Search This SAKRITEASE Blog

Saturday, June 6, 2020

Drama of Kanchipuram



காஞ்சியில் கஞ்சி

கரையேறிய வேட்டிகள்
கரையில்லா காவி கொண்ட
குடந்தை குளவிளக்கு
கரைந்தும் போகுமோ என்றே
அஞ்சும் அளவிற்கு
வாயாடிகள் வலம் வந்து
அரற்றிய அண்ணனின் தம்பிகளும்

அஞ்சற்க என்று அரவணைக்க

வந்தணன் தவமுனிவன்
நச்சுபுகையாய் நாத்திகம் பரவ
நஞ்சுண்ட நமச்சிவமாய்
காமாட்சி அடி அமர்ந்து
அருளாசி வழங்கினான்

காசிற்காக விலை போன
கடைக்காரன் விற்கவும்
துணிந்தனன் நம் மரபை
வெறும் கைக்குட்சிக்கெண்டு
வறும் காலால் நடந்தே
நாற்திசையும் நன்மையளித்தே
திருத்தவே முடியாத கட்சியிலும்
திருநீரிட்டு முத்தையாவை
கண்ணனுக்கு தாசனாக்கி கவிதை
கடல் விரித்தனன்

நகரங்களிலெல்லாம் காஞ்சி 1
நிலைமாறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவோர் கூடா()
நடிப்பில் நிலைகுலைந்து நிற்க
ஏகாம்பரமே குடையாய் கொண்டு
ஏகம் அன்றி இரண்டில்லை என்ற
சங்கரனின் வாக்கையே
வாழ்ந்து காட்டினன்

காமக் களியாட்டம்
கட்சி வெறியாட்டம்
நிதிக்கு முன்னிலை
நீதிக்கு இழிநிலை
தமிழகமே தறுதலை
தருமத்திற்கு சோதனை
தலைகுனிந்து துணிவிழந்து
நினைவிழந்து போதையில்
பேதையரும் தலைவிரிக்க
ஊழலின் ஊழ்வினையால்
உரமிழந்த தென்னாட்டில்
கனறும் கனலாய்
அன்பே கலமாய்
அருட்பெரும் சுடரே
மூழ்கும் கடலிலும்
கரையேற்றும் தவமுனிவன்
தரித்த தண்டமே
தவிக்கும் மனதில்
தருவாய் படர்வாய்
தவமாய் அமர்வாய்
சந்திரசேகரா



யற்கையின் அற்புதமே
நன்மையும் தீமையையும்
ஒருசேர பிறந்திட
இப்பறமும் அப்புறமும்
முப்புறமும் எரிசெய்த

காஞ்சிபுர(ற)த்திலும்

இறைவனின் திருவிளையாட்டில்


மனிதம் உயர்ந்திட
மானுடம் தழைத்திட
நிலம் என்னும் பூதத்தில் 2
நீ நடந்ததும்
நாடகமென்று
நாளை உரைப்பாரோ

நடப்பதெல்லாம் நாடகம்
நடத்தும் இறைவனே
நடந்ததே நமச்சிவாயம்
அண்ணலும் நீயே அண்ணனும் நீயே
அம்பியும் நீயே எம்பியும் உயர
வாழும் உயிர்க்கெல்லாம்
வரமளிப்பாயே.


சகிருட்டிஸ்

விளக்கம் :
5. ஜுன்.2020 – வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் காஞ்சியில் வாழ்ந்த வாழ்விக்கின்ற மகான் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிறந்த நாளில் அவர் எத்தகைய காலக்கட்டத்தில் அவர்களின் முன்னோர்கள் கும்பகோணத்தில் நடத்தி வந்த மடத்தினை காஞ்சிபுரத்திற்கு மாற்றினார்கள் என்று சிந்தனை ஓடியதால் எழுந்தன வரிகள்.
இயற்கை என்னும் இறைவன் எப்படி ஒரே சமயத்தில் எதிர் எதிர் திசையில் பயணிக்கும் இரு வேறு ஆற்றலை நடக்கவிட்டு நாடகமாடினான் என்று வியந்து எழுதியதே இந்த பாடல்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் மிகப் பெரிய காரணம் குடிக் கொண்டுள்ளது.  உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படியாகவே யாம் இந்த நிகழ்வுகளை பார்க்கிறோம்.  இதில் சரி தவறு என்ற நிலைபாடும் இல்லை. இயற்கையில் முரணும் ஒரு அங்கமே என்று தோன்றுகிறது.

