன்ற ஒருவர் அரசியலுக்கு வருவதை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

சகிருட்டிஸ்

Thursday, March 24, 2022

TMS 100

 இசை தமிழின் தவக் குரல் 


I can only pity those who are not fortunate to listen to pure Tamizh diction of Late. Sri. T. M. Soundar Rajan, who made immense contribution to Tamil Cinema & Devotional Music and gave careers to the then Super stars MGR & Sivaji in their hey days in 1950-1980. Hindi Play Back singers like Mohd. Rafi and Kishore Kumar might have thanked their stars as Music kept TMS busy in South Indian Music.

இவர் சிவாஜியின் குரலா , எம் ஜி ஆரின் குரலா ??
சிவனுக்கே இவர் தான்யா குரல் 
"நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே" என்ற
பாடல் வரியை கேட்டவர் எல்லாம் சிவனை இசையால் உணர்ந்தவர் என்று
அறுதியிட்டு உறுதி கூறலாம்.



"நான் ஆணையிட்டால்" என்பார்
எங்க வேலை செய்யலன்னா நம்ப முதுகு தோல்
உறிஞ்சுடுமோங்கிற அளவிற்கு மிரட்டுவார். 



"புதிய வானம் புதிய பூமி" ன்னு இவர் குரல் கொடுத்தா
நமக்கே சிம்லா குளிர்ல பெட்டிய கைல வச்சுகிட்டு ஜாலியா 
பாட்டு பாடிகிட்டு போலாம்னு தோனும்.



கண்ணதாசனும் விசுவநாதனும் ஒரு மூங்கில வெட்டி வந்து துளை போட்டா அதுலயும் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே"னு அந்த சௌந்திரமான ராஜக் குரல் தான் கேட்கிறது.



வைணவராக பிறந்தாலும் முருகனுக்கு அனைவரையும் அடிமையாக்கி " உள்ளம் உருகுதய்யா " என்று உருக்கி இன்றைக்கு சூப்பர் சிங்கர் வரை கோலோச்சும் "முத்தைதரு பத்தித்திருநகை" பாடலால் இன்றும் அருணகிரி போற்றிய தமிழை வளர்ப்பவர். 



தமிழ் தெரிந்து கொள்ள வேண்டும் அதிலும் இசை தமிழ் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த மூன்றெழுத்து ,
டி.எம்.எஸ்
தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பிறந்துள்ள பலருக்கும் தமிழ் உச்சரிப்பு சரியாக வருவதில்லை, அதனால் இவர் பாடல்களை மாணவர்கள் தினமும் கேட்கும் படியாக இவர் குரலில் பாடிய " நீராரும் கடலுடுத்த" என்ற தமிழ் தாய் வாழ்த்தையாவது தினம் கேட்கும்படி செய்ய வேண்டும். 

வேற்று மொழிக்காரர்கள் இவர் பாடல்களை கேட்டாலே தமிழ் எளிதாக பிழையில்லாமல் கற்றுக் கொள்ளலாம்.

என்னதான் நானும் கிஷோர் குமாரின் இந்திப் பாடல்களின் ரசிகனாக இருந்தாலும் , அவரின் "படோஸன்" திரைப்படத்தில் " ஏக் சதுர் நார்" என்ற பாடலில் தமிழ் வித்வானுக்கு பாட டி.எம்.எஸ் ஸை அழைத்திருந்தால்,  கிஷோர் குமாருக்கு சரியான போட்டியாக இருந்திருக்கும். இசையமைப்பாளர் ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். இதற்கு ஏதாவது சாப்ட்வேர் அல்லது ஆப் வந்துள்ளதா ? என்று யாராவது விவரம் தெரிந்தால் சொல்லவும். இதுவரை வரவில்லையென்றால் புதிதாக வடிவமைப்பவர்கள் , நமக்கு மனதிற்கு பிடித்தவரின் குரலில் அவர் பாடாத பாடல்களை அவர் குரலில் பாடியிருந்தால் எப்படியிருக்கும் என்று ரசிக்க நன்றாக இருக்கும்.




