Search This SAKRITEASE Blog

Saturday, June 6, 2020

Drama of Kanchipuram



காஞ்சியில் கஞ்சி

கரையேறிய வேட்டிகள்
கரையில்லா காவி கொண்ட
குடந்தை குளவிளக்கு
கரைந்தும் போகுமோ என்றே
அஞ்சும் அளவிற்கு
வாயாடிகள் வலம் வந்து
அரற்றிய அண்ணனின் தம்பிகளும்

அஞ்சற்க என்று அரவணைக்க

வந்தணன் தவமுனிவன்
நச்சுபுகையாய் நாத்திகம் பரவ
நஞ்சுண்ட நமச்சிவமாய்
காமாட்சி அடி அமர்ந்து
அருளாசி வழங்கினான்

காசிற்காக விலை போன
கடைக்காரன் விற்கவும்
துணிந்தனன் நம் மரபை
வெறும் கைக்குட்சிக்கெண்டு
வறும் காலால் நடந்தே
நாற்திசையும் நன்மையளித்தே
திருத்தவே முடியாத கட்சியிலும்
திருநீரிட்டு முத்தையாவை
கண்ணனுக்கு தாசனாக்கி கவிதை
கடல் விரித்தனன்

நகரங்களிலெல்லாம் காஞ்சி 1
நிலைமாறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவோர் கூடா()
நடிப்பில் நிலைகுலைந்து நிற்க
ஏகாம்பரமே குடையாய் கொண்டு
ஏகம் அன்றி இரண்டில்லை என்ற
சங்கரனின் வாக்கையே
வாழ்ந்து காட்டினன்

காமக் களியாட்டம்
கட்சி வெறியாட்டம்
நிதிக்கு முன்னிலை
நீதிக்கு இழிநிலை
தமிழகமே தறுதலை
தருமத்திற்கு சோதனை
தலைகுனிந்து துணிவிழந்து
நினைவிழந்து போதையில்
பேதையரும் தலைவிரிக்க
ஊழலின் ஊழ்வினையால்
உரமிழந்த தென்னாட்டில்
கனறும் கனலாய்
அன்பே கலமாய்
அருட்பெரும் சுடரே
மூழ்கும் கடலிலும்
கரையேற்றும் தவமுனிவன்
தரித்த தண்டமே
தவிக்கும் மனதில்
தருவாய் படர்வாய்
தவமாய் அமர்வாய்
சந்திரசேகரா



யற்கையின் அற்புதமே
நன்மையும் தீமையையும்
ஒருசேர பிறந்திட
இப்பறமும் அப்புறமும்
முப்புறமும் எரிசெய்த

காஞ்சிபுர(ற)த்திலும்

இறைவனின் திருவிளையாட்டில்


மனிதம் உயர்ந்திட
மானுடம் தழைத்திட
நிலம் என்னும் பூதத்தில் 2
நீ நடந்ததும்
நாடகமென்று
நாளை உரைப்பாரோ

நடப்பதெல்லாம் நாடகம்
நடத்தும் இறைவனே
நடந்ததே நமச்சிவாயம்
அண்ணலும் நீயே அண்ணனும் நீயே
அம்பியும் நீயே எம்பியும் உயர
வாழும் உயிர்க்கெல்லாம்
வரமளிப்பாயே.


சகிருட்டிஸ்

விளக்கம் :
5. ஜுன்.2020 – வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் காஞ்சியில் வாழ்ந்த வாழ்விக்கின்ற மகான் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பிறந்த நாளில் அவர் எத்தகைய காலக்கட்டத்தில் அவர்களின் முன்னோர்கள் கும்பகோணத்தில் நடத்தி வந்த மடத்தினை காஞ்சிபுரத்திற்கு மாற்றினார்கள் என்று சிந்தனை ஓடியதால் எழுந்தன வரிகள்.
இயற்கை என்னும் இறைவன் எப்படி ஒரே சமயத்தில் எதிர் எதிர் திசையில் பயணிக்கும் இரு வேறு ஆற்றலை நடக்கவிட்டு நாடகமாடினான் என்று வியந்து எழுதியதே இந்த பாடல்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் மிகப் பெரிய காரணம் குடிக் கொண்டுள்ளது.  உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படியாகவே யாம் இந்த நிகழ்வுகளை பார்க்கிறோம்.  இதில் சரி தவறு என்ற நிலைபாடும் இல்லை. இயற்கையில் முரணும் ஒரு அங்கமே என்று தோன்றுகிறது.

குறிப்பு :
1. சீன யாத்திரிகர் ஹுவான் சுவாங் தான் பார்த்த இந்திய நகரங்களிலேயே காஞ்சி தான் தலை சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.  பல்லவ பேரரசின் தலை நகரமாக காஞ்சிபுரம் விளங்கியது .