குறிப்பு :
1. சீன யாத்திரிகர் ஹுவான் சுவாங் தான் பார்த்த இந்திய நகரங்களிலேயே காஞ்சி தான் தலை சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.  பல்லவ பேரரசின் தலை நகரமாக காஞ்சிபுரம் விளங்கியது .

2. சிவனின் பஞ்சபூத தலங்களுள் நிலத்திற்கான தலமாக போற்றப்படுகின்ற கச்சி ஏகம்பன் என்று சிவனடியாரால் அன்போடு அழைக்கப்படும் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளதை குறிப்பிட்டுள்ளோம்.




Monday, May 18, 2020

Corona kara kadavul allah


கரோனாகர கடவுளே அல்லா அல்லா
15.4 2020.     ராகம் : கர்நாடக தேவகாந்தாரி


லாஹிலாஹா இல்லல்லா
முஹம்மது ரசூலுல்லா

எல்லை இல்லா பரம் பொருள்
அல்லா அல்லா

எங்கும் நிறை பொருள் அல்லா அல்லா 



கரூரும் கராச்சியும் ஒன்றே
என்றுணர்த்திய சதாசிவனும்
அவனை போற்றும் மும்தாஜ் அலி கானும்
 1

இசையால் இணைந்திடும்
ரஹ்மானும் ராஜாவும்
ஏவுகணை ஏவிய எங்கள்
கலாமையும் இசையால்
இளக்கிய இளங்காளியே
இலாஹியே அல்லா அல்லா
 2

அன்று காந்தாரி மணந்தது
கண்ணில்லா குருடன்
இன்று அங்கிருப்பதோ
கண்ணிருக்கும் முரடன்  3

அராபிய மரங்களை வெட்டி
எண்ணையே கண்டனன்
உன்னை மட்டும் காணவில்லை
உரக்க கூவினன்


அண்டமே பிண்டமான ஆதி திருமூலமே
பிறை மட்டும் கண்டு உன்னை துதிப்போரும்
பிறையோடு கூடிய சடையனின் முழு
எழில் காண அருள்வாய் அல்லா அல்லா
 


சிலுவையில் விரிந்த சனந்தனரும்
வந்தணன் ஈசா நபியாக உன் புகழ் பரப்பவே
அந்தணன் ஓதும் வேதமெல்லாம்
உன் புகழே

வெறுப்பினால் துப்பும்
துருக்கரும் விரும்பினால்
ஒவ்வொரு உயிரிலும் உன்னையே காணும்
அறம் அருள்வாய் அல்லா அல்லா  4

யானையை அடக்கிய மனிதரை கூட
ஒடுங்க செய்ய கிருமியாய்  வந்த
கருணாகரனே
கரோனாகரனே
அல்லா  அல்லா!!! 



பாடல் விளக்கம் :
1.     1மகான் சதாசிவ பிரும்மேந்திரர் அவர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூரிலும் இன்றைய பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலும் சமாதி உள்ளது.  ஒரு மகானுக்கு இரண்டு இடங்களில் சமாதி உள்ளது ஒரு அதிசயம். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த மகானுக்கு இந்து மற்றும் இஸ்லாமியர் இரு மதத்தினருமே இவரை குருவாக ஏற்று வழிப்பட்டனர். இன்றும் இவரின் சமாதிக்கு சென்று ஆராதித்து வருகிறார் ஆன்மீக குரு திரு. மும்தாஜ் அலி கான் ( இவரை அவரின் சீடர்கள் மத்தியில் Sri M  என்றே அழைக்கின்றனர் )
2.     