பல நூறாண்டுகள் தமிழ் பேசும் இடங்களிலெல்லாம் டி.எம். சௌந்திர ராஜனின் கம்பீர குரல் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

" ஓர் ஆயிரம் பார்வையிலே" என்ற வார்த்தையை கேட்டால் " ஓரு கோடி குரல்கள் கேட்டாலும் இந்த குரலோட தனித்துவம் வராதுன்னு உறுதியா சொல்லலாம். 




Sunday, March 13, 2022

Punjab's Brooms day விளக்குமாறு

 பஞ்சாப் தேர்தல் 2022



சிங்கங்களுக்கு மான் பிடிக்கும்

சிங்குகளுக்கும் மான் தான் பிடிக்குமா ?

(பகவந்த சிங் மான் )


கெஜ்ரிவால்

பேச்சறிவால்

வென்றாரா ? 



காங்கிரஸ்

சோனி (யா) ஆனதால்

வென்றாரா ? 


யாராவது

விளக்குமாறு 

கேட்டுக் கொள்கிறோம் ?


சகிருட்டிஸ் Sakritease


Saturday, January 15, 2022

No VAX Slam Australia

 


At this time Australia is contemplating cancelling the Visa for Serbian Tennis Star Novak Djokovic as he is not vaccinated to enter Australia and Australian Tennis Grand slam event. When most of the developed world claiming to be fully vaccinated, a Tennis Super star, probably the Only sports person to openly challenge the Vaccination drives and oppose the Vaccination theory of Global Pandemic. As the events unfold it is most likely, he will be barred from participating in the Game's other events. But the questions he has raised will not be answered on the face value : why there is more more infections where there is more vaccination being done ? When some European Nations have asked their nationals to start living with this virus too as with any other flu virus. Covid-19 - Delta, Beta, gamma, Omicron are as usual virus variants happening like Dengue, Chikungunya, flu viruses. Humans immunity system  automatically develops, developed immunity sheath naturally. is this not like shakespeare's Emperor's new clothes story ? 


The Naked truth of Vaccination has been aced by a Tennis star, who has 20 Grand slams to his name. This is the real slam he has aced now. Africa, one of the biggest continents with a large population with least vaccination is also least infected. Probably Nadal & Andy Murray are happy to cry foul as they stand a chance to clinch the Australian Title without a Serbian defence. It is wide open to guess, what will happen to a person, who is bold enough a call a spade a spade, An Australian, founder of Wikileaks, Julian Assange, languishing in an embassy in UK. 


ஊரில் அம்மணமாக பலர் திரியும் போது ஒரே ஒருவன் கோவணம் கட்டிக் கொண்டு சென்றால் ஊர் எப்படி தூற்றுமோ அப்படி இன்று ஆஸ்திரிலேயாவின் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ள உலகத்தின் முதல் தர டென்னிஸ் வீரர் செர்பியா நாட்டின் "நோவாக் ஜோகொவிச்" தான் கரோனா கிருமிக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள போவதில்லை என்றும் தான் ஏற்கனவே இந்த கிருமியினால் பாதிக்கப்பட்டு நலமானதால் தனக்கு தடுப்பூசி தேவை இல்லை என்றதும் ஆஸ்திரேலியா நாடு அவரை நாடு கடத்த அவரின் விசாவை தடை செய்ய முடிவிற்கு வந்து விட்டது. ஐரோப்பாவில் இந்த வைரஸ்ஸையும் வழக்கமான மற்ற ஜுரம் வரவழைக்கும் வைரஸ் போல வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற பேச தொடங்கி இருக்கும் வேளையில் இந்த உலகத்தின் முன்னணி டென்னிஸ் வீரரை விளையாடவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் பலரும் இறங்கியுள்ளனர். நோவாக் விளையாடமல் போனால் ஜெயிக்க வாய்ப்புக் கிடைக்கும் நடாலும் முர்ரேவும் நோவாக்கிற்கு தடை உருவாவதில் உள்ள சந்தோஷம் கண்கூடு.

