Search This SAKRITEASE Blog
Monday, November 14, 2022
Butler India Pak strokes emotions
Wednesday, September 28, 2022
Nammazhwar Bhraman by deed
நம்மாழ்வார் பிராமணரே
வர்ண ஆசிரம தத்துவத்தின் படி நாலு வர்ணங்கள் அதில் பிராம்மண, சத்திரிய,வைஸ்ய மற்றும் சூத்திர ஆகும். இதில் அடிப்படை அஸ்திவாரம் சூத்திர என்பது தான். உடல் உழைப்பால் சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பவர். அனைவரும் பிறப்பால் சூத்திரரே.
https://www.youtube.com/watch?v=MJmxdlCtFWU
நம்மாழ்வார் போற்றும் ஆண்டாளின் ஆளுமையை அன்பை, பரவசத்தை, அவரை "திருப்பாவை"யாக பார்த்ததால் தான் தமிழகத்தின் அரசின் சின்னமாக நம்மையும் அந்த அன்னை ஆள்கிறார்.
சகிருட்டிஸ் செப்2022
SAKRITEASE SEP 2022
Friday, September 16, 2022
The Everyday Embryonic Awakener
MS 106
துயில் எழுப்பும் தூய ஆழ்வார்
Climbing up that sacred hills along the eastern ghats of that peninsular India in the serene month of Marghazi ( Mid December to Mid January ), a soul awakens every aspiring living being from its embryonic slumber in the chill weather of December, with a penetrating voice.
இதமான மார்கழி மாத குளிரில் இந்திய தீப கர்ப்பத்தின் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அந்த புனித மலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரையும் ஊடுருவி எழுப்பி விடும், ஒரு தெய்விக குரல் .
Why does the Lord Vishnu need a awakener on Earth everyday ? is the Lord, who is the declared protector of all beings, needs to be awakened ? is the Lord so sluggish, sleepy character always in slumber ?
மகாவிஷ்ணுவை பூமியில் தினமும் எழுப்ப ஒருவர் தேவையா ?? அனைவரையும் காத்து ரட்சிக்கும் இறைவனை தினமும் எழுப்ப வேண்டுமா ? கடவுள் என்ன எப்போதும் உறங்கி கொண்டிருக்கும் சோம்பேறியா ??
Everyday trillions of lives have to spring up to life form and the universe decided to send one of its awakener on earth, who like the Saint Narada ( aptly This sage also acted as Saint Narada in one of the cult classics ) is on duty 24 x 7 x 365.
ஓவ்வொரு நாளும் பல்லாயிர கோடி உயிரினங்கள் ஆழ் உறக்கத்தில் இருந்து விழிப்பு நிலைக்கு வர பிரபஞ்சம் ஒரு துயில் எழுப்ப நாரதர் போன்ற ஒருவரை 24 மணி நேரம் பணியாற்ற அனுப்பியது. ( இவர் ஒரு திரைப்படத்தில் நாரதராகவே நடித்தார் என்பதும் இவரின் தனிச்சிறப்பு )Who is this Vishnu ? why he is in a reclining pose on the curled serpent ?
யார இந்த விஷ்ணு ? ஏன் இவர் சுருண்ட பாம்பின் மீது படுத்திருக்கிறார் ??
One question many of us would have wondered. When a river completely dries up bone dry and after it rains and water flows, fishes start jumping and swimming in the water. Can the fish survive without water ? A fully grown up fish may not be able to survive but fish's egg can be in slumber in a ready to hatch from embryonic state whenever a drop of water falls on it.
ஒரு கேள்வி நம்மில் பலருக்கும் வந்திருக்கும். முற்றிலும் வறண்டு போன ஒரு நதியில் மழை பெய்து தண்ணீர் ஓட தொடங்கிய பின் மீன்கள் எங்கிருந்து வந்து துள்ளி குதிக்கின்றன??. தண்ணீர் இல்லாமல் மீன்களால் வாழ முடியுமா ?? முழுதும் வளர்ந்த மீனால் வாழ முடியாமல் போகலாம் ஆனால் மீனின் முட்டைகள் ஆழந்த உறக்கத்தில் பல நாட்கள் அடுத்த மழை துளி மேலே படும் வரை இருக்க முடிகிறது.
Vishnu, is a state, which is always ready to hatch as a life being. A seed which is always ready to germinate.
விஷ்ணு, என்பது ஒரு நிலை, அது எந்த நேரத்திலும் உறக்க நிலையிலிருந்து உயிர்தெழும் தன்மைக்கு வரக் கூடியது. எந்த நிலையிலும் முளைக்க தயாராக இருக்கும் விதையின் நிலை.