      2. அராபிய மொழியில் இளங்காளி என்பதை இலாஹியே என்று குறிப்பிடுவதாக சில ஆன்மீக பெரியோர்கள் நம்புகிறார்கள்.
3.    
        3. மகாபாரத்தில் வரும் துரியோதனனின் தாய் காந்தாரி இன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் காந்த்ஹார் என்னும் இடம் தான் அவரின் பூர்விகம்.  அந்த நாட்டின் இளவரசியை பாண்டவர்களின் பெரியப்பா திருதராஷ்டிரன் மணந்தார். இவர் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். காந்தஹார் பல ஆண்டுகள் பிற மத சின்னங்களை அழித்த தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருந்தது.

4.     4. சைவ மதத்தினர் வணங்கும் சிவன் (தட்சிணாமூர்த்தி ) தன் சீடர்களுக்கு தெற்கு நோக்கி கல் அத்தி மரத்தின் அடி அமர்ந்து பிரம்ம தேவனின் நான்கு புதல்வர்கள் – சனாகாதி முனிவர்கள் மௌனத்தின் மூலமே ஞானம் வழங்கியவர்களில்  ஒருவர் சனந்தனர், அவரே இயேசுபிரானாக அவதரித்தார் என்பது சில ஆன்மிக குருமார்களின் கருத்து.

ளக்காடு .கிருஷ்ண .குமார் 

Tuesday, April 7, 2020

அடி தேடி போனேனடி

 அடி தேடி போனேனடி

(முதலாம் ஏப்ரல் 2020 -வெள்ளிக் கிழங்கு தோண்டி எடுத்த போது உதித்த அடிகள்)
                                             பாடலின் இராகம் : சண்முக ப்ரியா 

அடி தேடி போனேனடி
அண்ணன் அடி தேடி போனேனடி (2)
மலையினடி இருப்பதாக
சொன்னானடி
தேடி தேடி களைத்த
ஆதி திருவரங்கன்
அயர்ந்ததாக சொன்னானடி (1*) 

சக்கரத்ததாழ்வாரும் போற்றும்
மாதவனும் காணாததடி
நம்மாழ்வார் அடிப்பொடி
மா தவம் செய்யாமல்
கண்டேணடி ( 2*)

அருணகிரிக்கு அடி
எடுத்து கொடுத்த
ஆனை மணாளனும் (தேவ)
வள்ளிக் கிழங்காக
அடி காட்டிக் கொடுத்தானடி (3*)

பத்தவதாரம் கண்டவனும்
காணாததடி
வெண் தாடிக் காரன்
காண்பித்தானடி
களக்காட்டில் சத்திய
வாக்கு எடுத்தானடி
உண்மையை ஊருக்கு
உரக்க உறைப்பேன்
உரைக்க உறைப்பேன்
என்றானடி (4*)


உழவனடி தொழவேண்டுமடி
உலகம் உய்விக்க
மூவடி எடுத்தானடி
மாடுகள் மேய்த்தானடி
சாணத்தை உரமாக்க
புழுவாகவும் அவதாரம்
எடுத்தானடி
எந்த ஏறும் தொடா
ஆழம் தொடும்
புழுவே உழவனடி
உழவனடி தொழவேண்டுமடி
மண்புழுவினடி தொழவேண்டுமடி
அண்ணாமலை அடிக்காண
உழவனானேனடி
ஆழம் போவேனடி
ஆழ்த்தும் போவேனடி (5 *)


நாம் போற்றும் வெண் தாடிக்காரர்கள் கண்டதை விண்டவர்கள்.
இருக்கிறது என்று நம்பிக்கை ஊட்டுபவர்கள்.   இல்லை என்று தூற்றும் வெண் தாடிக்காரர்கள் அல்ல 

1.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 
2. ஐப்பானிய விவசாய விஞ்ஞானி மசானபு புஃகோகா
3. வேதாத்ரி மகரிஷி