இன்றைய காலகட்டத்தில் அதிகமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடுகளில் தான் தினமும் அதிக பாதிப்புகள் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆப்பிரிக்கா கண்டத்தில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போட அந்த நாடுகளின் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை அல்லது மக்கள் விருப்பம் காட்டவில்லை அங்கு இந்த கிருமியின் புதிய வடிவத்தினால் பாதிப்புகளும் குறைவாகவே உள்ளன.   இந்த கிருமிகளின் பாதிப்புகள் குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன.  எந்த கிருமிக்கும் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை ஒவ்வொருவரின் உடலே உருவாக்கும் என்று இயற்கை உடலியலை கூர்ந்து நோக்குபவர்களின் கருத்தாக உள்ளது. இல்லை செயற்கையாக தடுப்பூசி மூலமாகவே உருவாக்க முடியும் என்றும் நம்பும் ஒரு ஆராய்ச்சியாளர்கள் கூட்டமும் உள்ளது.  ஆனால் மாற்றுக் கருத்து கொண்டவர்களை சட்டத்தின் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் செயலும் நடக்கிறது.  உலக நாடுகள் பலவற்றின் ஊழல்களை உரக்க அமபலபடுத்திய ஆஸ்திரேலியாவின் 'விக்கிலீக்கிசின்" ஜூலியன் அசாஞ்செ இன்று பிரிட்டனில் ஒரு மன நோயாளி போல் ஆக்கப்பட்டு உண்மைகளை வெளியில் சொன்னதற்கு ஊமையாக்கப்படு வருகிறார். 

ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வருவது போல் எந்தவித புது ஆடையையும் அணியாமல் வரும் "மாமன்னரின் புதிய ஆடை" காணாமலே கன்னத்தில் போட்டுக் கொள்ளும் ஏட்டு சுரக்காய்கள் நாடுகள் பலவற்றில் முற்ற தொடங்கிவிட்டது போல் தெரிகிறது. 


இது ஒரு சகிருட்டிஸின் நேர் பார்வை.
 Sakritease's crying foul.






Friday, December 3, 2021

Oh My (Micron ) God

                         ஓ மை (க்ரான்) கடவுளே !!!!!


2019ல் வுஹானில் ( சீனா) தொடங்கிய ஒரு கரோனா உயிரியின் ( வைரஸ்) பயணம் தொடரியாக தொடர்கிறது. 

உலகத்தின் அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களின் உயிரை காக்க தடுப்பூசி எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளன. 

இந்த உயிரிகளின் இயல்பே தங்களை கொல்ல / அடக்க வரும் விஷத்தை கொண்டே தங்களை மாற்றி அமைத்து கொள்ளும் தன்மையை இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் அளித்துள்ளது.

பூச்சி மருந்து தெளிக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் அனுபவத்தில் ஒரு பூச்சியை கொல்ல ஒரு மருந்தை பயன்படுத்தினால்  அடுத்த வருடம் அதே மருந்து அந்த பூச்சியை கொல்லாது என்றும்  அடுத்த வருடம் அதை விட வீரியமான ஒரு விஷத்தை தெளித்தால் தான் அந்த பூச்சியை கொல்ல முடியும் என்பது அனுபவ பாடம்.

ஆனால் உண்மையில் நமது பாரம்பரிய ஆரோக்கியமான விவசாய முறையில் பயிரை பலப்படுத்தி பூச்சியை விரட்டும் வழிமுறைகளினால் மட்டுமே ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்ய முடிகிறது. பூச்சிகளை கொல்லும் எந்த மருந்தும்  மனிதனையும் கொல்லும் என்பதே இயற்கை நமக்கு உணர்த்தும் பாடம். 

வைரஸ் / பாக்டிரியா போன்ற நுண்ணியர்கள் இல்லாமல் உலகில் எந்த இயக்கமும் இல்லை. பாலை தயிராக்குவதற்கு கூட ஒரு நுண்ணியரி உதவினால் மட்டுமே முடியும். 