So the sages, who composed various hymns to describe the variety of aspects of Nature, the universe, had described the ready to hatch state as Vishnu. For a commoner to understand , they tried to bring to describe it with tangible forms, which a human can relate to in a Human like form. Fish, according to Puranas, is the first form or avatar of Vishnu and the second is a tortoise and on. Even in Narasimha avatar, when Prahalada was asked, where is the Vishnu ? He replies that One which is always ready to come to life in any form in any place.
இயற்கையின் பேராற்றலை விளக்கிய ஞானிகள், விஷ்ணு என்பது எப்பொழுதும் உயிர்தெழ தயார் நிலையாக விளக்குகின்றனர். பாமர மக்களும் இந்த தன்மையை தத்துவத்தை புரிந்து கொள்ள அது மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய மனித உருவத்தை வைத்தே விளக்கியுள்ளனர். விஷ்ணு , முதன் முதலாக மீனாகத்தான் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு ஆமை மற்றும் பிற உருவ அமைப்புகளிலும் பிறப்பெடுத்தாக கூறுகின்றன. நரசிம்ம அவதாரத்தின் போது பக்தன் பிரகலாதனை அவன் தந்தை "நாராயணன் எங்கே?" என்று கேட்டவுடன், பிரகலாதன் "அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்று அந்த உயிர்ப்பு தன்மையின் தயார் நிலையை உணர்த்துவார்.
This is the reason that Venkatesa Suprabhatam is recited every day in the morning. Why MS ?
இதனாலேயே வெங்கடேச சுபரபாதம் தினமும் காலையில் ஒலிக்க பெறுகிறது. ஆனால் அதனை திருமதி எம் எஸ் அம்மா அவர்களின் குரலில் மட்டுமே ஏன் ஒலிக்க பெறுகிறது ???
A great musician, is aptly described as "Gaana amrutha varshi" - the one who pours out the music like the rain droplets. When the rain falls, it is natural, the fish will hatch. Anyone who have heard "Katrinile varum geetham" would definitely vouch to see Lord Krishna in every aspect of our lives.
வான் மழையை போல் இசை மழையை பொழியக் கூடியவரை " கான அம்ருத வர்ஷி" என்று குறிப்பிடுவர். மழை பெய்ததும் மீன்கள் முட்டையிலிருந்து உயிர்தெழ ஆரம்பிக்கும். அம்மா அவர்களின் "காற்றினிலே வரும் கீதம்" பாடலை பாடக் கேட்பவர்கள் கண்ணனை தமது வாழ்வில் உணரத் தொடங்கிவிடுவர்.
More so, in her name, M stands for Madurai, where the ruling Lord is Meenakshi - meaning "Rule of the fish " or the "fish eyed god".
இதுவும் தவிர எம் எஸ் என்ற எழுத்தில் எம் என்பது மதுரையை குறிக்கும், எங்கு அந்த பேராற்றலை -"மீனாட்சி" என்று வணங்கப்படுகிறதோ - "மீனின் ஆட்சி " "மீனை போன்ற கண்களை உடைய" என்ற பொருள்பட வணங்கப்படும் ஊரில் பிறந்தவர்.
The Universe has chosen to send this, Gaana Gandharva ( Celestial Musician ), on this day to awaken 106 years ago, trillions of vishnus, to life and enable the Earth to be a better place to live in.
இந்த பூமியில் பல்லாயிர கோடி உயிர்கள் - விஷ்ணுக்கள் உயிர்தெழ, 106 வருடங்களுக்கு முன்பு இந்த தேவலோக கந்தர்வ காந்த இசைக் கலைஞரை இந்த பூமி, பலரும் வாழ தகுதியான இடமாக மாற்ற பிரபஞ்சம் அனுப்பியது.
This Ratna of Bharath, played the role of Sakuntala, once again in that role too, a fish takes away her ring and had to rear her son, The Bharath, which this nation was named after. This soul, is the true essence of this great nation, brand ambassador of this universe.இந்த பாரதத்தின் உயர்ந்த இரத்தினம், ஒருமுறை சகுந்தலையாகவும் நடித்தார். அந்த பாத்திரத்திற்கும் அவரது மீன் தொடர்பு இருந்தது. அந்த சகுந்தலையின் மகனான பரதனின் பெயராலேயே இந்த பூமி "பாரத" என்ற அழைக்கப்பட்டது.