ஏப்ரல் 6 ம் தேதி நம்மாழ்வார் அய்யாவின் பிறந்த நாள் .  அவர் பெயரில் எங்கள் கிராமத்தில் "நம்மாழ்வார் தெரு" என்று பெயரிட்டு அதன் இயற்கைக்கு மீண்டும் திரும்பும் பாதைக்கு அடித்தளமாக கொண்டு இயற்கை ஒத்து நடப்போம் 

பத்திகளின் விளக்கங்கள் *****

1*  -  ஆதி திருவரங்கம் என்று திருவரங்க பெருமான் படுத்துக் கொண்டே அருளும் புண்ணிய தலம் திருவண்ணாமலைக்கு 30 கி.மீஅருகில் உள்ளது. இத்திருதலத்தில் கைங்க்ர்யம் செய்பவர்கள் இந்த கோவில் திருச்சி அருகில் உள்ள திருவரங்கத்தை காட்டிலும் பழமையானது என்று கூறுகின்றனர்.  திருவண்ணாமலையில் சிவனின் ஒளி உருவின் அடியையும் முடியையும் விஷ்ணுவும் பிரம்மாவும் காண முடியாமல் தவித்தனர் என்று வரலாறு கூறுகிறது. அண்ணாமலையை தேடி களைத்ததால் பெருமாள் இங்கு படுத்து ஒய்வெடுத்தாரோ என்பது எமது கேள்வி  

2* -  இங்கு குறிப்பிடபடும் நம்மாழ்வார் _ இயற்கை வேளாண் விஞ்ஞானி 

3* - அருணகிரி நாதருக்கு திருவண்ணாமலையில் வைத்து தான் முருக பெருமான் “முத்தை திரு” பாடலின் அடி எடுத்துக் கொடுத்து திருப்புகழ் பாடவைத்தார். அது போல் எனக்கு வெள்ளிக் கிழங்கு வயலில் தோண்டி எடுத்த போது இந்த பாடல் வந்ததால் வள்ளிக் கிழங்கு தேடிய போது முருகன் எடுத்து கொடுத்த வரிகள் என்று விவரிக்கின்றேன்

4* -  நம்மாழ்வார் அய்யாவிற்கு திருநெல்வேலி மாவட்ட களக்காடு வட்டாரத்தில் தான் இயற்கை வேளாண்மை மீட்டெடுக்கும் முயற்சியை தொடங்கியதாக அய்யா பற்றிய நூல்கள் கூறுகின்றன, தமிழ் இந்து நாளிதழில் வந்த அய்யாவின் வாழ்னாள் குறிப்பிலும் இந்த தகவ்ல் பகிரப்பட்டுள்ளது. அந்த இணையதளம் இங்கே https://www.hindutamil.in/news/blogs/203690-10-1.html
https://nammalvar-37.webself.net/
பிரபஞ்சத்தின் ஆச்சரியத்தின் ஒன்றாக  அந்த களக்காடு கிராமம் தான் எனது பூர்வீகமும். களக்காட்டில் அருளும் சிவ பெருமானின் பெயர் சத்தியவாகீஸ்வரர். எனது தந்தையின் பெயரும் இந்த தெய்வத்தின் பெயரால் வந்த்து தான் 

5* - நம்மாழ்வார் மிகவும் போற்றும் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஜப்பானிய கிழவன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு மசனோபு புகுவோகா “ உழவில்லா வேளாண்மை “ உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் – அவர் மன்புழுவே உண்மையான உழவன் என்கிறார். அந்த கருத்தினை நம்மாழ்வார் அய்யா பலக் கூட்டங்களில் உரக்க கூறியிருக்கிறார். இன்னொரு ஆச்சரியம் “கிருஷி” னா என்ற எனது பெயரின் மருவு – சமஸ்கிருதத்தில் “ விவசாயி “ என்று  பொருள். அதனால் மண்புழு புல்லாங்குழல் கிருஷ்ண பரமாத்மா போல் மயில் பீலியுடன் வாசிப்பதாக நிழற் படம் தயாரித்து இந்த பதிவில் வெளியிட்டுள்ளேன்


-- கிருஷ்ணகுமார் சத்தியவாகீஸ்வரன்

Monday, February 10, 2020

Velachery Punnai Maram Karpagambal

வேள்விசேரி புன்னை மரமும் கற்பகாம்பாளும்

நான்கு வருடங்களுக்கு முன்பு 2015 ல் ஒரு புது செடி ஒன்று முளைத்திருந்தது. என்னால் என்ன செடி / மரம் என்று அடையாளம் கண்டுபடிக்க முடியவில்லை.