இந்த பதிவை எழுதும் போது இந்தியாவில் 125 கோடி பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த சூழ்நிலையில் கரோனா கிருமி இப்போது தன்னை எதிர்க்கும் உடல்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டே வருவது புலனாகிறது.  இப்போது வந்திருக்கும் வடிவ மாற்றத்திற்கு ஓமைக்ரான் என்று பெயரிட்டுள்ளனர்.  இது வரைக்கும் போடப்பட்ட தடுப்பூசிகள் "டெல்டா" என்ற வடிவமைப்பிற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது.  அதனால் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் உடல் இந்த ஓமைக்ரான் வடிவமைப்பை எதிர்க்குமா ?? என்பது மில்லியன் டாலர் கேள்வி. 

மனிதர்கள் தோன்றுவதற்கே இந்த கிருமிகள் தான் காரணம்.  இந்த ஐப்பசி மாதத்தில் ( அக்டோபர் - நவம்பர் 2021 ) வரலாறு காணாத அடைமழை பெய்து இது வரை வெள்ளமே வராத ஓட்டமே இல்லாத பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  கடந்த பல வருடங்களாக ஓடாத ஆறுகளில் வெள்ளம் வந்த போது மீன்கள் எங்கிருந்து வந்தன ????????  



இயற்கை மீன்கள், தவளைகளின் முட்டைகளுக்கு தகுந்த சூழ்நிலை வரும் வரை உறங்கும் நிலையில் இருக்கக் கூடிய தன்மையை வழங்கியுள்ளது.  இதே போல் கோடானு கோடி உயிரினங்கள் பூமியில் வாழ்ந்து வருகின்றன. இத்தகைய உயிரிகள் வெளியே வருவதற்கும் பூமியில் மனித இனம் அளவிற்கு அதிகமாக இயற்கை வளங்களை சுரண்டுவதால் கிருமிகளின் வீரியம் அதிகமாகி மனித இனத்தின் எண்ணிக்கையை குறைக்க முனைந்திருக்கிறது. மீனிலிருந்து . தவளை, தவளையிலிருந்து ஆமை என்று பரிணாம வளர்ச்சியில் மனிதன் வரை இயற்கை பல வித உயிரினங்களை படைத்துள்ளது.  இந்த உயிர் சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது. இதில் எந்த உயிரினம் பாதிக்கபட்டாலும் மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படும். 

இது போல் அதிக நாள் பயன்படுத்தாத தானியங்கள் வைத்திருக்கும் காற்று புகா வண்ணம் இருக்கும் ஜாடிகளில் கூட புழுக்கள், வண்டுகள் உருவாகிவிடுகின்றன. எங்கே இருந்தன அந்த வண்டுகள் ?? எந்த உயிரினத்தின் உடலும் இறந்த பின் அதன் வெப்பம் குறைய தொடங்கிய உடன் புழுக்கள் வந்து அழுக தொடங்குவது எப்படி ? அத்தனை மெதுவாக ஊறக்கூடிய புழுக்கள் எப்படி இந்த உடல் இறந்துவிட்டது என்று தெரிந்து கொண்டன ? எங்கிருந்து வந்தன ??  உலகத்தின் எந்த மூலையில் நடந்தாலும் இதே போல் நடப்பது யார் எழுதிய இலக்கணம் ??? இதுவே பிரபஞ்ச விதி.  ஒவ்வொரு உயிரினத்தின் உடலிலும் உறக்க நிலைகளில் பல உயிரினங்கள் இருக்கின்றன. தகுந்த சூழ்நிலை உருவானால் அந்தந்த உயிரிகள் உயிர் பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. 

https://www.who.int/news-room/fact-sheets/detail/chronic-obstructive-pulmonary-disease-(copd)

நெஞ்சகத்தில் நுரையிரல் சம்பந்தமாக வரும் நோய்களால் வருடத்திற்கு 32 இலட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் இந்த இணையதள தகவல் தெரிவிக்கின்றது. 

https://www.worldometers.info/coronavirus/?utm_campaign=homeAdvegas1?

மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் ஜனவரி 2020 முதல்  நவம்பர் 2021அதாவது கிட்டத்தட்ட 2 வருடத்தில் கரோனாவினால்  52 இலட்சம் பேர் இறந்ததாக தகவல் தெரிவிக்கிறது. 

கரோனாவோ வேறெந்த கிருமியினாலோ தாக்கபடாமலேயே கூட இந்த உலகத்தில் மக்கள் இதே அளவிற்கு இறந்து வருகின்றனர் என்பதே யதார்த்தம். மிக முக்கிய காரணம்  சுற்று சூழல் மாசு அதிகமாக விரியும் தன்மை குறைந்து உள்ள நுரையிரல்களை தாக்குகின்றன.  சுத்தமான காற்று, சுத்தமான குடினீர், தூய்மையான  சத்தான உணவு, இயற்கையை ஒத்த வாழ்க்கை முறை மட்டுமே நுரையிரல் சார்ந்த இறப்புகளை குறைக்க உதவும். 

கரோனாவிற்கு பயந்து இப்பொது மீண்டும் ஓமைக்ரானிற்கு பயந்து ஏ.சி. அறைகளில், கார்களில் இரண்டு முகக் கவசங்கள் போட்டால் நுரையிரல் விரியாமல் மேலும் சுருங்கிவிடும். எதற்கு பயப்படுகிறோமோ அந்த விபரீதத்திற்கு வழி வகுப்பது போல் நமது முன்னெச்சரிக்கை கொண்டு செல்கிறது.



முக்கியமாக நாம் நெருக்கமாக வாழும் நகரங்களை விட்டு நகர வேண்டும் என்று கரோனோ மற்றும் அதன் புது வடிவம் ஓமைக்ரான் நமக்கு உணர்த்தும் பாடம்.  

இயற்கையிலிருந்து நாம் நுகர்வதை குறைக்க வேண்டும்.  மலைகளை , மரங்களை, அதில் உற்பத்தியாகும் ஆறுகளை நாம் சீராக பாதுகாத்து போற்றி நன்றியுடன் வாழ்வதே நமக்கு நோய்களிலிருந்து விடுதலை பெற வழி. 

நாம் போடும் குப்பைகளை போட்டபடியே நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்தோம் என்றால், மனிதர்களை குறைக்க இயற்கையிடம் ஆயிரம் வழிகள் உள்ளன.  இயற்கை அனுப்பும் ஒரு சின்ன ஓமைக்ரான் கிருமியை தாங்ககூடிய சக்திகூட பெரும்பான்மையான மனிதர்களிடம் இல்லை என்பது தான் இன்றைய நிஜம். 

கிருமிகளிடம் இருக்கும் இறை தன்மையை உணர்வோம்.  இயற்கையின் படைப்பாற்றலை பணிவோடு போற்றி வாழ்வோம். 

சகிருட்டிஸ்.

Monday, November 1, 2021

NO ash No win

 NO Ash No Win


Everyone is puzzled Why Virat Kohli is avoiding R Ashwin in any format.

In a must win game against New Zealand on 31st Oct 2021 he chose to not to pick Ashwin.

There is something gone wrong between Ashwin & Kohli before the England Tour where he benched Ashwin in all the four tests played there. That too when Ashwin of recently playing only Test format for BCCI's team.  R Ashwin even played one off game for Surrey and picked 6 wickets in an innings on the English Soil. Even on the World Test Chamionship final , Only Ashwin was threatening NZ batsmen and only one to pick the wickets. 

Most bizzare happened before the 4th test started in England, when Kohli explained he prefers Jadeja over Ashwin as there are more left handers in English side. The statistics says the quite opposite story where Ashwin is the highest wicket taker of Left Handers. Even the most dangerous English Player Ben stokes had become a sitting bunny for Ashwin.