Saturday, September 10, 2022
Netaji Statue can end a Raj Path
Friday, September 2, 2022
This Goat will hatch a Egg
இந்த ஆட்டுக்குட்டி கண்டிப்பாக முட்டை போடும்
கடந்த சில மாதங்களுக்கு முன் சட்டசபையில் பேசிய அதிமுக வின் மூத்த தலைவர், முன்னாள் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் நீட் தேர்வு குறித்து பேசும் போது "இது திராவிட மண், இங்கு திராவிட இயக்கத்தை தவிர வேறு யாரும் ஆள முடியாது " என்று கூறியதாக செய்தி வந்தது.
Sunday, July 31, 2022
NO-Vax (K) -US
NO Vax (K ) US ( A)
Monday, July 4, 2022
பஞ்சாங்கம் விஞ்ஞானமா ???
நம்பியது நாராயணனை போற்றும்
தும்பா நதிக்
கரை ஓரம்
தும்பை பூவாய்
உனது தீரம்
நம்பி உன்னை
இறக்கி விட்டது
விண்வெளி
வெகு தூரம்
விக்கிரமாதித்தன்
வேதாளம்
விட்டும்
விடாது வாட்டும்
விக்கிரமால்
விரிந்தது உன் வானம்
விகாஸ் எஞ்சின்
உன் வெகுமானம்
செயற்கை கோள்கள்
ஏவினாய்
செயற்கையாய்
கோள்கள் கூறினோம்
திரவங்களையே
நீ நம்பினாய்
திராவகத்தையே
உன்மேல் வீசினோம்
மாதவம் செய்தாய்
என்று
மாதவன் சொன்னான்
இன்று
நம்பாதது
‘நம்பி’யதை தூற்றும்
நம்பியது
நாராயணனை போற்றும்
பஞ்ச பூதங்கள்
கணக்கும்
பஞ்ச அங்கங்கள்
கணிக்கும்
வானவியல்
என்னும் விஞ்ஞானமே
வானோர்கள்
உணர்த்தும் மெய்ஞானமே
அணுவின் ஆட்டத்தையும்
அளந்தான்
அண்டமே பிண்டமென
கண்டான்
ஓரடி வைக்காத
மரத்தடி முனிவனும்
மூவடியால்
உலகளந்த கறுத்த சிறுவனும்
முகமதில்
வெண்காடே வளர்ந்தாலும்
கலம் கொண்டு
களம் பல கண்டாலும்
காற்றில்
போடும் புகை கோலம் தேவையில்லை
பால்வெளியில்
எதையும் சாரா பாய் கொண்டு பறக்க
மனவெளியில்
விரிசடையன் திருநடனம் காண்பாற் தமக்கே
- களக்காட்டு கவிராயர் கிருஷ்ண குமார்
1.7.2022 ராக்கெட்ரி - நம்பி விளைவு -இந்த படம் என்று வெளி வரும் என்று காத்திருந்து - முதல் நாளில் திரையரங்கில் காசு கொடுத்து பார்த்த படம். ஒரு விஞ்ஞானி அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு படும் கஷ்டங்களை தாண்டி தன் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க அவரும் அவர் குடும்பத்தாரும் படும் சவால்களை மாதவன் குழுவினர் மிக அற்புதமாக கையாண்டு இருக்கிறார்கள்.
இந்த படத்தில் "மங்கள்யான்" என்ற செவ்வாய் கிரக ஆராய்ச்சி கலன் அனுப்ப பஞ்சாங்கத்தை கொண்டு எந்த நேரத்தில் கலத்தை விண்ணில் செலுத்தினால் அந்தக் கலம் மிகக் குறைவான செலவில் குறைவான காலத்திற்குள் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் என்று திரு. நம்பி நாராயணனின் மருமகன் விஞ்ஞானி திரு. அருணன் கூறுவதாக ஒருக் காட்சி வருகிறது. இதை பற்றி இந்த படத்தின் இயக்குனர் திரு. மாதவன் படம் வெளி வருவதற்கு முன்பே ஒரு பேட்டி அளித்திருந்தார். அதற்கு பகுத்தறிவாதிகள் சிலர் கண்டனம் தெரிவித்ததால் படம் ஓடுவதற்கு ஏதாவது பங்கம் வருமென்று நினைத்தாரோ என்னவோ ? மாதவன் அவரது டிவிட்டை நீக்கிவிட்டதாக செய்தி வந்தது.
திரு. நம்பி நாராயணின் வாழ்க்கையே அவரை ஒரு நாடே தேசத் துரோகி என்று தூற்றிய போதும் , ஆறு மாத காலம் சிறைவாசம் அனுபவித்த பின்பும், மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டாலும் அவர் நம்பிய உண்மையை அவரின் உண்மை நிலையில் என்றுமே மாறவில்லை என்பது தான் சிறப்பம்சமே.