இந்த சமயத்தில் ஆங்கில ஆராய்ச்சியாளர் எழுதிய ஆங்கில புத்தகமான "தி கிரேட் இந்தியன் ஹெட்ஜ்" தமிழாக்கம் "உப்பு வேலி" என்ற பெயரில் வெளிவரும் தகவல் கிடைத்தது. அந்த புத்தகம் உப்பு வியாபாரத்திற்காக ஆங்கிலேய அரசு மரங்களை கொண்டு உயிர் வேலி பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் அமைத்து இந்தியர்களை எப்படி சுரண்டியது என்பதை பற்றி எழுதி இருந்தது.

நான் எனது வயல் வாங்கிய புதிது. உயிர் வேலி அமைக்க முயன்று வந்தேன். அதனால் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு புத்தகம் வாங்க சென்றேன். அங்கு திரு. ராய் மாக்சிம் கூறிய தகவல்களை கேட்டு இரண்டு புத்தகங்கள் வாங்கி அதில் ஒன்றில் நமது அபிமான எழுத்தாளர் திருமதி. வித்யா சுப்ரமணியம் அவர்களுக்காக அவர் எழுதிய "உப்பு கணக்கு" புத்தகத்தை பற்றி கூறி திரு ராய் அவர்களின் கையெழுத்துடன் புத்தகத்தை பெற்று எழுத்தாளர் திருமதி சுப்ரமணியம் வீட்டிற்கு சென்று அளித்துவிட்டு படித்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அவரும் அதை படித்துவிட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு அவர் உஷாவாக வரைந்த அவரின் அபிமான தெய்வமான "கற்பகாம்பாளின்" ஓவியத்தை எனக்கு பரிசளித்தார். அதனை வீட்டிற்கு கொண்டு வந்து சுவரில் மாட்டினேன்.


பிறகு கற்பகாம்பாளின் தவம் பற்றி படித்தேன். அதில் அம்பாள் மயிலாக தவமிருந்தது ஒரு புன்னை மரத்தடியில் என்ற தகவல் கிடைத்தது. கபாலிஸ்வரருக்கும் புன்னை வன நாதர் என்ற பெயரும் சன்னிதியும் இருப்பது தெரிய வந்தது. இப்பொழுது எங்கள் வீட்டில் முளைத்திருந்த மரம் பற்றி அறிய முற்பட்டேன்.


என்ன ஆச்சரியம் வீட்டில் முளைத்திருப்பது புன்னை மரம் என்று தெரிய வந்தது.

இது என்ன இறைவியின் திருவிளையாடல் என்றே தோன்றுகிறது. அம்மன் எழுந்தருளல் முன் அவளின் மரத்தை இங்கு முளைக்க செய்துவிட்டாள்.
பல முனிவர்களும் தங்கள் தவம் ஒரு முகமாக இருக்க மரங்களாக அவதரிப்பதாக அகத்தியர் வாக்காக சமீபத்தில் படித்தேன்.

"மரம் செய்ய விரும்பும்" என் முயற்சிக்கு இறையின் அருளாக புன்னை மரம் எழுந்திருப்பதாக உள்ளுணர்வு உணர்த்துகிறது.

அநேக சிவன் கோவில்களில் தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கிறது.