In the ongoing ICC T20 world cup too. In the two matches played till now, neither bowlers nor batsmen could make any impact on the opposition. Pakistan rubbed hard on the wound with a NO Loss victory. Kohli has now a unique record of being the only captain to get defeated by a Pakistan Side in a ICC tournament. 

All these are happening because of high ego quotient of Kohli. Even after his ignominious exit after 36 all out at Adelaide against Australia, more silent task master Ajinkya Rahane could win the whole series with the same set of men & that too even with Net bowlers  at Gabba, Brisbane.

It is mainly due to the Chest Thumping attitude of Virat Kohli and not listening to the fellow mates instead even focusing fighting with Spectators on the Ground. Calm & Cool captains like Kane Williamson, Eoin Morgan, Rohit Sharma & Ajinkya Rahane are able to inspire more and are allowing the team members to raise up to the occasion. Kohli's "I am the boss" attitude is not bringing the best of out of Indian Cricketing Men. Lets not allow the great Batsman in Kohli to die in this process. Virat !! Quit Captaincy and focus on Batting like Sachin Tendulkar.

Everyone is able to gauge from Kohli's reactions that he is not happy with BCCI management in appointing Rahul Dravid as the Next Head Coach. Rohit, Rahane or KL Rahul or even Pant will gel with the Task Master Dravid and bring out their best in the best interests of the team. 


Kohli must know Kumble's 619 wickets is more valuable than Sachin's 25,000 runs or Kohli's 50,000 runs.  Batsmen scoring runs on a batsmen friendly wickets and rules in either on IPL or ICC tournaments, bowlers are more valuable than a batsman. So Ashwin quick to take 400 + test wickets needs to get more opportunities and bring more glory to the cricket mad country like India. 

 



Rajini (K) Can't (H) Be Fair

 Rajini (K) Can't (H) "Be Fair"

அண்ணாத்தேசே😲


எத்தனை கோடி மக்கள் மனதில் மாற்றம் வராதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தி, புண்களை ஆற்றக்கூடிய ஆற்றல் மிக்கவராக பார்க்கப்பட்டவர் இன்று அந்த புண்ணிற்கு உரம் போட்டு புற்று நோயாக மாற்றிவிட்ட புகழுக்கு சொந்தக்காரர். 


திரு. "சோ" ராமசாமி ஒரு தீர்க்க தரிசி என்று நினைத்திருந்தோம். 1996ல் இவரை முதல்வராக்க அரும் பாடுபட்டார். நல்ல வேளை இன்று இந்த "அண்ணாத்தை"யை கண்டிருந்தால் அவர் "அச்சச்சோ" ராம சாமி இப்படி ஆயிடுச்சே பலராலும் துக்கம் விசாரிக்கப்பட்டிருப்பார். 


"ஆன்மீக அரசியல்" "இப்ப இல்லன்னா எப்ப ?" என்ற இந்த ஸ்டண்ட் மன்னனின் மராத்திய- கன்னட வசனங்களை நம்பி பார்டரில் தத்தளித்த ரசிகர்களை ஈரோட்டு நாத்திக கன்னட ராமசாமியை காட்டிலும் வெறும் வெங்காயமாகவே ஆக்கிவிட்டார் இந்த "அண்ணாச்-சே" !!


தமிழக மக்களுக்கு எப்பவுமே ஒரு ஏக்கம். அதுவும் சினிமா ஹீரோக்களின் மீது  ஒரு தனி மோகம். குறைந்தபட்சம் இவர்கள் சினிமாவிலாவது நல்லவர்களைப் போல் நடிக்கிறார்களே என்று மனதை தேற்றிக் கொண்டு ஓட்டை குத்துகிறார்கள். 


