கரோனாகர கடவுளே அல்லா அல்லா
15.4 2020. ராகம் : கர்நாடக தேவகாந்தாரி
லாஹிலாஹா இல்லல்லா
முஹம்மது ரசூலுல்லா
எல்லை இல்லா பரம் பொருள்
அல்லா அல்லா
எங்கும் நிறை பொருள் அல்லா அல்லா
15.4 2020. ராகம் : கர்நாடக தேவகாந்தாரி
லாஹிலாஹா இல்லல்லா
முஹம்மது ரசூலுல்லா
எல்லை இல்லா பரம் பொருள்
அல்லா அல்லா
எங்கும் நிறை பொருள் அல்லா அல்லா
கரூரும் கராச்சியும் ஒன்றே
என்றுணர்த்திய சதாசிவனும்
அவனை போற்றும் மும்தாஜ் அலி கானும் 1
இசையால் இணைந்திடும்
ரஹ்மானும் ராஜாவும்
ஏவுகணை ஏவிய எங்கள்
கலாமையும் இசையால்
இளக்கிய இளங்காளியே
இலாஹியே அல்லா அல்லா 2
அன்று காந்தாரி மணந்தது
கண்ணில்லா குருடன்
இன்று அங்கிருப்பதோ
கண்ணிருக்கும் முரடன் 3
அராபிய மரங்களை வெட்டி
எண்ணையே கண்டனன்
உன்னை மட்டும் காணவில்லை
உரக்க கூவினன்
அண்டமே பிண்டமான ஆதி திருமூலமே
பிறை மட்டும் கண்டு உன்னை துதிப்போரும்
பிறையோடு கூடிய சடையனின் முழு
எழில் காண அருள்வாய் அல்லா அல்லா
சிலுவையில் விரிந்த சனந்தனரும்
வந்தணன் ஈசா நபியாக உன் புகழ் பரப்பவே
அந்தணன் ஓதும் வேதமெல்லாம்
உன் புகழே
வெறுப்பினால் துப்பும்
துருக்கரும் விரும்பினால்
ஒவ்வொரு உயிரிலும் உன்னையே காணும்
அறம் அருள்வாய் அல்லா அல்லா 4
யானையை அடக்கிய மனிதரை கூட
துருக்கரும் விரும்பினால்
ஒவ்வொரு உயிரிலும் உன்னையே காணும்
அறம் அருள்வாய் அல்லா அல்லா 4
யானையை அடக்கிய மனிதரை கூட
ஒடுங்க செய்ய கிருமியாய் வந்த
கருணாகரனே
கரோனாகரனே
அல்லா அல்லா!!!
கருணாகரனே
கரோனாகரனே
அல்லா அல்லா!!!
பாடல் விளக்கம் :
1. 1. மகான் சதாசிவ பிரும்மேந்திரர் அவர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் கரூர் மாவட்டத்தில்
உள்ள நெரூரிலும் இன்றைய பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலும் சமாதி உள்ளது. ஒரு மகானுக்கு இரண்டு இடங்களில் சமாதி உள்ளது ஒரு
அதிசயம். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த மகானுக்கு இந்து மற்றும் இஸ்லாமியர் இரு மதத்தினருமே
இவரை குருவாக ஏற்று வழிப்பட்டனர். இன்றும் இவரின் சமாதிக்கு சென்று ஆராதித்து வருகிறார்
ஆன்மீக குரு திரு. மும்தாஜ் அலி கான் ( இவரை அவரின் சீடர்கள் மத்தியில் Sri M என்றே அழைக்கின்றனர் )
2.
2. அராபிய மொழியில் இளங்காளி என்பதை இலாஹியே என்று குறிப்பிடுவதாக சில ஆன்மீக பெரியோர்கள்
நம்புகிறார்கள்.
3.
3. மகாபாரத்தில் வரும் துரியோதனனின் தாய் காந்தாரி இன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் காந்த்ஹார் என்னும் இடம் தான் அவரின் பூர்விகம்.
அந்த நாட்டின் இளவரசியை பாண்டவர்களின் பெரியப்பா திருதராஷ்டிரன் மணந்தார். இவர்
பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். காந்தஹார் பல ஆண்டுகள் பிற மத சின்னங்களை அழித்த
தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருந்தது.
4. 4. சைவ மதத்தினர் வணங்கும் சிவன் (தட்சிணாமூர்த்தி ) தன் சீடர்களுக்கு தெற்கு நோக்கி
கல் அத்தி மரத்தின் அடி அமர்ந்து பிரம்ம தேவனின் நான்கு புதல்வர்கள் – சனாகாதி முனிவர்கள்
மௌனத்தின் மூலமே ஞானம் வழங்கியவர்களில் ஒருவர்
சனந்தனர், அவரே இயேசுபிரானாக அவதரித்தார் என்பது சில ஆன்மிக குருமார்களின் கருத்து.
களக்காடு .கிருஷ்ண .குமார்
Kavidaiyum adhan villakkamum arumai
ReplyDeleteகவிதை நடையில் மதநல்லிணக்கம். பாராட்டுகள்
ReplyDelete