அத்தகையதொரு வாழ்க்கை சரித்திரத்தை ஐந்து வருட காலமாக உயிர் மூச்சாக சுவாசித்து காதலித்து நடித்திருக்கும் மாதவன் , பஞ்சாங்கத்தின் மேன்மையை அதை பயன்படுத்தி வெற்றிக் கொண்டவர்கள் பக்கத்திலே இருந்தும் பின் வாங்கியுள்ளது ஆச்சரியபடுத்தியது. அதனாலேயே இந்த பதிவு எழுத தூண்டியது.
பஞ்சாங்கம் என்பது ஏதோ பிராமணர்கள் பூஜை செய்வதற்கும், கல்யாணம் மற்றும் வீட்டில் நடக்கும் சுப விசேஷங்களுக்கு நல்ல நேரம் பார்க்க ஒரு சம்பிரதாயமான ( போலி நாத்திகர்கள் வார்த்தையில் கூறினால் பகுத்தறிவில்லாத , விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட, மூட நம்பிக்கையின் ஊன்று கோலாக ) சடங்காக நாட்காட்டியாக பார்க்கப்படுகிறது.
ஆனால் பஞ்சாங்கம் என்பது முழுக்க முழுக்க வான வெளியில் இயங்கும் அனைத்து கோள்கள் , கிரகங்கள் இயங்கும் வேகத்தை அவைகள் பூமியின் ஏற்படுத்தும் தாக்கத்தை துல்லியமாக கணக்கிட்டு கால கணக்குகளை வருடா வருடம் தமிழ் வருடப் பிறப்பின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.
இந்த வைதிகம் எனும் கலையில் அனைத்துமே வானவியல் கணக்கின் அடிப்படையில் தான் அமைகிறது. இதில் மக்களுக்கு சந்தேகம் அல்லது அவ நம்பிக்கை வருவதே இந்த வைதிகர்கள் இந்த கிரகங்களின் நிலைபாட்டை வைத்து ஜோதிடம் என்னும் கலையில் எதிர்காலம் போன்றவற்றை கூற முற்படும் போது ஏற்படும் கணக்கும் பிழை மற்றும் ஜோசியங்கள் சொல்லுவதற்கு முன் கடைப்பிடிக்க பட வேண்டிய சில வழி முறைகளில் கடைப்பிடிக்கபடாமல் கூறுவதால் அவர்கள் கூறும் பலன்கள் சில சமயம் சொல்லிய படி நடப்பதில்லை.
எத்தனையோ விஞ்ஞான முன்னேற்றத்தில் கண்டுபித்தாக கூறப்படும் கருவிகளை கொண்டு பல முறை தவறாக மருத்துவம் பார்க்கப்பட்டு பல மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் மருத்துவர்கள் திறமை தானே தவிர மருத்துவம் எனும் விஞ்ஞானத்தின் குறையில்லை. அது போலவே முழுமையாக தன்னை தயார் படுத்திக் கொள்ளாமல் தன் மனம் போன போக்கில் சில ஜோதிடர்கள் கூறிவிடுவதால் மக்களுக்கு ஜோதிடம் மீதும் அவர்கள் பயன்படுத்தும் பஞ்சாங்கங்கள் மீதும் அவநம்பிக்கை வந்து விடுகிறது. மருத்துவம் போலவே, ஜோதிடம், வானவியல், பஞ்சாங்கம் அனைத்தும் விஞ்ஞானமே.
மிக துல்லியமாக ஜாதகத்தை பார்த்து சொல்லக் கூடிய நல்ல அனுபவ்மிக்க ஜோதிடர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு ஜாதகத்தை பார்த்தால் பல கணக்குகளை மனக் கணக்காகவும் சிலர் கைகளிலும், சிலர் எழுதியும் போட்டு பார்த்தபின்பு தான் பலன்களை கூறுவர். விரைவு உணவு உண்பவர்களுக்கு ஆரோக்கியமற்ற உணவு படைக்கும் தரம் குரைந்த சமையற் கலைஞரை போல், இந்த வேக காலத்தில் பல ஜோதிடர்கள் வேகமாக பலன் சொல்லப் போக ஜோதிடம் என்னும் விஞ்ஞான கலை மற்றும் பஞ்சாங்கங்கள் மீது பழி விழுகின்றது.