அதனை ஒரளவிற்காகவாவது நல்லது செய்ய முயற்சித்தார் "ரிக்ஷாக்கார" மதன கோபால ராமசந்திரன். அந்த புலியை பார்த்து சூடு போட்டுக் கொண்ட பல பூனைகள் பால் குடிக்க அலைந்தன / அலைகின்றன. இந்த "ஆட்டோக்கார" அண்ணாத்தையையும் நம்பின அனைத்து மக்களையும் சென்னையில் "ஆட்டோ"க்களை நம்பி பின்னாடி போன டூவிலர் காரர்களைப் போல் முட்டு சந்தில் முட்டிக் கொண்டு தவிக்கின்றனர். 


இந்த "முள்ளும் மலருமா" என்ற அல்ப சந்தேகத்தோட ஒரு பதிவை அக்டோபர் 2017ல் போட்டோம். 

இந்த விமர்சனித்தில் "ஸ்ரீதேவியை" தமிழ்நாடாக குறிப்பிட்டிருந்தோம்.  அதில் அந்த போலி "நாத்திக மணி"க்கூடப் பரவாயில்லை ரீட்டையர் ஆன பின்பு அரசியல் செய்து பொழுதை கழிக்கலாம் என்று தோற்றாலும் பரவாயில்லை என்று இரண்டு தேர்தல்களில் தோற்று மய்யம் கொண்டுள்ளார். இந்த ஏ"காந்த" மணி மட்டும் மக்களின் முகத்தில் கறி பூசுவேன் என்று இன்னமும் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார். 


இவர் "சிஸ்டம்" சரியில்லை என்றார், நாமும் "ஆஹா !! இவர் சாக்கடையில இறங்கி சுத்தம் செய்யப் போறார்னு பார்த்தோம் " பார்த்தா பெருந்தலைவர் கூறியபடி " இவரும் அந்தக் குட்டையில் ஊறின மட்டை" தான் தன் படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாடுவதில் "மன்னன்""இராஜாதி ராஜா" என்று நிருபிக்கிறார்.  

தமிழ்நாட்டோட சிஸ்டம் எப்பவும் எப்படி இருக்கிறதென்றால் இங்கும் எல்லோருமே "பெறும்" தலைவர்கள் தான் (மக்கள் உட்பட - 5 வருடத்திற்கு ஒரு 2000, பிரியாணி, சாராய பாட்டில்)  சிலர் மட்டுமே "பெருந்"தலைவர். 

கர்ம வீரர் "காமராஜர்" கனவு வீரர் "கலாம்" மட்டுமே பிள்ளைகளை "பெறாதவர்" அதனால் அவர்களே "பெருந்தலைவர்"

ன்றைய தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு "பெறு" விற்கும் "பெரு" விற்கும் வித்தியாசம் தெரியாது என்பதே யதார்த்த நிலை. 

மராத்திய மாமன்னன் சிவாஜி மட்டுமே "வணங்காமுடி". இந்த முடியில்லா "சிவாஜி"யை வணங்கும்படி செய்தது எந்த வணங்காமுடி ? தான் பெற்றவர்களுக்காக மக்களின் அன்பை பெற்றும் இழக்க துணிந்தது ஏனோ ?? 

"நிதி"பெற ஆயிரம் வழிகள் "உதய"மாகலாம் அதற்காக இந்த "கறுப்பு" "ஜெயண்ட்" (Giant Magnet) விழலாமா ??

Rajini is not fair, we know. 


சின்ன சந்தேகம் : 

சேப்பாக்கத்தில் மணம் வீச முயன்ற தாமரை பூவின் "வாசம்" தீடீரென்று "ஆயிரம் விளக்கில்" சென்று பொசுங்கியது ஏனோ ? மூன்றாம் அரண்மனைக்கு வந்த போது தான் தெரிந்தது "நிதி"யின் மீது மட்டுமே "கருணை" உள்ளவரை "விடியல்" ஒரு பகல் கனவே என்றே. அந்த "அண்ணாமலை"க்கும் ஒரு அரோகரா. அந்த அண்ணாமலையில் ஆடுகள் மேய்த்த "இடைக்காட்டு" சித்தர் தமிழகத்திற்கு அருள் புரியட்டும். 










Translate

Contact Form

Name

Email *

Message *