வன்னி மரக்காட்டில் தவமிருந்ததால் வான்மீகி என்ற பெயர் பெற்று இன்று அந்த ஊர் திருவான்மீகியூர் என்பது திருவான்மியூராக மருவி இருக்கிறது. புரசைமரக் காடாக இருந்து இடம் இன்று புரசைவாக்கமாக உள்ளது. அங்கு இன்று இருக்கும் சிவன் கோவிலுக்கும் தல மரம் புரசை மரமே. திருவேற்காடு, திருவாலங்காடு, மாங்காடு என்ற பெயர்களில் இருந்தே விளங்கும் அது எந்த மரம் அந்த பகுதியில் மிகுந்து இருந்ததோ அதன்படியே நமது முன்னோர்கள் அந்தந்த ஊர்களுக்கு பெயரும் அதில் ஒரு மரத்தடியில் சிவனையும் வைத்து மரத்தையே சிவனாக வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள்.

"தெய்வமணிமாலை"யில் அருட்பிரகாச வள்ளலாரும் கந்த கோட்டத்தில் உள்ள முருகனை பற்றி கூறிவருகையில் தரு ஓங்கு சென்னையில் தருமம் மிகும் என்று கூறுகிறார்.

மீண்டும் மயிலாப்பூர் புன்னை வனக்காடாக மாறுமா? சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் அனைத்து புராதன சிவாலயங்களை நாம் ஒரு வரைபடமாக மாற்றி அந்தந்த மரங்கள் இருக்கும் காடாக நினைத்து பார்த்தால் சென்னையே தருமபுரியாக மாறி தருமபரிபாலனம் செய்ய உகந்த ஊராக மாறி தமிழ் நாட்டில் தருமம் தழைத்து விடும்.



நம்மால் முடியுமா???? மீண்டும் கற்பகாம்பாள் மயில் உருவில் வந்து புன்னை மர விதைகளை தூவினால் சாத்தியமே.


Tuesday, October 15, 2019

Farmer President Abdul Kalam

Former Farmer President
Dr APJ Abdul Kalam 


Let's call our beloved President Dr. APJ Abdul Kalam as Farmer President as he has sown maximum no. of seeds on Young Minds . 




A tree ( Nagalingam Tree Sapling)  planted in memory of our Farmer President Dr. APJ Abdul  Kalam ayya's 88th Birthday on 15th October 2019 in our Farm.  

Importantly the Grow Bag is being reused to house another sapling. 


Thanks to Wing Commander (Retd.) Mr. Krishna Murthy ( https://www.facebook.com/chidambaramsubramaniam.krishnamurthy)  for gifting me this sapling.  He will give million reasons to plant & gift trees.  A great inspiration to all who are working on field with trees.  



Friday, October 4, 2019

Gandhi 150 Nammazhwar Street

                     ஆழ்ந்து
                 அகன்ற
           நுண்ணியன்

                        - திருவாசகத்தில் ஒரு வரி





ஒவ்வொரு உயிரையும் மிக நுணுக்கமாக தனித்துவத்துடன் படைக்கிறான் இறைவன்.  ஒரு வேப்பமரம் போல் இன்னொரு வேப்பமரம் சகல ஒற்றுமைகளுடன் இருப்பதில்லை.  ஏதேனும் சிறு வேறுபாடுகள் இருக்கவே செய்யும். 

அது போல் ஒரு மனிதனுக்கு கிடைக்கப் பெற்ற அனைத்தும் மற்றொருவனுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.  அதனால் இராணுவ ஒழுங்கை போல் ஒரே சீராக எல்லோரும் எல்லா விஷயங்களிலும் ஒன்று போல் நடக்க வாய்ப்பில்லை. 

கிருத்துவராலும் முகமதியராலும் உலகின் மிக பெரிய போர்கள் நடந்து பல கோடி உயிர்களை பலிவாங்கிட்டோம். என்னை போலவே மற்றொருவனும் சிந்திக்க வேண்டும் நான் வணங்கியதையே வணங்க வேண்டும் என்று முற்படுவது இயற்கைக்கு முரணாகும். 