ஒரு வருடத்திற்கு முன்பே வெளியிடப்படும் பஞ்சாங்கங்களில் மிக துல்லியமாக அமாவாசை, பௌர்ணமி, போன்ற அன்றாட திதிகள் சரியாக எத்தனை நிமிடத்தில் ஆரம்பித்து எத்தனை மணி எத்தனை நிமிடத்தில் முடிகிறது என்று தெளிவாக குறிப்பு தருகிறார்கள். தினம் தினம் சூரிய உதயம் , மறைவு, நிலா ஒளி பிறப்பு மறைவு அனைத்தையும், இந்தந்த நாளில் இந்தந்த ஊரில் சந்திர, சூரிய கிரகணங்கள் பிடிக்கு எந்தெந்த ஊரில் தெரியும் என்பதை மிக துல்லியமாக கணக்கிடுகிறார்கள். இவை அனைத்துமே இயற்கையின் ஒவ்வொரு நடப்பும் ஒரு கணக்கின் படியே நடப்பதால் இதனை ஆண்டு அனுபவித்தவர்கள் தங்கள் அனுபவத்தை அழகான கணக்காக விட்டுச் சென்றுள்ளனர்.
பண்டைய தமிழர்களின் விஞ்ஞான முன்னறிவிற்கு எடுத்துக் காட்டு "சிவப்பு" நிறத்தில் இருக்கும் ஒரு கிரகத்திற்கு "செவ்வாய்" என்று பெயரிட்டு அதனை வழிபட்டு இயற்கையை போற்றி வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகிறது.
அப்போது பண்டைய தமிழர்கள் ராக்கெட் வைத்திருந்தனரா ?? செயற்கை கோள் வைத்திருந்தனரா ?? என்ற விஞ்ஞான முன்னேற்றம் அடைந்திருந்தனரா ? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் ஆதித் தமிழர்கள் மெய்ஞானம் என்னும் உள் மன விஞ்ஞானத்தில் தேர்ந்தவர்களாக இருந்ததால் இந்த பரு உடலை ஒரு கருவியாக்கி பிரபஞ்சத்தில் உள்ள பல நிகழ்வுகளை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே உள்வாங்கிக் கொள்ளும் திறன் பெற்றிருந்தனர்.
இதனையே சித்தர் பெருமக்கள் மிக எளிமையாக " அண்டமே பிண்டம் பிண்டமே அண்டம்" என்று மிக எளிமையாக விளக்கியுள்ளனர். அதாவது இந்த அண்டத்தின் அனைத்து தன்மைகளையும் இந்த பரு உடலிலும் இருக்கிறது. அதனால் இந்த பரு உடலை உள்ளுணர்வால் உணரக்கூடிய தன்மை பெற்றவர்களுக்கு இந்த பேரண்டித்தில் உள்ள அனைத்தையும் உணர முடியும்.
அதனாலேயே அன்றைய சித்தர்கள் பூத உடலால் செவ்வாய் கிரகத்திற்கு செல்லாமல் தமது சூட்சம உடல் மூலமாக செவ்வாய் கிரகத்தின் தன்மைகளை உணர்ந்து அதனை மிகத் தெளிவாக செவ்வாய் என்று கூறியதன் மூலம் உணரலாம்.
சைவ மதத்தின் நாயன்மார்களில் ஒருவரான மாணிக்க வாசக பெருமான் மிகத் தெளிவாக சிவலோகம் எனப்படும் உன்னத நிலையை அடைய தமிழ் சொற்களின் அமைப்பின் மூலமே "சிவத்தன்மையை" உணர்த்துகிறார். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் மிக எளிமையாக எது சிவம், அந்த நிலை உணர இந்த பரு உடலை எப்படி பயன்படுத்த வேண்டும், மன நிலையை எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் அனுபவித்ததையே பாடல் வடிவில் விளக்கமாக விளக்கியுள்ளனர்.
நாம் இன்றைய காலக் கட்டத்தில் மனித உடலுக்கு புறத்தில் உள்ள கருவிகளை கொண்டே இந்த கிரகங்களை அணுக முடியும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அந்த புற கருவிகளை வடிவமைப்பவர்களே விஞ்ஞானிகள் என்று வியந்து வருகிறோம். ஆனால் இந்த பரு உடலால் உணர முடியாத தன்மையிலும் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் பலவற்றை அனுபவித்து இயற்கை வழங்கியுள்ள உடலை கொண்டே உணர வழிச் சொல்லி சென்றுள்ளனர் உண்மையான விஞ்ஞானிகள் மெய்ஞானிகளே.
| ஐரோப்பிய அணு ஆராயச்சியில் நடராஜ சிலை - அணுவின் ஆட்டத்தை விளக்கும் விதமாக |
சகிருட்டிஸ்
Sakritease
July 2022
