2. சிவனின் பஞ்சபூத தலங்களுள் நிலத்திற்கான தலமாக போற்றப்படுகின்ற கச்சி ஏகம்பன் என்று சிவனடியாரால் அன்போடு அழைக்கப்படும் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளதை குறிப்பிட்டுள்ளோம்.




Monday, May 18, 2020

Corona kara kadavul allah


கரோனாகர கடவுளே அல்லா அல்லா
15.4 2020.     ராகம் : கர்நாடக தேவகாந்தாரி


லாஹிலாஹா இல்லல்லா
முஹம்மது ரசூலுல்லா

எல்லை இல்லா பரம் பொருள்
அல்லா அல்லா

எங்கும் நிறை பொருள் அல்லா அல்லா 



கரூரும் கராச்சியும் ஒன்றே
என்றுணர்த்திய சதாசிவனும்
அவனை போற்றும் மும்தாஜ் அலி கானும்
 1

இசையால் இணைந்திடும்
ரஹ்மானும் ராஜாவும்
ஏவுகணை ஏவிய எங்கள்
கலாமையும் இசையால்
இளக்கிய இளங்காளியே
இலாஹியே அல்லா அல்லா
 2

அன்று காந்தாரி மணந்தது
கண்ணில்லா குருடன்
இன்று அங்கிருப்பதோ
கண்ணிருக்கும் முரடன்  3

அராபிய மரங்களை வெட்டி
எண்ணையே கண்டனன்
உன்னை மட்டும் காணவில்லை
உரக்க கூவினன்


அண்டமே பிண்டமான ஆதி திருமூலமே
பிறை மட்டும் கண்டு உன்னை துதிப்போரும்
பிறையோடு கூடிய சடையனின் முழு
எழில் காண அருள்வாய் அல்லா அல்லா
 


சிலுவையில் விரிந்த சனந்தனரும்
வந்தணன் ஈசா நபியாக உன் புகழ் பரப்பவே
அந்தணன் ஓதும் வேதமெல்லாம்
உன் புகழே

வெறுப்பினால் துப்பும்
துருக்கரும் விரும்பினால்
ஒவ்வொரு உயிரிலும் உன்னையே காணும்
அறம் அருள்வாய் அல்லா அல்லா  4

யானையை அடக்கிய மனிதரை கூட
ஒடுங்க செய்ய கிருமியாய்  வந்த
கருணாகரனே
கரோனாகரனே
அல்லா  அல்லா!!! 



பாடல் விளக்கம் :
1.     1மகான் சதாசிவ பிரும்மேந்திரர் அவர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூரிலும் இன்றைய பாகிஸ்தானில் உள்ள கராச்சியிலும் சமாதி உள்ளது.  ஒரு மகானுக்கு இரண்டு இடங்களில் சமாதி உள்ளது ஒரு அதிசயம். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த மகானுக்கு இந்து மற்றும் இஸ்லாமியர் இரு மதத்தினருமே இவரை குருவாக ஏற்று வழிப்பட்டனர். இன்றும் இவரின் சமாதிக்கு சென்று ஆராதித்து வருகிறார் ஆன்மீக குரு திரு. மும்தாஜ் அலி கான் ( இவரை அவரின் சீடர்கள் மத்தியில் Sri M  என்றே அழைக்கின்றனர் )
2.     


      2. அராபிய மொழியில் இளங்காளி என்பதை இலாஹியே என்று குறிப்பிடுவதாக சில ஆன்மீக பெரியோர்கள் நம்புகிறார்கள்.
3.    
        3. மகாபாரத்தில் வரும் துரியோதனனின் தாய் காந்தாரி இன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் காந்த்ஹார் என்னும் இடம் தான் அவரின் பூர்விகம்.  அந்த நாட்டின் இளவரசியை பாண்டவர்களின் பெரியப்பா திருதராஷ்டிரன் மணந்தார். இவர் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். காந்தஹார் பல ஆண்டுகள் பிற மத சின்னங்களை அழித்த தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருந்தது.

4.     4. சைவ மதத்தினர் வணங்கும் சிவன் (தட்சிணாமூர்த்தி ) தன் சீடர்களுக்கு தெற்கு நோக்கி கல் அத்தி மரத்தின் அடி அமர்ந்து பிரம்ம தேவனின் நான்கு புதல்வர்கள் – சனாகாதி முனிவர்கள் மௌனத்தின் மூலமே ஞானம் வழங்கியவர்களில்  ஒருவர் சனந்தனர், அவரே இயேசுபிரானாக அவதரித்தார் என்பது சில ஆன்மிக குருமார்களின் கருத்து.

ளக்காடு .கிருஷ்ண .குமார் 

Translate

Contact Form

Name

Email *

Message *