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா போல் வாழ்ந்து காட்டி வழிக் காட்டலாம்,  ஆனால் எதையும் யார் மீதும் திணிக்கக் கூடாது.  இந்த இயற்கை முரணே வன்முறையை  தூண்டுகிறது.  இன்று அமெரிக்கா என்ற மிகப் பெரிய கிருஸ்துவ நாடும் இரான் என்கிற இஸ்லாமிய நாடும் எந்த நேரத்திலும் போர் மூளலாம் ( அக்டோபர் 2, 2019 - காந்தியின் 150 வது பிறந்தநாளில் எழுதும் குறிப்பு ) என்ற அச்சுறுத்தும் நிலையில் இந்த கருத்தை பகிர்கிறோம்.

மதமாற்றம் என்பதும் வன்முறையே. மலையின் மீது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மலை வாழ் மக்களை சமவெளியில் வாழும் மக்கள் நாகரிகம் இல்லாதவர்கள் போல் பார்க்க தொடங்கியதால் இன்று மலை வாழ் மக்கள் ரேஷன் அரிசிக்காக கால் கடுக்க நடந்தும் வரிசையில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளிவிட்டோம்.  அதனால் இன்று மலைகளும் எழில் குறைந்து மரங்கள் அற்று மழை மேகங்களும் இல்லாமல் வயல்கள் தண்ணீரின்றி வாடுகின்றன.

இன்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் " ஜார்வ" பழங்குடியினர் மட்டும் இயற்கையோடு ஒன்றி வாழ்வதாக அறிகிறோம்.  அவர்களையும் நாகரீகமாக்குகிறேன்  என்று ஒரு பாதிரியார் கடலில் குதித்து காணாமல் போய்விட்டார். 

இயற்கையென்னும் இறைவனுக்கு / இறைவிக்கு எத்தனை உயிர்கள் படைக்கப்பட்டதோ அனைத்து உயிர்களும் அவைகளுக்கு விருப்பமான ஒரு பெயரையோ உருவத்தையோ வழிப்பட்டே வருகின்றன.  இதில் மனிதரில் சில கூட்டத்தினர் மட்டும் நான் வணங்குவதை நீ வணங்கவில்லை என்றால்  என்று மிரட்டி ஓயாமல் போர் புரிகின்றனர். 

போதும்யா!!!
 "போர் போர் என்னும் கூவல் கேட்டு
போர் ( bore)  அடிக்கிறது "

வாங்க கொஞ்ச நாள் அமைதியா வாழ்ந்துட்டு நம்ம ஒவ்வொருத்துருக்கு "உள்" ளையும் "கட" க்கும் இறையையும் தட்டி எழுப்பி நாமும் "கடவுள்" ஆவோம்.
1000 கோடி பேரும் 1000 கோடி மதங்கள் தான். சக மனிதர , உயிர்களை துன்புறுத்தாம வாழ்வோம்.

எங்க கிராமத்தில இயற்கையோடு ஒன்றி வாழ ஒரு முயற்சியா இயற்கை வழி விவசாயம் செய்யும் விவசாயம் நடக்கும் நிலங்கள் உள்ள தெருவிற்கு காந்தி ஜெயந்தி இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் " நம்மாழ்வார் தெரு" என்று பெயரிடுவதாக தீர்மானம் இயற்றிட்டோம். 

(இடம் : மேல்பாச்சார் கிராமம்,  திருவண்ணாமலை மாவட்டம்) 

ஏன்னா இயற்கையை உள்ளது உள்ளபடியே ஏத்துகிறது தான் இயற்கை வேளாண்மையின் தத்துவம்.  நம்மாழ்வார்  அய்யா  எப்பவும் சொல்லுகிற விஷயம் "களை" என்று ஒரு செடி கிடையாது.  நமக்கு அதனோட பயன் தெரியாததால பெயர் தெரியாததால ஒரு செடியை வெட்ட நினைக்கிறோம்.  ஆனால் இயற்கை அந்த மண்ணுக்கு என்ன தேவையோ அதைதான் படைக்கிறது என்பார். 




Translate

Contact Form

Name

Email *

Message *